செல்லம்பட்டி, மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

செல்லம்பட்டி (Chellampatti) தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு கிராமமாகவும், நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625 514 ஆகும். இதனருகே உள்ள கிராமங்கள் கோவிலாங்குளம் ((2 கிமீ), கொடிக்குளம் (3 கிமீ), திடியன் (4 கிமீ), கருமாத்தூர் (4 கிமீ) உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் சோழவந்தான், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகும். இதன் மேற்கில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வடக்கில் வாடிபட்டி ஊராட்சி ஒன்றியம், தெற்கில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேற்கில் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் எல்லைகளாக உள்ளது.

செல்லம்பட்டி
கிராமம்
செல்லம்பட்டி is located in தமிழ் நாடு
செல்லம்பட்டி
செல்லம்பட்டி
தமிழ்நாட்டில் செல்லம்பட்டியின் அமைவிடம்
செல்லம்பட்டி is located in இந்தியா
செல்லம்பட்டி
செல்லம்பட்டி
செல்லம்பட்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 09°56′39″N 077°53′53″E / 9.94417°N 77.89806°E / 9.94417; 77.89806
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
தாலுக்காதிருமங்கலம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,243
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
625 514

அமைவிடம்

தொகு

மதுரை - உசிலம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த செல்லம்பட்டி, மதுரைக்கு மேற்கே 24 கிமீ தொலைவிலும்; திருமங்கலத்திலிருந்து 28 கிமீ தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து 13 கிமீ தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு