சூசி பேட்ஸ்
சுசானா வில்சன் பேட்ஸ் (Suzannah Wilson Bates) 1987 செப்டம்பர் 16 அன்று (துனெடின்) நகரில் பிறந்தார். இவர் நியூசிலாந்து தேசிய மகளிர் மட்டையாட்ட அணியின் முன்னாள் தலைவராக இருந்தார். ஒட்டாகா ஸ்பார்க்ஸ் அணிக்காக மாநில அளவிலான போட்டிகளிலும், சதர்ன் வைப்பர்ஸ் மகளிர் மட்டையாட்ட போட்டிகளிலும், மற்றும் தேசிய அணிக்காகவும் விளையாடினார். தற்போது நியூசிலாந்து மகளிர் மட்டையாட்ட அணிக்கு அதிகபட்ச ஓட்டங்கள் மற்றும் மிக உயர்ந்த மட்டையாட்ட சராசரியைக் கொண்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மகளிர் சர்வதேச ஒருநாள் மட்டையாட்ட வீரர் விருதை வென்றார்.[1] 2015இல் பேட்ஸ் மீண்டும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மகளிர் ஒரு நாள் சர்வதேச போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் விருதினை வென்றார்.[2][3]
பேட்ஸ் பெர்த்தில் விளையாட்டின் போது 2016–17. | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சுசானா வில்சன் பேட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 16 செப்டம்பர் 1987 துனெடின், New Zealand | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | 4 மார்ச் 2006 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 22 பிப்ரவரி 2019 எ. [[ஆஸ்திரேலியா பெண்கள் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]] | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 23 | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் | 10 August 2007 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 10 February 2019 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2002–தற்போது வரை | ஒட்டாகா | |||||||||||||||||||||||||||||||||||||||
2015–2017 | பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
2017–தற்போது வரை | அடிலைட் ஸ்டிரைக்கர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNCricinfo, 22 February 2019 |
கூடைப்பந்து
தொகுகோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நியூசிலாந்து மகளிர் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றார்.[4] சூசி பேட்ஸ் ஆஸ்திரேலியாவின் மகளிர் கூடைப்பந்து போட்டிகளில் 2007 முதல் 2008 வரை 24 போட்டிகளில் தொழில்முறை விளையாட்டு வீரராக விளையாடினார்.[5]
மட்டையாட்டம்
தொகுநியூசிலாந்து தேசிய மகளிர் துடுப்பாட்ட அணியில் விளையாடி 2018 ஜூன் 8 அன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக 151 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் நூறு ஓட்டங்களை 10 வது தடவையாக கடந்தார்.[6] அதே போட்டியில், நியூசிலாந்து மகளிர் ஒரு நாள் மட்டையாட்ட போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக ஆனார், டெப்பி ஹாக்லே எடுத்திருந்த மொத்தம் ஓட்டங்களான 4,064 ஓட்டங்களை கடந்தார்.[7] 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இங்கிலாந்து பெண்கள் முத்தரப்பு டி20 போட்டியில் பாட்ஸ் முதல் சதத்தை அடித்தார்.[8] அதே போட்டியில் சார்லட் எட்வர்ட்சு' என்பவரது சாதனையான 2,605 ஓட்டங்களை கடந்து அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக விளங்கினார்.[9] இதே தொடரின் ஆறாவது போட்டியில் விளையாடியதற்குப் பின்னர், ஜென்னி கன் என்பவரின் சாதனைக்குப் பிறகு நூறு போட்டிகளைக் கடந்த இரண்டாவது வீரராக திகழ்கிறார்.[10]
ஆகஸ்ட் 2018, இவர் நியூசிலாந்து பெண்கள் மட்டையாட்ட அணியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்தார்.[11][12] 2018 செப்டம்பரில், நியூசிலாந்து மட்டையாட்ட நிர்வாகம் இவருக்கு பதிலாக ஆமி சாட்டர்வொயிட்டை அணித்தலைவராக நியமித்தது.[13] 2018 அக்டோபரில், மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மகளிர் உலக டி20 போட்டியில் நியூசிலாந்தின் அணியில் அவர் இடம் பெற்றார்.[14][15] இந்தப் போட்டிகளில் அனைவராலும் கவனிக்கப்படும் ஒரு வீரராக இருந்தார்.[16] இந்த போட்டிகளுக்கிடையே சர்வதேச டி 20 துடுப்பாட்டத்தில் 3000 ஓட்டங்களை கடந்த முதல் வீர்ராக இருந்தார்.[17] இப்ப்போட்டிகளில் நியூலாந்து அணியில் விளையாடிய வீரர்களில் அதிகபட்ச ஓட்டங்களை இவர் எடுத்திருந்தார். இவர் நான்கு போட்டிகளின் மூலம் 161 ஓட்டங்கள் எடுத்து இதைச் சாதித்தார்.[18] போட்டி முடிவடையும் போது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஒரு சிறந்த வீரராக அங்கீகரிக்கப்பட்டார்.[19] 2018 நவம்பரில், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் இடம் பெற்றார்.[20][21]
விருதுகள்
தொகு- பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மகளிர் துடுப்பாட்டக்காரர் விருது – 2013
- விஸ்டம் லீடிங் மகளிர் துடுப்பாட்டக்காரர் விருது – 2015[22]
- பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மகளிர் துடுப்பாட்டக்காரர் விருது – 2015
- பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மகளிர் டி20 துடுப்பாட்டக்காரர் விருது – 2015
குறிப்புகள்
தொகு- ↑ "Ashes captains Clarke and Cook both hit a ton and pick up an annual award". The Guardian. 13 December 2013. https://www.theguardian.com/sport/2013/dec/13/ashes-captains-michael-clarke-alastair-cook. பார்த்த நாள்: 13 December 2013.
- ↑ "Bates named ICC ODI and T20I Player of the Year".
- ↑ "Suzie Bates scoops ICC Women's ODI and T20I Player of the Year awards". Archived from the original on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-02-22.
- ↑ "Suzie Bates player profile". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 12 June 2009.
- ↑ http://basketball.eurobasket.com/PlayerPrintProfilePdf.asp?PlayerID=98763
- ↑ "New Zealand make the highest ODI total of all time". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
- ↑ "White Ferns smash world record total, Bates surpasses Hockley". Wisden India. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "New Zealand break WT20I record as Suzie Bates hits maiden century". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
- ↑ "New Zealand break WT20I record as Suzie Bates hits maiden century". Sun FM. Archived from the original on 20 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "'T20I cricket has changed dramatically' – Suzie Bates marks 100 appearances". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 June 2018.
- ↑ "Rachel Priest left out of New Zealand women contracts". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "Four new players included in White Ferns contract list". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "Amy Satterthwaite replaced Suzie Bates as White Ferns captain". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018.
- ↑ "New Zealand women pick spin-heavy squads for Australia T20Is, World T20". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2018.
- ↑ "White Ferns turn to spin in big summer ahead". New Zealand Cricket. Archived from the original on 18 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 September 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Players to watch in ICC Women's World T20 2018". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 November 2018.
- ↑ "Splitting Bates and Devine 'didn't quite work out'". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.
- ↑ "ICC Women's World T20, 2018/19 - New Zealand Women: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 November 2018.
- ↑ "#WT20 report card: New Zealand". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 19 November 2018.
- ↑ "WBBL04: All you need to know guide". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 30 November 2018.
- ↑ "The full squads for the WBBL". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2018.
- ↑ Nicholson, Raf. "Leading woman cricketer in the world: Suzie Bates". Wisden 2016. பார்க்கப்பட்ட நாள் August 15, 2016.
வெளி இணைப்புகள்
தொகு- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சூசி பேட்ஸ்
- Player Profile: சூசி பேட்ஸ் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து
- டுவிட்டரில் சூசி பேட்ஸ்
- இன்ஸ்ட்டாகிராமில் சூசி பேட்ஸ்