செருகரை
செருகரை (Cherukara) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இதன் அருகிலுள்ள நகரம் பெரிந்தல்மண்ணை ஆகும். இது இது சுமார் 6 கிலோமீட்டர்கள் (3.7 mi) தொலைவில் உள்ளது.
செருகரை | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°55′54″N 76°13′35″E / 10.9316900°N 76.226357°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• நிர்வாகம் | ஏலம்குளம் கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679340 |
தொலைபேசி குறியீடு | +914933 |
வாகனப் பதிவு | KL-53 |
மக்களவைத் தொகுதி | மலப்புறம் மக்களவைத் தொகுதி |
போக்குவரத்து
தொகுஇந்த கிராமத்தை உள்ளூர் பேருந்துகள் மற்றும் வாடகை ஊர்திகள் மூலம் அணுகலாம். ஷொர்ணூர் - நிலம்பூர் தொடருந்து பாதை இந்த பகுதியில் சேவையில் உள்ளது.
கல்வி
தொகுஏ.எம்.யு மலப்புரம் வளாகம்
தொகுஏ. எம். யு மலப்புரம் வளாகம் என்பது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மூன்று கிளைகளில் ஒன்றாகும். இது மலையில் உள்ள செருகரை கிராமத்தில் அமைந்துள்ள உயர்கல்வி மையமாகும். இது 12 ஆம் வகுப்புக்குப் பிறகு ஐந்தாண்டு சட்டப் படிப்பையும், பட்டப்படிப்புக்குப் பிறகு எம்பிஏ மற்றும் பிஎட் படிப்பையும் வழங்குகிறது. இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் AMU தேர்வின் கட்டுப்பாட்டாளரிடம் மார்ச் மாதத்தில் விண்ணப்பிக்கலாம்.
எம்.ஐ.சி ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி
தொகுமன்ஃபா-உல்-உலூம் இஸ்லாமிய வளாக அறக்கட்டளையால் நடத்தப்படும் எம்.ஐ.சி ஆங்கில வழி மேல்நிலைப் பள்ளி, செருகரையில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியாகும். இது சிபிஎஸ்இ புதுதில்லியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மறைந்த புன்னசேரி பாப்பு ஹாஜியால் நிறுவப்பட்டது. இப்பள்ளி பொது கல்வி, மற்றும் இஸ்லாமிய தார்மீக படிப்புகளை வழங்குகிறது.
பள்ளி நிருவாகம் ஒரு அனாதை இல்லத்தை நடத்துகிறது.
செருகாரா ஜும்ஆ பள்ளிவாசல்
தொகுசெருகாரை ஜுமா பள்ளிவாசல் என்பது செருகரையில் உள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உள்ளூர் அமைப்பான "செருகாரா மஹால் கமிட்டி" நிருவகிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் வேலை
தொகு1970களில் கேரளத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெருமளவு தொழிலாளர்கள் குடிபெயர்ந்துள்ளனர். கேரளத்தின் பிற பகுதிகளைப் போலவே இங்கிருந்தும், சவுதி அரேபியா, கத்தார் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு வேலை தேடி குடிபெயர்ந்தனர். துவக்கத்தில் பெரும்பாலானோர் திறமை தேவையில்லாத உடலுழைப்பு பணிகலில் ஈடுப்பட்டனர். பின்னர் திறமையான / படித்த மக்கள் செருகாரையிலிருந்து இடம்பெயரத் தொடங்கினர். புலம்பெயர்ந்தோர் சிலர் வணிகத்திலும் ஈடுபட்டனர். அங்கிருந்து அனுப்பபட்ட பணம் செருகரை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது. அவர்கள் தங்கள் தாயகத்திலும் வெளிநாட்டிலும் சமூக ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். செருகரையர்கள் பல தன்னார்வ அமைப்புகளில் அங்கம் வகிக்கின்றனர். அத்தகைய ஒரு அமைப்பு செருகாரை எம்.ஐ.சி நலக்குழு, ஜெட்டா போன்றவையாகும். ஒரு சில செருகாரைய அமைப்புகள் வளைகுடா பகுதிகளில் உள்ளன. இந்த அமைப்புகளின் முக்கிய நோக்கம் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதாகும். இந்த அமைப்புகளின் உதவிக் கரங்கள் வீடுகள் கட்டவும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்யவும், கல்வி வழங்கவும் உதவின.
பண்பாடு
தொகுசெருகரை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். இந்துக்கள் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். டஃப் முது, கோல்கலி, அரவாணமுத்து ஆகியவை இங்கு பொதுவாக காணப்படும் நாட்டுப்புற கலைகளாகும். இஸ்லாமிய ஆய்வுகளை செய்ய வசதியாக பல நூலகங்கள் பள்ளிவாசல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான புத்தகங்கள் அரபி-மலையாளத்தில் எழுதப்பட்வை. அவை அரேபிய எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள மொழிப் பதிப்புகளாகும். மக்கள் மாலை தொழுகைக்காக பள்ளிவாசல்களில் கூடி, தொழுகைக்குப் பிறகு சமூக மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கின்றனர். இந்த மாலை கூட்டங்களின் போது வணிக மற்றும் குடும்ப பிரச்சினைகள் பேசி தீர்க்கபடுகின்றன. இந்து சிறுபான்மையினர் தங்கள் கோயில்களில் திருவிழாக்கள் கொண்டாடுவதன் மூலம் தங்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றனர். கேரளத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இந்து சடங்குகள் வழக்கமான பக்தியுடன் இங்கு செய்யப்படுகின்றன.[1]
போக்குவரத்து
தொகுசெருகரை பெரிந்தல்மண்ணை நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 திரூர் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. இச்சாலையின் தெற்கு நீட்சியானது கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. நெடுஞ்சாலை எண் 966 செல்கிறது பாலக்காடு மற்றும் கோயம்புத்தூருக்குச் செல்கிறது. நிலம்பூரிலிருந்து ஷோர்ணூரை இணைக்கும் இருப்புப் பாதை, செருகரை வழியாகச் செல்ல, செருகரை தொடருந்து நிலையத்தை அணுகலாம்.
அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோட்டில் உள்ளது.
அருகிலுள்ள முதன்மை தொடருந்து ரயில் நிலையம் பட்டம்பியில் உள்ளது.
மேலும் காண்க
தொகுகாட்சியகம்
தொகு-
செருகாரா ஜும்ஆ பள்ளிவாசல்
-
சவுதி அரேபியாவின் ஜெட்டாவின் மஇகா செருகரை நலக்குழு உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Malappuram News, Malappuram District Map, Malappuram Muslim, Malappuram Hospitals, Malappuram College, Malappuram Directory". Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-14.