சலகண்டாபுரம்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமம்
(ஜலகண்டபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஜலகண்டாபுரம் (ஆங்கிலம்:Jalakandapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஜலகண்டாபுரம்
—  பேரூராட்சி  —
ஜலகண்டாபுரம்
அமைவிடம்: ஜலகண்டாபுரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°42′N 77°53′E / 11.7°N 77.88°E / 11.7; 77.88
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் மேட்டூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

16,184 (2011)

3,518/km2 (9,112/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

4.6 சதுர கிலோமீட்டர்கள் (1.8 sq mi)

269 மீட்டர்கள் (883 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/jalagandapuram

இப்பேரூராட்சியானது சேலம் மாநகராட்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. துரத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சிப் பகுதியில் பெரும்பாலன மக்கள் நெசவு தொழில் மற்றும் விவசாயத் தொழில் மேற்கொண்டு வருகின்றனர். நீர்வள ஆதாரமாக பெரிய ஏரி இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது. இதனருகில் மேட்டூர் அணை அமைந்துள்ளது.

அமைவிடம்

தொகு

ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குக் கிழக்கில் 35 கி.மீ. தொலைவில் சேலம் உள்ளது. இதன் மேற்கில் மேட்டூர் 28 கி.மீ., வடக்கில் எடப்பாடி 15 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

4.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 68 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,198 வீடுகளும், 16,184 மக்கள்தொகையும், கொண்டது.[5]

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°42′N 77°53′E / 11.7°N 77.88°E / 11.7; 77.88 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 269 மீட்டர் (882 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. ஜலகண்டபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Jalakandapuram Population Census 2011
  6. "Jalakandapuram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலகண்டாபுரம்&oldid=3935765" இலிருந்து மீள்விக்கப்பட்டது