செங்குத பட்டாணிக் குருவி
செங்குத பட்டாணிக் குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெரிபரசு
|
இனம்: | பெ. ரூபிடிவென்ட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
பெரிபரசு ரூபிடிவென்ட்ரிசு (பிளைத், 1847) | |
உலகப் பரவல் நீலம்= ரூபிடிவென்ட்ரிசு மஞ்சள்= பீவானி சிவப்பு= இசுடெலரி பச்சை= சரமதி | |
வேறு பெயர்கள் | |
|
செங்குத பட்டாணிக் குருவி (பெரிபரசு ரூபிடிவென்ட்ரிசு) என்பது ஒரு ஆசியப் பாடும் பறவை சிற்றினம் ஆகும். இது பட்டாணிக்குருவி மற்றும் சிக்காடே குடும்பமான பாரிடேவினைச் சார்ந்தது. இதன் துணையினங்கள் முன்னதாக இதன் மேற்கத்திய உறவின செம்பழுப்பு மார்பு பட்டாணிக்குருவி சிற்றினத்தில் ஒதுக்கப்பட்டது (பெ. ருபிடைவெண்ட்ரிசு).
வகைப்பாட்டியல்
தொகுஇந்த பட்டாணிக்குருவி முன்பு பரசு பேரினத்தில் வைக்கப்பட்டது.[2] இதில் நான்கு துணையினங்கள் உள்ளன.
- பெரிபரசு ரூபிடிவென்ட்ரிசு ரூபிடிவென்ட்ரிசு – இமயமலை மற்றும் வடக்கு நேபாளம்
- பெரிபரசு ரூபிடிவென்ட்ரிசு பீவானி (செருடன், 1863) – பீவனின் பெம்பழுப்பு குத பட்டாணிக்குருவி – வடகிழக்கு இந்தியாவில் இமயமலையின் ஓரங்கள் மற்றும் பூட்டான்.
- பெரிபரசு ரூபிடிவென்ட்ரிசு விசுலெரி – தென்மேற்கு இமயமலையின் தெற்கு, சீனா மற்றும் அருகிலுள்ள வடக்கு மியான்மர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் சில நேரங்களில்[3]
- பெரிபரசு ரூபிடிவென்ட்ரிசு சரமதி – வடமேற்கு மியான்மர்
பரவலும் வாழிடமும்
தொகுஇந்த பட்டாணிக் குருவி மேற்கு இமயமலையினைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் பூட்டான், சீனா, பாக்கித்தான், இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளில் மிகப் பெரிய வரம்பைக் கொண்டுள்ளது. இதன் இயற்கையான வாழிடங்கள் வடபகுதி காடுகள் மற்றும் மிதவெப்ப காடுகள் ஆகும். உதாரணமாக, பூட்டானில், பெ. ரு. பீவானி ஈரமான பூட்டான் பிர் (எய்ப்ஸ் டென்சா காடுகள், சுமார் 3,000 முதல் 4,000 மீட்டர் ஏ. எஸ். எல் வரை) ஆண்டு முழுவதும் வசிக்கின்றன. இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை அச்சுறுத்தப்பட்ட இனமாகக் கருதப்படவில்லை.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Periparus rubidiventris". IUCN Red List of Threatened Species 2016: e.T22711780A94308455. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22711780A94308455.en. https://www.iucnredlist.org/species/22711780/94308455. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Gill et al. (2005)
- ↑ Bangs (1932)
- ↑ Inskipp et al. (2000), BLI (2008)
குறிப்புகள்
தொகு- Bangs, Outram (1932): Birds of western China obtained by the Kelley-Roosevelts expedition. Field Mus. Nat. Hist. Zool. Ser. 18(11): 343–379. Fulltext at the Internet Archive
- BirdLife International (2008). "Parus rubidiventris". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/147865/0. பார்த்த நாள்: 12 May 2009.
- Gill, Frank B.; Slikas, Beth & Sheldon, Frederick H. (2005): Phylogeny of titmice (Paridae): II. Species relationships based on sequences of the mitochondrial cytochrome-b gene. Auk 122(1): 121–143. DOI: 10.1642/0004-8038(2005)122[0121:POTPIS]2.0.CO;2 HTML abstract
- Inskipp, Carol; Inskipp, Tim & Sherub (2000): The ornithological importance of Thrumshingla National Park, Bhutan. Forktail 14: 147–162. PDF fulltext
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Periparus rubidiventris தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Periparus rubidiventris பற்றிய தரவுகள்