செரிக்கின்
செரிக்கின் (மலாய் மொழி: Bandar Serikin; ஆங்கிலம்: Serikin Town; சீனம்: 西里京) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு, கூச்சிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; மற்றும் வார இறுதிச் சந்தைக்கு (Serikin Weekend Market) நன்கு அறியப்பட்ட நகரமாகவும் விளங்குகிறது.
செரிக்கின் நகரம் Serikin Town Bandar Serikin | |
---|---|
ஆள்கூறுகள்: 1°20′0″N 110°00′0″E / 1.33333°N 110.00000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | கூச்சிங் பிரிவு |
மாவட்டம் | கூச்சிங் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 94000[1] |
இந்தோனேசியா-மலேசியா எல்லையில் (Indonesia–Malaysia Border) அமைந்துள்ள இந்த நகரம்; பாவு நகரத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலும்; கூச்சிங் நகரத்தில் இருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது. உள்ளூர்வாசிகளால் கம்பங் சாகோய் செரிக்கின் (Kampung Jagoi Serikin) என்றும் செரிக்கின் நகரம் அழைக்கப்படுகிறது.
பொது
தொகுசெரிக்கின் நகரம், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் வார இறுதிச் சந்தைக்கு நன்கு அறியப்பட்ட நகரமாக விளங்குகிறது. ஒவ்வொரு சனி; ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடைபெறும் இந்தச் சந்தையானது, இந்தோனேசியாவில் இருந்து வரும் விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்க பலரையும் ஈர்க்கிறது.
செரிக்கின் வார இறுதி சந்தை 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3][4] இந்த நகரத்திற்கு அருகில் கங்காங் அருவி (Kangang Waterfall); மற்றும் துபோ அருவி (Tuboh Waterfall) என இரண்டு அருவிகள் உள்ளன.
காலநிலை
தொகுசெரிக்கின் நகரம் ஒரு வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவைக் காண்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், செரிக்கின் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.3 (84.7) |
29.5 (85.1) |
30.5 (86.9) |
31.3 (88.3) |
31.7 (89.1) |
31.4 (88.5) |
31.4 (88.5) |
31.2 (88.2) |
31.0 (87.8) |
31.0 (87.8) |
30.7 (87.3) |
30.1 (86.2) |
30.76 (87.37) |
தினசரி சராசரி °C (°F) | 25.7 (78.3) |
25.8 (78.4) |
26.4 (79.5) |
26.9 (80.4) |
27.1 (80.8) |
26.9 (80.4) |
26.8 (80.2) |
26.6 (79.9) |
26.6 (79.9) |
26.6 (79.9) |
26.4 (79.5) |
26.1 (79) |
26.49 (79.69) |
தாழ் சராசரி °C (°F) | 22.1 (71.8) |
22.1 (71.8) |
22.3 (72.1) |
22.5 (72.5) |
22.6 (72.7) |
22.4 (72.3) |
22.2 (72) |
22.1 (71.8) |
22.2 (72) |
22.3 (72.1) |
22.2 (72) |
22.2 (72) |
22.27 (72.08) |
மழைப்பொழிவுmm (inches) | 541 (21.3) |
512 (20.16) |
323 (12.72) |
287 (11.3) |
227 (8.94) |
171 (6.73) |
174 (6.85) |
219 (8.62) |
242 (9.53) |
306 (12.05) |
329 (12.95) |
444 (17.48) |
3,775 (148.62) |
ஆதாரம்: Climate-Data.org[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kampung Serikin, Bau - Postcode - 94000 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ "Serikin weekend market - Sarawak most popular border weekend market.". Sarawak Vacation Destinations இம் மூலத்தில் இருந்து 2017-03-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170315102408/http://www.sarawak-vacation-destinations.com/serikin-weekend-market.html.
- ↑ "Pasar Serikin is a shopping paradise for tourists who come to Kuching, Sarawak". Pasar Serikin Sarawak. 8 February 2023. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ "Serikin Weekend Street Market". Tripadvisor. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ "Climate: Serikin". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.