செலக் (அமைப்பு)

இலத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளின் சமூகம் (Community of Latin American and Caribbean States, எசுப்பானியம்: Comunidad de Estados Latinoamericanos y Caribeños, CELAC அல்லது செலக் என்பது இலத்தீன் அமெரிக்கா, கரிபியன் நாடுகள் இணைந்து 2010, பெப்ரவரி 23 ஆம் நாள் உருவாக்கிய ஒரு பிராந்திய அமைப்பாகும்[1][2] இவ்வமைப்பில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் பிரான்சின் வெளியூர்ப் பிராந்திய நாடுகள், டச்சு கரிபியன் ஆகிய நாடுகள் தவிர்த்து அமெரிக்காக்களின் அனைத்து நாடுகளும் உறுப்புரிமை பெற்றுள்ளன. அத்துடன் பிரித்தானியாவின் வெளிநாட்டுப் பிராந்தியங்கள், கிரீன்லாந்து ஆகியவையும் இவ்வமைப்பில் உருப்புரிமை பெறவில்லை.

இலத்தீன் அமெரிக்க மற்றும் கரியியன் நாடுகளின் சமூகம்.
மொத்த மக்கள்தொகை: 591.662 மில்லியன் (2011)
மொத்தப் பரப்பளவு: 20.438 மில்லியன் சதுர கிமீ
அடர்த்தி: 28.95/சதுர கிமீ

வெனிசுவேலாவில் இதன் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டின் இறுதியில் நாடுகளின் தலைவர்கள் தமக்கிடையே நெருக்கமான உறவைப் பேணுதற்கு உறுதிகொண்டுள்ளனர்.


நாடுகள்

தொகு

செலக் அமைப்பு 33 நாடுகளுடன், 5 வித்தியாசமான மொழிகளுடன் கூடி நிற்கின்றது. அவையாவன,

பதினெட்டு எசுப்பானிய மொழி-மொழி பேசும் நாடுகள் (பரப்பளவில் 56%, மக்கள்தொகையில் 63%)

பன்னிரண்டு ஆங்கிலம்- பேசும் நாடுகள் (பரப்பளவில் 1.3%, மக்கள்தொகையில் 1.1%)

ஒரு போர்த்துக்கீசியம்- பேசும் நாடுகள் (பரப்பளவில் 42%, மக்கள்தொகையில் 34% )

ஒரு பிரான்சியம்-பேசும் நாடுகள் (பரப்பளவில் 0.1%, மக்கள்தொகையில் 1.6%)

ஒரு இடச்சு-பேசும் நாடுகள் (பரப்பளவில் 0.8%, மக்கள்தொகையில் 0.1%)

பன்னிரண்டு நாடுகள் தென் அமெரிக்காவிற்குரியன. இது மக்கள்தொகையில்68% வீதமாகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.mexidata.info/id2573.html பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம் Mexidata (English) March 1, 2010
  2. Acuerdan crear Comunidad de Estados Latinoamericanos y Caribeños, அசோசியேட்டட் பிரசு, பெப்ரவரி 23, 2010.

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலக்_(அமைப்பு)&oldid=3743380" இலிருந்து மீள்விக்கப்பட்டது