யாம்பில் பிராந்தியம்
ஜம்பில் பிராந்தியம் (Jambyl Region, காசாக்கு மொழி: Жамбыл облысы , جامبىل) என்பது கஜகஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் தாராஸ் நகரமாகும். இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 1,000,000 ஆகும். தலை நகரின் மக்கள் தொகை 335,100 என்று உள்ளது. இப்பிராந்தியம் கிர்கிஸ்தானின் எல்லையில் உள்ளது. மேலும் இது உஸ்பெகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ளது. இந்த மாகாணத்தின் அண்டை மாகாணங்களாக கரம்பண்டா பிராந்தியம் (வடக்கே), துர்கிஸ்தான் பிராந்தியம் (மேற்கில்), அல்மாட்டி பிராந்தியம் (கிழக்கில்) ஆகிய மூன்று மாகாணங்கள் உள்ளன. மாகாணத்தின் மொத்த பரப்பளவு 144,200 சதுர கிலோமீட்டர்கள் (55,700 sq mi) ஆகும். இந்த மாகாணம் இதன் வடகிழக்கில் பால்காஷ் ஏரியின் எல்லையாக உள்ளது.
ஜம்பில் பிராந்தியம்
Ʒambíl oblísí Жамбыл облысы | |
---|---|
கஜகஸ்தானின் வரைபடத்தில், ஜம்பில் மாகாணத்தின் இருப்பிடம் காட்டப்பட்டுள்ளது | |
ஆள்கூறுகள்: 44°0′N 72°0′E / 44.000°N 72.000°E | |
நாடு | கசக்கஸ்தான் |
தலைநகரம் | தாராஸ் |
அரசு | |
• அக்கீம் | கரீம் கோகிரேக்பேவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,44,264 km2 (55,701 sq mi) |
மக்கள்தொகை (2013-02-01)[2] | |
• மொத்தம் | 10,71,645 |
• அடர்த்தி | 7.4/km2 (19/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (East) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (not observed) |
அஞ்சல் குறியீடு | 080000 |
தொலைபேசி இலக்கத் திட்டம் | +7 (726) |
ஐஎசுஓ 3166 குறியீடு | KZ-ZHA |
வாகனப் பதிவு | 08, H |
மாவட்டங்கள் | 10 |
மாநகரங்கள் | 4 |
சிற்றூர்கள் | 367 |
இணையதளம் | www |
மக்கள் வகைப்பாடு
தொகு2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜம்பில் பிராந்திய மக்கள் தொகையானது 1,130,099 என்று இருந்தது. [3]
இனக்குழுக்கள் (2020): [4]
- கசக்குகள் : 72.81%
- உருசியர் : 9.60%
- டங்கன் : 5.29%
- துருக்கியர் : 3.07%
- உஸ்பெக்கியர் : 2.54%
- மற்றவர்: 6.69%
நிர்வாக பிரிவுகள்
தொகுஇந்த மாகாணம் நிர்வாக ரீதியாக பத்து மாவட்டங்களாகவும், தாராஸ் நகரப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. [5]
- பேசாக் மாவட்டம்
- ஜம்பில் மாவட்டம்
- கோர்டே மாவட்டம்
- மெர்கி மாவட்டம்
- மொயின்கும் மாவட்டம்
- சரிசு மாவட்டம்
- ஷு மாவட்டம்
- தலாஸ் மாவட்டம்
- துரார் ரிஸ்குலோவ் மாவட்டம்
- ஜுவாலி மாவட்டம்
ஜனதாஸ், கரட்டாவு, ஷு, மற்றும் தாராஸ் ஒரு நகரத்தின் நிர்வாக அந்தஸ்தைக் கொண்டுள்ளன. [5]
பொருளாதாரம்
தொகுமாகாணத்தின் முக்கியமான தொழில்களில் பாறை பாஸ்பேட் சுரங்கம் ( கரடாவைச் சுற்றி) உள்ளது. கஜகஸ்தானின் நன்செய் வேளாண்மையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக சு நதி பள்ளத்தாக்கு உள்ளது.
காட்சியகம்
தொகு-
ஷு நகரின் வடக்கே உள்ளு புல்வெளிகள்
-
ஜம்பில் மாகாணத்தின் நுழைவாயிலான கோர்டே பாலம்
குறிப்புகள்
தொகு- ↑ Official site - General Information பரணிடப்பட்டது 2008-02-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Agency of statistics of the Republic of Kazakhstan: Численность населения Республики Казахстан по областям с начала 2013 года до 1 февраля 2013 года (russisch; Excel-Datei; 55 kB).
- ↑ "Численность населения Республики Казахстан по отдельным этносам на начало 2020 года". Stat.kz. பார்க்கப்பட்ட நாள் 2020-08-03.
- ↑ "Численность населения Республики Казахстан по отдельным этносам на начало 2020 года". Stat.kz. பார்க்கப்பட்ட நாள் 2020-08-03.
- ↑ 5.0 5.1 "Характеристика" (in Russian). The official portal of akimat of Jambyl Region. Archived from the original on 30 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ வலைத்தளம் (ரஷ்ய மொழியில்) பரணிடப்பட்டது 2019-05-07 at the வந்தவழி இயந்திரம்