செம்பன் வினோத் ஜோஸ்

இந்திய திரைப்பட தயாரிப்பாளர்

செம்பன் வினோத் ஜோஸ் ஒரு இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் முக்கியமாக மலையாள படங்களில் பணிபுரிகிறார்.

செம்பன் வினோத் ஜோஸ்
ஒரு நிகழ்வில்
பிறப்புஇந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது
வாழ்க்கைத்
துணை
சுனிதா (2010-2019)
மரியம் தாமஸ் (2020-தற்போத)[1]
பிள்ளைகள்1

இவர் பிசியோதெரபிஸ்ட் தொழில் செய்பவர்.[2] மலையாள திரைத்துறையில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றி வெற்றிகரமான குணச்சித்திர நடிகராக உள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில். ஆமென் (2013), டமார் படார் (2014), சப்தமஸ்ரீ தஸ்கராஹா (2014), ஐயோபின்டே புஸ்தகம் (2014), கோஹினூர் (2015) மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு யாத்ரா (2015), சுருளி (2021) ஆகியவை அவரது நடிப்பிற்காக மிகவும் பிரபலமானவை.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் (2022 திரைப்படம்) இல் வில்லனாக நடித்துள்ளார்.

தொழில்

தொகு

செம்பன் வினோத் ஜோஸ் 2010 ஆம் ஆண்டு மலையாளத் திரைத்துறையில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் குற்றவியல் படமான நாயகன் (2010) மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் ஏற்று நடித்த சரவணன் கதாப்பாத்திரம் கனிசமான புகழ் தந்தது.

2017 இல், அவர் தனது திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார், குற்ற நாடகமான அங்கமாலி டைரீஸ், அந்த ஆண்டு மலையாளத்தில் ஒரு பெரிய விமர்சன மற்றும் வணிக வெற்றி. அடுத்த ஆண்டில், சுதந்திரம் அர்த்தராத்திரியில் என்ற திரில்லரைத் தயாரித்தார். 2018 ஆம் ஆண்டில், ஈ.மா.யௌ திரைப்படத்தில் அவர் நடித்ததற்காக 49வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

2018 இல் விஜய் மில்டன் இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும், பாரத் சீனி தயாரிப்பில் உருவான தமிழ்த்திரைப்படம் கோலிசோடா 2 மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 2022 இல் லோகேஷ் கனகராஜ் எழுதிய இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் ஜோஸ் என்ற எதிர்நாயகனாக நடித்து புகழ் பெற்றார்.

விருதுகள்

தொகு
  • சிறந்த துணை நடிகருக்கான வனிதா திரைப்பட விருதுகள் 2016
  • வனிதா திரைப்படம் 2017 சிறந்த வில்லன் விருதுகள்
  • நெகட்டிவ் ரோலில் மலையாளத்தில் சிறந்த நடிகருக்கான 6வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்
  • சிறந்த துணை நடிகருக்கான 5வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மலையாளம்
  • 49வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2018 - IFFI சிறந்த நடிகர் விருது (ஆண்)

திரைப்படவியல்

தொகு

நடிகராக

தொகு
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள்
2010 நாயகன் (2010 திரைப்படம்) சரவணன்
2011 சிட்டி ஆப் காட் அனி
பாம்பே மார்ச் 12 ஃபிரோஸ்
கலெக்டர் வெடிகுண்டு பரிசோதனை படை
2012 பிரைடே படகு டிரைவர் தேவஸ்ஸி
2013 கிளி போயி கடத்தல்காரன்
ஆர்டினெரி இன்ஸ்பெக்டர் பென்னி இடிகுலா
ஆமென் பைலக்குட்டி
5 சுந்தரிகள் ஜோசி Segment: அமி
காஞ்சி வாசு
காதல் கடன்னு ஒரு மாத்துக்குட்டி சமீர்
நார்த் 24 காதம் முஸ்தபா
கூட்டத்தில் ஓரல் வேலு
2014 ஹேப்பி ஜர்ணி அம்பி
மசாலா ரீபப்ளிக் பெரும்பாவூர் அஜயன்
வாயை மூடி பேசவும் சால்சா குட்டன்
சம்சாரம் ஆரோக்யதினு ஹாநிகாரம் சால்சா குட்டன்
டமார் படார் டியூப் லைட் மணி
சப்தமஸ்ரீ தஸ்கராஹா மார்ட்டின்
இயோபின்றெ புஸ்தகம் டிமிட்ரி
2015 ஆடு ஒரு பீகரா ஜீவியனு ஹைரேஞ்ச் ஹக்கேம்
ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா மாறன்
ஓனம் லோக மகாயுதம் அல்தாஃப்
சந்திரேட்டன் எவிடேயா ஜனன்
Nee-Na கரி ஆயில்
டபுள் பேரல் டீசல்
உரும்புகள் உறங்கரில்லா பென்னி
கோகினூர் நிக்கோலஸ்
லார்ட் லிவிங்ஸ்டோன் 7000 கண்டி பேராசிரியர் ந.நீலகண்டன்
சார்லி மத்தாய் / பத்ரோஸ்
2016 பாவடா Fr. கட்டிப்பரம்பன்
டார்வின்டே பரிணாமம் டார்வின்
கலி சக்கரா
சிகாமணி சிகாமணி
ஒப்பம் ஆனந்தன் ஆர், சிஐ
ஒரே முகம் ஏசிபி அசோக் சந்திரா ஐபிஎஸ்
2017 அங்கமாலி டைரிஸ் அவராகவே திரைக்கதை எழுத்தாளர்
ஜார்ஜட்டனின் பூரம் பீட்டர் மாத்தாய்
வர்ணத்தில் அசங்க வில்சன்
திருசிவபேரூர் கிளிப்தம் டேவிட் பாலி
வெளிப்படிந்தே புஸ்தகம் காக்கா ரமேஷன்
2018 சுதந்திரம் அர்த்தராத்திரியில் தேவஸ்ஸி
ஈ.ம.யா ஈஷி
மரடோனா மார்ட்டின்
கோலிசோடா 2 (துறைமுகம்) தில்லை தமிழ்த் திரைப்படம்
டாகினி மாயன்
2019 பொரிஞ்சு மரியம் ஜோஸ் புத்தன்பள்ளி ஜோஸ்
ஜல்லிக்கட்டு வர்கி
பூழிக்கடகன் சாமுவேல்
2020 <i id="mwAX8">டிரான்ஸ்</i> ஐசக் தாமஸ்
2021 சுருளி ஆண்டனி
பீமன்டே வாழி மகரிஷி
அஜகஜந்தாரம் அலியான்
2022 விக்ரம் ஜோஸ் தமிழ்த் திரைப்படம்
பத்தொம்பதாம் நூற்றாண்டு Upcoming
அன்லாக் Upcoming
இடி மழை காற்று படபிடிப்பில்

ஸ்கிரிப்ட் ரைட்டராக

தொகு
ஆண்டு தலைப்பு இயக்குநர்
2017 அங்கமாலி டைரிஸ் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
2021 பீமன்டே வாழி [3] அஷ்ரப் ஹம்சா
ஆண்டு தலைப்பு இயக்குநர் குறிப்புகள்
2018 சுதந்திரம் அர்த்தராத்திரியில் டினு பாப்பச்சன் பிசி ஜோஷி மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளனர்
2019 தமாஷா அஷ்ரப் ஹம்சா சமீர் தாஹிர், ஷைஜு காலித் மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகியோருடன் இணைந்து தயாரித்தனர்
2019 ஜல்லிக்கட்டு லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஓ.தாமஸ் பணிக்கர் மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளனர்
2021 சுருளி லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஓ.தாமஸ் பணிக்கர் மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி [4] ஆகியோருடன் இணைந்து தயாரித்தார்.
2021 பீமன்டே வாழி [3] அஷ்ரப் ஹம்சா ஆஷிக் அபு மற்றும் ரீமா கல்லிங்கல் இணைந்து தயாரித்துள்ளனர்

குறிப்புகள்

தொகு
  1. "Malayalam actor Chemban Vinod Jose ties the knot amid lockdown".
  2. [1] பரணிடப்பட்டது 2014-11-04 at the வந்தவழி இயந்திரம் Mathrubhumi Show Guru Video
  3. 3.0 3.1 "ഭീമന്റെ വഴിയില്‍ കുഞ്ചാക്കോ ബോബന്‍, കൗതുകമുണര്‍ത്തുന്ന ഫസ്റ്റ് ലുക്ക്".
  4. "Watch: Lijo Jose Pellissery's 'Churuli' trailer promises another dark film". தி நியூஸ் மினிட். 1 July 2020. https://www.thenewsminute.com/article/watch-lijo-jose-pellissery-s-churuli-trailer-promises-another-dark-film-127747. பார்த்த நாள்: 1 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பன்_வினோத்_ஜோஸ்&oldid=4167439" இலிருந்து மீள்விக்கப்பட்டது