சையத் சாபர் இசுலாம்
சையத் சாபர் இசுலாம் (Syed Zafar Islam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். [3] தற்போது பாரதிய சனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். [4] சையது சாபர் இசுலாம் ஒரு முன்னாள் முதலீட்டு வங்கியாளராகவும் இந்திய துணை நிறுவனமான இடாய்ச்சு வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் ஆவார். [5] இவர் கட்சியின் முக்கிய முசுலிம் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [6]
சையத் சாபர் இசுலாம் Syed Zafar Islam | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 4 செப்டம்பர் 2020 – 4 சூலை 2022 | |
முன்னையவர் | அமர் சிங் |
பின்னவர் | சங்கீதா யாதவ் |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
தேசிய செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அசாரிபாக்கு, சார்க்கண்டு, இந்தியா [1] |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | சிபா கமல் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | மும்பை, புது தில்லி |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் (முனைவர்), இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாத், (முதுநிலை மேலாண்மை), அலிகர் முசுலிம் பல்கலைக்கழகம், ராஞ்சி பல்கலைக்கழகம்[2] |
வேலை | முதலீட்டு வங்கியியல், அரசியல்வாதி |
2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற சுயாதீன இயக்குநராகவும் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஅரசியல் பிரவேசம்
தொகுசையத் சாபர் இசுலாம் நரேந்திர மோதியின் அரசியலால் பாதிக்கப்பட்டு, இந்தியாவின் இடாய்ச்சு வங்கியின் இயக்குநர் பதவியை விலகல் செய்த பின்னர் 5 ஏப்ரல் 2014 அன்று பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார்.[7] பின்னர் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில் இவர் அமைச்சரவையின் நியமனக் குழுவால் ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற சுயாதீன இயக்குநராக நியமிக்கப்பட்டார். [8] சோதிராதித்ய சிந்தியாவின் நெருங்கிய நண்பரான சாபர், 2020 ஆம் ஆண்டில் காங்கிரசில் இருந்து பாரதிய சனதா கட்சிக்கு சிந்தியா மாறவும், கமல்நாத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியப் பிரதேச காங்கிரசு அரசாங்கத்தை கவிழ்க்கவும் உதவுவார் என்று நம்பினார்.[9] பல தேசிய செய்தித்தாள்களில் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் பற்றிய கருத்துக்களையும் இவர் எழுதினார்.
பாராளுமன்ற உறுப்பினர்
தொகு2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், உத்தரபிரதேசத்தில் இருந்து காலியான மாநிலங்களவை பதவிக்கு இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [10]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "[1"]. https://www.jagran.com/jharkhand/ranchi-rajya-sabha-by-election-2020-syed-zafar-islam-belongs-from-hazaribagh-business-family-bjp-has-made-him-rajya-sabha-ccandidate-20682870.html.
- ↑ "Shri Syed Zafar Islam| National Portal of India".
- ↑ "BJP's Syed Zafar Alam elected unopposed to Rajya Sabha from Uttar Pradesh". https://www.newindianexpress.com/nation/2020/sep/04/bjps-syed-zafar-alam-elected-unopposed-to-rajya-sabha-from-uttar-pradesh-2192489.html.
- ↑ "BJP Spokesperson Syed Zafar Islam Party's Rajya Sabha Poll Candidate from UP". https://www.news18.com/news/politics/bjp-spokesperson-syed-zafar-islam-partys-rajya-sabha-poll-candidate-from-up-2822419.html.
- ↑ "SYED ZAFAR ISLAM Profile". https://indianexpress.com/profile/author/syed-zafar-islam/.
- ↑ "Zafar Islam, who helped bring Scindia to BJP, given RS ticket". https://timesofindia.indiatimes.com/india/zafar-islam-who-helped-bring-scindia-to-bjp-given-rs-ticket/articleshow/77774457.cms.
- ↑ न्यूज़, एबीपी (2020-08-27). "जानिए कौन हैं सैयद जफर इस्लाम, जिन्हें यूपी से BJP ने दिया राज्यसभा का टिकट" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-10-18.
- ↑ "BJP leader Syed Zafar Islam appointed non-official director of Air India". https://m.economictimes.com/industry/transportation/airlines-/-aviation/bjp-leader-syed-zafar-islam-appointed-non-official-director-of-air-india/articleshow/58794385.cms.
- ↑ "Syed Zafar Islam is BJP nominee for RS from Uttar Pradesh" (in en-IN). 2020-08-26. https://www.thehindu.com/news/national/bjp-nominates-spokesperson-for-uttar-pradesh-rajya-sabha-seat/article32450316.ece.
- ↑ "BJP's Syed Zafar Alam elected unopposed to Rajya Sabha from Uttar Pradesh". https://www.newindianexpress.com/nation/2020/sep/04/bjps-syed-zafar-alam-elected-unopposed-to-rajya-sabha-from-uttar-pradesh-2192489.html.