சோரா பேகம் காசி

சோரா பேகம் காசி (Zohra Begum Kazi 15 அக்டோபர் 1912 – 7 நவம்பர் 2007) முதல் வங்காள இசுலாமியப் பெண் மருத்துவர் ஆவார்.[1] [2]இவருக்கு தம்கா-இ-பாகிஸ்தான் (1964), பேகம் ரோகேயா பதக் (2002) மற்றும் ஏகுஷே படக் (2008) விருதுகள் வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம் தொகு

காசி பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணங்களான சத்தீஸ்கரின் ராஜ்நாந்துகாவ் மாவட்டத்தில் பிறந்தார். இவர் டாக்காவின் புளோரன்சு நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகிறார்.[3] காசி அப்போது வங்காளத்தில் இருந்த மதாரிப்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூரின் காசி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை காசி அப்துஸ் சத்தார் ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தனது 32 ஆம் வயதில் காசி, சட்ட உருவாக்குநரான ரசுதீன் புயன் என்பவரைத் திருமணம் செய்தார். இவரது கணவர், நரசிங்கடி மாவட்டத்தினைச் சேர்ந்த ஜமீந்தாரின் மகன் ஆவார். இவர் 1963 இல் விதவையானார். இவருக்கு சொந்தமாக குழந்தைகள் இல்லை என்றாலும், காசி வங்காளதேசம் முழுவதும் ஏழ்மையான குடும்பங்களில் இருந்து பல குழந்தைகளை தத்தெடுத்து கல்வி கற்பித்தார்.

இவரது மூத்த சகோதரர் காசி அஷ்ரப் மகமூத் இந்தி கவிஞர் ஆவார். இவர் டாக்கா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மகாத்மா காந்திக்கும் தனக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய புத்தகத்திற்காக மகமூத் பரவலாகப் புகழ்பெற்றவர். காசியின் குடும்பம் மகாத்மா காந்தி மற்றும் பல முக்கிய இந்திய மற்றும் பிற்கால பாகிஸ்தான் அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. காசி நஸ்ருல் இஸ்லாம் அமைப்புத் தலைவராக இருந்தபோது , அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக அசுரப் பணியாற்றினார்.

இவருடைய இளைய சகோதரி சிரின் காசியும் ஒரு மருத்துவர் மற்றும் கவிஞர் ஆவார். 1951 இல் DRCOG பட்டம் பெற்ற முதல் வங்காளப் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். சிரின் காசி பின்னர் குழந்தை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றார். இவர் ஏழ்மையான குடும்பங்களில் இருந்து பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததற்காகவும் பரவலாக அறியப்பட்டார்.

மூன்று உடன்பிறப்புகளும் ஒருமுறை இந்தியாவின் நாக்பூரில் மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட ஆசிரமமான சேவா கிராமத்தில் வாழ்ந்தனர். சோரா காசி மகாத்மா காந்தியின் சேவாஷ்ரமில் தன்னார்வலராகப் பணியாற்றினார், இது பின்னர் மகாத்மா காந்தி அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தினை உருவாக்கியது. இந்த அமைப்பு ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கியது. இவர் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையின் கௌரவ செயலாளராகவும் பணியாற்றினார்.

கல்வி தொகு

தில்லியில் உள்ள பெண்களுக்கான லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் 1935 இல் காசி தனது எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். மருத்துவப் படிப்பில் முதல் இடத்தைப் பிடித்தார் மற்றும் இந்தியத் தலைமை ஆளுநர் பதக்கம் பெற்றார்.

காசி தனது எப்சிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்து லண்டனில் உள்ள ராயல் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரியில் உதவித்தொகை பெற்று டிஆர்சிஓஜி பட்டம் பெற்றார். இவர் லண்டனில் தனது படிப்பைத் தொடர்ந்தார் மற்றும் எஃப் ஆர்சிஓஜி மற்றும் எம் ஆர்சிஓஜி பட்டங்களைப் பெற்றார். இவர் கிழக்கு வங்காளத்திற்கு திரும்பியதும் (பின்னர் கிழக்கு பாகிஸ்தான் என மறுபெயரிடப்பட்டது), இவர் டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பேராசிரியராகவும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் தலைவராகவும் சேர்ந்தார்.

காசி 7 நவம்பர் 2007 அன்று தனது 95 வயதில் இறந்தார். [4]

சான்றுகள் தொகு

  1. "கூகுள் டூடிலில் சோரா பேகம்".
  2. "முதல் பாக்கித்தானிய மகளிர் மருத்துவர்".
  3. "நைட்டிங்கேல்".
  4. . 8 November 2008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரா_பேகம்_காசி&oldid=3278584" இலிருந்து மீள்விக்கப்பட்டது