சென்னகிரி
சென்னகிரி (Channagiri) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவனகரே மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும், வட்டத் தலைமையகமும் ஆகும்.
சென்னகிரி | |
---|---|
ஆள்கூறுகள்: 14°02′N 75°56′E / 14.03°N 75.93°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மண்டலம் | அரை- மலை நாடு |
மாவட்டம் | தாவண்கரே |
அரசு | |
• வகை | constitutional |
ஏற்றம் | 662 m (2,172 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,85,170 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 577213 |
தொலைபேசி குறியீடு | 08189 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | கேஏ-17 |
இணையதளம் | karnataka |
சொற்பிறப்பியல்
தொகுமேலைக் கங்கர்களில் ஆட்சியில் இப்பகுதி 'அசந்திநாடு' என்று அழைக்கப்பட்டது. பின்னர் கல்யாணி சாளுக்கியரின் ஆட்சியின் கீழ் உச்சாங்கி பாண்டியர்களால் ஆளப்பட்டது. பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் கேளடி நாயக்க இராச்சியத்தின் கைகளில் சென்றது. கேளடியின் ராணி சென்னம்மா (1672-1697), கேளடி நாயக்க இராச்சியத்தின் ராணியாக இருந்ததால் இந்த நகரத்திற்கு அவரது பெயரிடப்பட்டது என்று கூறப்படுகிறது. [1]
நிலவியல்
தொகுசென்னகிரி 14.03 ° வடக்கிலும் 75.93 ° கிழக்கிலும் அமைந்துள்ளது [2] இதன் சராசரி உயரம் 662 மீட்டர் (2171 அடி) ஆகும்.
புள்ளிவிவரங்கள்
தொகு2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சென்னகிரியின் மக்கள் தொகை 18,517 என்ற அளவில் இருக்கிறது. ஆண் மக்கள் தொகையில் 52%, பெண்கள் 48% ஆகும். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 71% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்; ஆண் கல்வியறிவு 74% மற்றும் பெண் கல்வியறிவு 67%. மக்கள் தொகையில் 13% 6 வயதுக்குட்பட்டவர்கள்..[3]
மலைக் கோட்டை
தொகுஇங்கு ஒரு மலைக் கோட்டை உள்ளது, இது 1770 ஆம் ஆண்டில் ஒரு இரங்கநாதர் ஆலயத்துடன் கட்டப்பட்டுள்ளாது. இது நகரின் மேற்கே சுமார் 200 அடி உயரத்தில் உயர்ந்துள்ளது. இது பூமியால் மூடப்பட்ட ஒரு மென்மையான இருளைக் கொண்டுள்ளது. இது ஒரு பரந்த சமவெளியைக் கொண்டுள்ளது. இந்த கோட்டை இரண்டு இடிந்த சுவர்களைக் கொண்டுள்ள. இது அகழிகளால் பாதுகாக்கப்படுகிறது. பிரதான வாயில் வடக்கே சாய்வு மிகக் குறைவாக உள்ளது. [4]
மலையுச்சியில் இருக்கும் இரங்கநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் பெத்த-ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு விஷ்ணு தனது முன் கைகளில் சக்கரத்தையும் சங்கையும் தனது பின் கைகளிலும், அம்புகளையும் வத்துள்ளார். இங்கு ஒரு சிறிய கருடன் பீடம் ஒன்றுள்ளது. மேலும் விஷ்ணுவின் இரண்டு பக்கத்திலும் இரு துணைவியர் அமர்ந்துள்ளனர். [5]
இதன் தென்மேற்கில் புத்தப்பாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி உள்ளது. அதில் ஒரு கடவுளின் தலையைக் கொண்டுள்ளது. அதன் நாக்கு அவரது வாயிலிருந்து வெளியேறுகிறது. [6]
போக்குவரத்து
தொகுதேசிய நெடுஞ்சாலை 369 சென்னகிரி வழியாக செல்கிறது. இது சித்ரதுர்கா மற்றும் சிவமோகா இடையே இணைகிறது. [7]
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஒரு இராணுவ சிப்பாயும், சாகசக்காரரும் கொள்ளைக்காரருமான தொண்டியா வா என்பவர் சென்னகிரியில் பிறந்தார்
- ஜே. ஹெச். படேல், கர்நாடக முன்னாள் முதல்வர்.
- கன்னட மொழிக் கவிஞரும், நாடக ஆசிரியருமான எச்.எஸ்.வெங்கடேசமூர்த்தி இங்கு பிறந்தவர்.
- கன்னட எழுத்தாளரும், ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான எம். சித்தானந்த மூர்த்தி இங்கு பிறந்தார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Annual Report of the Mysore Archaeological department for the year 1937 பரணிடப்பட்டது 6 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம் Archaeological Survey of India, Government Of India
- ↑ Falling Rain Genomics, Inc - Channagiri
- ↑ Census 2011 Official website of Office of The Registrar General & Census
- ↑ Annual Report of the Mysore Archaeological department for the year 1937 பரணிடப்பட்டது 6 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம் Archaeological Survey of India, Government Of India
- ↑ Annual Report of the Mysore Archaeological department for the year 1937 பரணிடப்பட்டது 6 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம் Archaeological Survey of India, Government Of India
- ↑ Annual Report of the Mysore Archaeological department for the year 1937 பரணிடப்பட்டது 6 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம் Archaeological Survey of India, Government Of India
- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.