சேரர் தொகுப்புக் குறிப்புகள்
சங்ககால அரசர்கள் பலரது பெயர்களும் அவர்களைப் பகுத்தறிய உதவும் சிறுகுறிப்புகளும் இங்குத் தரப்படுகின்றன.
பதிற்றுப்பத்து தரும் செய்திகள்
தொகுஅரசன் | குறிப்புகள் | சிறப்புக் குறிப்புகள் |
---|---|---|
உதியஞ்சேரல் | ஐவர் நூற்றுவர் போரில் பெருஞ்சோறு அளித்தவன், | 2-ம் பத்து அரசனின் தந்தை |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்) | இமயமலையில் வில் பொறித்தவன், யவனரைப் பிணித்தவன், திருப்போர்ப்புறம் போரில் சோழன் வேல்பஃறக்கைப் பெருவிறற்கிள்ளியோடு ஒற்றைக்கு ஒற்றையாகப் போரிட்டு மாண்டவன் | பதிற்றுப்பத்து 2-ன் தலைவன் |
பல்யானைச் செல்கெழு குட்டுவன் | உம்பற்காடு, அகப்பா, தோட்டிமலை, முதியர், பூழியர் - வெற்றிகள், | பதிற்றுப்பத்து 3-ன் தலைவன் |
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் | நன்னனை வென்று பூழி நாட்டை மீட்டுக்கொண்டான் | பதிற்றுப்பத்து 4-ன் தலைவன் |
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் | குட்டுவர் புரச்சியை ஒடுக்கியவன், மோகூரை வென்றவன், கண்ணகிக்குச் சிலை வைத்தவன், | பதிற்றுப்பத்து 5-ன் தலைவன் |
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் | தண்டாரணியத்து வருடையாடுகளைக் கவர்ந்து வந்து தன் தொண்டிநகர் பார்ப்பார்க்கு வழங்கியவன். இவன் தலைநகர் நறவூர் | பதிற்றுப்பத்து 6-ன் தலைவன் |
அந்துவன் (சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை) | கருவூரில் இருந்துகொண்டு ஆண்டவன். மதம் பிடித்த யானைமீதிருந்த சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியைக் காப்பாற்றியவன் | பதிற்றுப்பத்து 7-ம் பத்துத் தலைவனின் தந்தை |
செல்வக் கடுங்கோ வாழியாதன் | சோழ, பாண்டிய அரசர்களை வென்றவன். பூழிநாட்டை இணைத்துக்கொண்டவன். தமிழ்மன்றம் அமைத்தவன் | பதிற்றுப்பத்து 7-ன் தலைவன் |
பெருஞ்சேரல் இரும்பொறை | இருபெரு வேந்தர், கழுவுள் ஆகியோரை வென்றவன். தகடூர், கொல்லி, பூழி, தோட்டி நாடுகளை வென்று நாட்டு விரிவுபடுத்தியவன் | பதிற்றுப்பத்து 8-ன் தலைவன் |
இளஞ்சேரல் இரும்பொறை | தந்தைக்காகத் தகடூர், கொல்லி போர்களை நடத்தியவன். பூழியர் கோ, கொங்கர் கோ, குட்டுவர் ஏறு, மரந்தையோர் பொருநன் என இவனைக் குறிக்கும் தொடர்கள் இவனது நாட்டுப் பரப்பைக் காட்டுவன | பதிற்றுப்பத்து 9-ன் தலைவன் |
அரசன் | குறிப்புகள் | சிறப்புக் குறிப்புகள் |
---|---|---|
சேரமான் பெருஞ்சேரலாதன் | வெண்ணிப் பறந்தலைப் போரில் புறப்பண் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தவன் | வெண்ணிக் குயத்தியார், கழாத்தலையார் பாடல்கள் |
சேரமான் மாரிவெண்கோ | சேர சோழ பாண்டியர் நட்பு | ஔவையார் பாடல் |
சேரமான் வஞ்சன் | வள்ளல் | திருத்தாமனார் பாடல் |
சேரமான் கோக்கோதை மார்பன் | மூவன் பல்லைப் பிடுங்கி வந்து, தன் தொண்டிக் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டவன் | பொய்கையார் பாடல்கள் |
சிறுபாணாற்றுப்படை தரும் செய்தி
தொகுஅரசன் | குறிப்புகள் |
---|---|
இயல்தேர்க் குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்) | வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்தவன் |
புகழூர்க் கல்வெட்டு தரும் செய்திகள்
தொகுஅரசன் | குறிப்புகள் |
---|---|
கோ ஆதன் செல்லிரும்பொறை | பிட்டன் கொற்றன் செங்காயபன் தலைமையின் கீழ்ச் சமணத் துறவியாக மாறியபோது கல்படுக்கை வெட்டி அழியாமல் இனறும் உள்ள கலவையால் மெழுகித் தந்தவனின் பாட்டன் |
பெருங்கடுங்கோ | பிட்டன் கொற்றன் செங்காயபன் தலைமையின் கீழ்ச் சமணத் துறவியாக மாறியபோது கல்படுக்கை வெட்டி அழியாமல் இனறும் உள்ள கலவையால் மெழுகித் தந்தவனின் தந்தை |
இளங்கடுங்கோ | பிட்டன் கொற்றன் செங்காயபன் தலைமையின் கீழ்ச் சமணத் துறவியாக மாறியபோது கல்படுக்கை வெட்டி அழியாமல் இனறும் உள்ள கலவையால் மெழுகித் தந்தவன் |
புலவராய் விளங்கிய சேர அரசர்கள்
தொகுஅரசன் | குறிப்புகள் |
---|---|
சேரமான் எந்தை | குறுந்தொகை 22 |
சேரமான் இளங்குட்டுவன் | அகநானூறு 153 |
சேரமான் கணைக்கால் இரும்பொறை | சிறையில் தண்ணீர் கேட்டுப் பெற்று உண்ணாமல் உயிர் துறந்தவன் |
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை | தன் மனைவி பெருங்கோப்பெண்டு காலமானபோது "நானும் உடன் சாகாமல் உயிர் வாழ்கிறேனே" என்று கலங்கிப் பாடியவன் |
பாலை பாடிய பெருங்கடுங்கோ | தான் பாடிய கலித்தொகைப் பாலைக்கலிப் பாடல்களில் கொடுங்கோல் ஆட்சியில் குடிமக்கள் படும் வேதனையைப் பாடும் இவனைச் செங்கோலாட்சி நடத்திய சேரன் எனலாம் |
மருதம் பாடிய இளங்கடுங்கோ | சோழநாட்டுப் பருவூர்ப் பறந்தலையில் அஃதை தந்தை இருபெரு வேந்தர்களை ஓட்டிவிட்டுத் தன் வாளைச் சொழற்றிக்கொண்டு ஆடிய செய்தியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். |
காண்க
தொகு- இவர்களைப் பற்றிய வரலாற்று இணைப்புகளை, சேரர் குடிப்பெயர்கள் பகுதியில் காணலாம்.