விக்ரம் (2022 திரைப்படம்)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விக்ரம் (Vikram) என்பது 2022-இல் வெளியான இந்திய தமிழ் -மொழி பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படமாகும். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரித்துள்ளது.[1] இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி , பகத் பாசில் [2] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஷிவானி நாராயணன்,[3] காளிதாஸ் ஜெயராம்,[4] நரேன், ஆண்டனி வர்கீஸ் , அர்ஜூன் தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும், ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரனும், படத் தொகுப்பை பிலோமின் ராஜும் மேற்கொண்டுள்ளனர். 1986இல் வெளியான விக்ரம் திரைப்படத்தின் கருத்திசை பாடலின் மறுஆக்கம் செய்யப்பட்ட பதிப்புடன் படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தில் (2020 நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது) பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இத்திரைப்படம் இதே பெயரிலான 1986 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்தின் தொடர்ச்சி அல்ல.[5]

விக்ரம்
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்லோகேஷ் கனகராஜ்
தயாரிப்புகமல்ஹாசன்
ஆர். மகேந்திரன்
கதைலோகேஷ் கனகராஜ்
ரத்ன குமார்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுகிரீஷ் கங்காதரன்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைக்களம்

தொகு

காவலாய்வாளர் பிஜாய் மூலம் அடைக்கலம் மற்றும் அன்பு ஆகியோரின் சட்டவிரோத சரக்கு இடமாற்றத்தை முறியடித்த பிறகுள்ள நிகழ்வுகளைத் தொடர்ந்து, பிளாக்-ஆப்ஸ் அணியின் தலையான அமர், ஸ்டீபன் ராஜ் (அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து), ஏசிபி பிரபஞ்சன் மற்றும் அவரது வளர்ப்புத் தந்தை கர்ணன் ஆகியோரைக் கொன்ற அதிகாரமின்றிச் சட்டத்தைக் கையில் எடுக்கும் முகமூடி குழுவிற்கு நீதி வழங்குவதற்காக, முதன்மைக் காவலர் ஜோசால் அழைக்கப்பட்டார். கர்ணன் ஒரு சாதாரண மனிதனாகவும், மற்ற இருவரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் உயர் அதிகாரிகளாகவும் இருந்ததால், கொலைக்குச் சம்பந்தமில்லாத கர்ணனின் வாழ்க்கையைத் தோண்டியெடுத்து, விசாரணையை அமர் வழிநடத்துகிறார். கர்ணனின் கடந்த காலத்தை குடிகாரன், போதைக்கு அடிமையானவன், பெண்பித்தன் என்பதையும், ஆனால் அவனது தத்தெடுக்கப்பட்ட கைக்குழந்தைப் பேரனிடம் மிக நெருக்கமாக இருக்கிறான் என்பதையும் அறிந்து கொள்கிறார். விசாரணையின் போது, ​​ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த, வெட்டி வகையறா என்ற குற்றக்கூட்டமைப்பை நடத்தும் சந்தனத்திற்குத் தேவையான தொலைந்த கொள்கலன்களைப் பற்றி அமர் அறிந்து கொள்கிறார். சந்தனம் போதைப்பொருட்களை யாருக்கும் அடையாலம் தெரியாத ரோலக்ஸ் என்ற தனது கல்நெஞ்சு கொண்ட கள்ளக்கடத்தல் முதலாளியிடம் ஒப்படைக்க விரும்புகிறார். மருந்துகள் ஒப்படைக்கப்பட்டால், சந்தானம் தனது சொந்த அரசாங்கத்தை அமைக்க ரோலக்ஸ் உதவுவார்.

இதற்கிடையில், வெட்டி வகையறாவின் கும்பலைச் சேர்ந்த வீரபாண்டியன், ஒரு சூதாட்ட அரங்கில் மற்ற கும்பல்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்கிகிறார். அங்கு அவர் ருத்ர பிரதாப் என்ற மற்றொரு கும்பலுடன் சேர்ந்து போதைப்பொருள் கொள்கலன்களின் இருப்பிடத்தை அறிந்திருப்பதை வெளிப்படுத்துகிறார். ஏனெனில் அவர்கள் ரோலக்ஸுக்கு கொள்கலன்களைச் சந்தனத்தைத் தவிர்த்து கொண்டுவரவேண்டும். இருப்பினும், முகமூடி நபர்கள் வந்து வீரபாண்டியனைக் கொன்றனர். கர்ணனின் வீட்டில் கிடைத்த சில்லு மூலம் முகமூடி நபர்களின் இலக்கு வீரபாண்டியன் என்பதை அறிந்ததும், அமர் அவர்களைத் துரத்திச் சென்று முக்கிய தலைவரைப் பிடிக்கிறார். அது பிஜாய் என்று தெரியவருகிறது. அமர் பிஜாயை விசாரிக்கிறார். அங்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் போதைப்பொருள் அனுப்புச்சரக்குகளை உடைத்த பிறகு பிஜாயின் குடும்பத்தை கொன்றதாக அவர் அவர்களிடம் கூறுகிறார். ருத்ர பிரதாப்பும் உறுப்பினர்களின் இலக்கு என்பதை உணர்ந்த அமர், தனது குழுவினருடன் ருத்ர பிரதாப் மகளின் திருமண விழாவிற்குள் நுழைந்தார், அங்கு ருத்ர பிரதாப் சந்தனத்தையும் அழைத்துள்ளார்.

முகமூடியினர்கள், தங்கள் தலைவருடன் ருத்ர பிரதாப்பின் மகளின் திருமணத்திற்கு வருகிறார்கள். அங்கு ருத்ர பிரதாப்பின் மகளை கத்தி முனையில் பிடித்து, ருத்ர பிரதாப்பை இழுத்துக்கொண்டு, திருமணத்திலிருந்து தப்பிக்கிறார் தலைவர். சந்தனத்தை சமாளிக்க அவர் தனது உறுப்பினர்கள் சிலரை விட்டுச் செல்கிகிறார். ஆனால் சந்தனம் அவர்கள் அனைவரையும் தோற்கடிக்கிறார். முகமூடியினர்களை அமர் துரத்தும்போது தலைவரை எதிர்கொள்கிறார். அவர் சந்தனத்திற்கு காணொளி அழைப்பு செய்து, மரணத்தை பொய்யாக்கி உண்மையில் உயிருடன் இருக்கும் கர்ணன் என்று தன்னை வெளிப்படுத்துகிறார். ருத்ர பிரதாப்பைக் கொன்றுவிட்டு காவலர்களிடமிருந்து தப்பிக்கிறார் கர்ணன். கர்ணன் உண்மையில் தனது குழுவுடன் சேர்ந்து ஒரு தவறான பணிக்குப் பிறகு கலைக்கப்பட்டு பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் RAW அதிகாரி அருண் குமார் விக்ரம் என்கிற விக்ரம் என்று அமர் அறிந்துகொள்கிறார். ஆனால், விக்ரமைத் தவிர, விக்ரமின் குழுவினர்கள் எவரும் தற்போது உயிருடன் இல்லை. அமர் ஜோஸைச் சந்தித்து, ஜோஸ் என்பவரே தான் துறையிலுள்ள சந்தனத்தின் மச்சம் என்பதை வெளிப்படுத்துகிறார்.

ஜோஸுடன் சந்தனத்தின் ஈடுபாட்டை பிரபஞ்சன் அறிந்ததால் ஜோஸின் உதவியோடு பிரபஞ்சனைக் கொன்றது சந்தனமே என்பது தெரியவந்தது. சந்தனத்தின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க அமர் திட்டமிடுகிறார். அது அவரது மருந்து ஆய்வகம் மற்றும் பிற பொருட்களை அழிக்கிறது. இருப்பினும், சந்தனமும் அவரது குடும்பத்தினருடன் தப்பிக்கிறார். விக்ரமின் அடையாளத்தை சந்தனத்திடம் ஜோஸ் வெளிப்படுத்துகிறார். பின்னர், விக்ரம் சிறைக்கு வந்து பிஜாய் மற்றும் அவரது குழுவினரை விடுவிக்கிறார். சந்தனம் அமரின் காதலி காயத்திரியைக் கொன்று, விக்ரமின் மருமகள் மற்றும் பேரனைத் தாக்குகிறார். ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் விக்ரம் வந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். காயத்ரியின் மரணத்தில் மனமுடைந்த அமர், சந்தனத்தையும் அவரது குற்றங்களையும் முறியடிக்க விக்ரமின் கும்பலுடன் இணைகிறார். காயத்ரியின் கொலையில் ஜோஸுக்குத் தொடர்பு இருப்பதை அறிந்த அவர் ஜோஸின் வீட்டிற்குச் சென்று அவரையும் கொள்கிறார். விக்ரமின் பழிவாங்கலுக்குக் காரணம், போதைப்பொருள் கும்பலை முறியடிக்கும் நோக்கம் என்றும், பிரபஞ்சன் என்பவர் விக்ரமின் வளர்ப்பு மகன் என்பதும் தெரியவந்தது. பின்னர், கொள்கலன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சென்னை துறைமுகத்தை அடைகிறார் விக்ரம். இருப்பினும், சந்தனம் கொள்கலன்களின் மறைவிடத்தைப் பற்றி அறிந்து விக்ரமைத் தாக்குகிறார். விக்ரம் சந்தனத்தின் ஆட்களை ஒரு பீரங்கி மற்றும் டிஎஸ்ஹெச்கே மூலம் சுட்டு, சந்தனத்தை தனது குழுவினரின் உதவியுடன் கொன்றார். கூட்டமைப்பு அழிக்கப்பட்டதுடன் காயத்ரியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் அமர், விக்ரமின் பணியைத் தொடர முகமூடியை அணிந்து, பிஜாய் உடன் அவரது அணியில் சேர்கிறார்.

மிட் கிரெடிட்ஸ் காட்சியில், மும்பையில் உள்ள சாசூன் டாக்சில், அன்பு (உண்மையில் உயிருடன் இருக்கிறார்) மற்றும் அடைக்கலம், சந்தானத்துடன் தொடர்புடைய கும்பலினர்களுடன் சேர்ந்து, அவர்களின் முதலாளி ரோலக்சுடன் ஒரு சந்திப்பை நடத்துகிறார்கள். அடைக்கலம் மற்றும் அன்பு அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் டில்லியின் ஈடுபாட்டையும், சந்தானத்தின் ஆட்கள் போதைப்பொருள் கூட்டமைப்பை அழிப்பதில் விக்ரம் மற்றும் அமரின் ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறார்கள். டில்லி மற்றும் விக்ரம் குழுவினரின் மரணதண்டனைக்கு ரோலக்ஸ் ஒரு பெருந்தொகையை வெகுமதியாக அறிவிக்கிறார். டில்லி உத்தரப் பிரதேசத்தில் இருப்பதையும் விக்ரமின் குடும்பம் சான் பிரான்சிஸ்கோவில் இருப்பதையும் வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும், ரோலக்ஸ் மற்றும் கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் தெரியாமல், கும்பலினர்களுக்கு மத்தியில் விக்ரம் ஒளிந்து கொண்டிருந்து அவரது குழுவினர் மற்றும் டில்லிக்கு வழங்கப்பட்ட வெகுமதியைப் பற்றி அறிந்து கொள்கிறார். ரோலக்ஸ் மற்றும் அனைவரையும் கூட்டத்திலிருந்து முடிக்க அவர் தயாராக இருக்கிறார். விக்ரம் 2 படத்தின் தொடர்ச்சி அறிவிப்புடன் படம் முடிகிறது.

நடிப்பு

தொகு
  • கமல்ஹாசன் - வியவர் அருண் குமார் விக்ரம், ஒளிவுமறைவாக கர்ணன்
  • விஜய் சேதுபதி - சந்தனம்
  • பஹத் பாசில் - முகவர் அமர்
  • நரேன் - காவலாய்வாளர் பிஜாய்
  • காளிதாஸ் ஜெயராம் - விக்ரமின் மகன், உதவிக்காவலாணயர் பிரபஞ்சன்
  • செம்பன் வினோத் ஜோஸ் - முதன்மைக் காவலர் ஜோஸ்
  • சந்தான பாரதி - முகவர் உப்பிலியப்பன்
  • இளங்கோ குமரவேல் - முகவர் லாரன்ஸ்
  • வசந்தி - முகவர் டீனா
  • காயத்ரி சங்கர் - காயத்ரி அமர்
  • ஸ்வதிஷ்ட்டா கிருஷ்ணன் - பிரபஞ்சனின் மனைவி
  • ஜி. மாரிமுத்து - காவலாணையர்
  • ரமேஷ் திலக் - வெட்டி வகையறா உறுப்பினர் இளங்கோ
  • வினோத் - வெட்டி வகையறா உறுப்பினர் முன்னா
  • அருள்தாஸ் - ருத்ர பிரதாப்
  • கௌத்தம் சுந்தரராஜன் - வீரபாண்டியன்
  • சம்பத் ராம் - வெட்டி வகையறா உறுப்பினர்
  • கோகுல்நாத் - வெட்டி வகையறா உறுப்பினர்
  • ஶ்ரீகுமார் - கருப்புப் படை உறுப்பினர்
  • அருணோதயன் - கருப்புப் படை உறுப்பினர்
  • அனிஷ் பத்மனாபன் - கருப்பு ஓப்ஸ் படை உறுப்பினர்
  • ஜாஃபர் சாதிக் - வெட்டி வகையறா உறுப்பினர்
  • மகேஸ்வரி - சந்தனத்தின் முதல் மனைவி
  • ஷிவானி நாராயணன் - சந்தனத்தின் இரண்டாம் மனைவி
  • மைனா நந்தினி - சந்தனத்தின் மூன்றாம் மனைவி
  • சூர்யா - ரோலக்ஸ்
  • வில்லேஜ் குக்கிங் சேனல் அணியினர் - அவர்களாகவே (கௌரவத் தோற்றம்)

திரைப்படத்தின் ஒலிச்சுவடு மற்றும் பின்னணி மதிப்பெண் அனிருத் ரவிச்சந்தரால் இசையமைக்கப்பட்டது. இது லோக்கேஷ் கனகராஜுடனான மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனுடனான இந்தியன் 2விற்குப் பிறகு அவர்களுடனான இரண்டாவது கூட்டுப்பணியாக அமைகிறது. இசை உரிமைகளை சோனி மியூசிக் இந்தியா வாங்கியது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 15 மே, 2022 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஒலிப்பதிவு

தொகு

படத்தின் ஒலிச்சுவடு பின்னணி இசை ஆகியவற்றிற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.[5]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பத்தல பத்தல"  கமல்ஹாசன், அனிருத் ரவிச்சந்தர் 3:31
2. "Vikram Title Track"  அனிருத் ரவிச்சந்தர் 3:36
3. "Wasted"  அனிருத் ரவிச்சந்தர் 3:03
4. "போர்கண்ட சிங்கம்"  ரவி G 3:18
5. "Once Upon A Time"  அனிருத் ரவிச்சந்தர் 2:24
மொத்த நீளம்:
15:52

வெளியீடு

தொகு

லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின் கதை காரணமாக இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.[6] இரண்டு பாகங்களில் முதல் பாகம் 2022இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[7] இந்த படத்தின் இந்தி மொழி மொழிமாற்றம் உரிமை கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸுக்கு ரூ.37 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.[8] பல திரைப்பட வர்த்தக நிபுணர்கள் இந்த திரைப்படத்தை "அதிக தொகையில் வர்த்தகம் செய்யப்பட்ட திரைப்படங்களில் ஒன்று" என்று கூறினர்.[9]

பின்தொடர்ச்சி

தொகு

பிங்க்வில்லாவுடனான நேர்காணலில் கமல்ஹாசன் திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு லோக்கேஷ் திரையுலக அண்டத்தின் பகுதியாக இருக்கும் விக்ரமின் பின்தொடர்ச்சிக்கானச் சாத்தியக்கூறை வலியுறுத்தினார்.[10][11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kaithi director Lokesh Kanagaraj to team up with Kamal Haasan". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-11-05. பார்க்கப்பட்ட நாள் 2020-11-21.
  2. "Fahadh Faasil confirms being part of Kamal Haasan-Lokesh Kanagaraj's Vikram". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-08.
  3. "Shivani to play Vijay Sethupathi's pair in Vikram?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 July 2021. பார்க்கப்பட்ட நாள் 24 August 2021.
  4. "Kalidas Jayaram confirms being a part of Vikram, shares pic with Kamal Haasan". India Today. 31 July 2021. பார்க்கப்பட்ட நாள் 15 August 2021.
  5. 5.0 5.1 "'Vikram' first-look poster features Kamal Haasan, Vijay Sethupathi, Fahadh Faasil". The NEWS Minute. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Lokesh plans a perfect treat for fans in Vikram - Know what- News". IndiaGlitz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.
  7. "Lokesh Kanagaraj plans a secret for Kamal Haasan's 'Vikram' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.
  8. "Kamal Haasan's 'Vikram' is hot in the trade!". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.
  9. "சாதனை விலைக்கு விற்கப்பட்ட விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை!". News18 Tamil (in Tamil). 31 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "EXCLUSIVE: Vikram 2 'already' on the cards? Kamal Haasan clears the air on the sequel". PINKVILLA (in ஆங்கிலம்). 2022-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  11. "Vikram: Two sequels of Kamal Haasan starrer in works? Here's what we know about Vikram 2 & Vikram 3". Bollywood Life (in ஆங்கிலம்). 2022-06-08. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  12. "EXCLUSIVE: Vijay to play a gangster in his 40s in Lokesh Kanagaraj's next; Might enter LCU with Kamal Haasan". PINKVILLA (in ஆங்கிலம்). 2022-06-18. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_(2022_திரைப்படம்)&oldid=4167687" இலிருந்து மீள்விக்கப்பட்டது