ஜாம்பி மாநகரம்
ஜாம்பி மாநகரம் (ஆங்கிலம்: Jambi City இந்தோனேசியம்: Kota Jambi) என்பது இந்தோனேசியா, ஜாம்பி பிரிவின் (Jambi Province) தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும். சுமாத்திரா தீவில் அமைந்துள்ள இந்த மாநகரம் பாத்தாங்காரி ஆற்றின் பரபரப்பான துறைமுகமாகவும் செம்பனை மற்றும் ரப்பர் உற்பத்தி மையமாகவும் விளங்குகிறது.
ஜாம்பி மாநகரம் City of Jambi Kota Jambi | |
---|---|
ஜாம்பி புரோவின்ஸ் எனும் ஜாம்பி மாநிலத்தில் ஜாம்பி மாநகர அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°35′24″S 103°36′36″E / 1.59000°S 103.61000°E | |
நாடு | இந்தோனேசியா |
பகுதி | சுமாத்திரா |
மாநிலம் | ஜாம்பி |
உருவாக்கம் | 17 மே 1401 |
மாநகர் | 1956 |
பரப்பளவு | |
• மொத்தம் | 169.89 km2 (65.59 sq mi) |
ஏற்றம் | 16 m (52 ft) |
மக்கள்தொகை (2023) | |
• மொத்தம் | 6,27,774 |
• அடர்த்தி | 3,700/km2 (9,600/sq mi) |
[1] | |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +7 |
தொலைபேசி எண்கள் | (+62) 741 |
இணையதளம் | jambikota.go.id |
இந்த நகரம், பண்டைய சிறீவிஜய இராச்சியத்தின் முவாரோ ஜாம்பி ஆலய வளாகத்தின் இடிபாடுகளிலிருந்து 26 கிமீ (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
பொது
தொகுஜாம்பி மாநகரமே முவாரோ ஜாம்பி குறு மாநிலத்தில் (Muaro Jambi Regency) உள்ள ஓர் இடமாகும். ஜாம்பி மாநகரத்திற்கு சுல்தான் தாகா வானூர்தி நிலையம் (Sultan Thaha Airport) சேவை செய்கிறது. இந்த மாநகரத்திற்கு அருகில் உள்ள நகரங்களும் கிராமங்களும்:
புவியியல்
தொகுஜாம்பி மாநகரின் மொத்த நிலப்பரப்பு 169.887 கிமீ2 (66 சதுர மைல்) ஆகும். ஜாம்பி மாநகரம் தென்மேற்கு சுமாத்திரா படுகையில் அமைந்துள்ளது.
இது கிழக்கு சுமாத்திராவில் ஒரு தாழ்வான பகுதி. 1,700 கிமீ (1,056 மைல்) நீளம் கொண்ட பாத்தாங்காரி ஆற்றின் ஒரு பகுதி, ஜாம்பி நகரத்தின் வழியாகச் செல்கிறது.
மக்கள்தொகையியல்
தொகு2020-ஆம் ஆண்டில் இந்த நகரத்தில் 606,200 மக்கள் (ஜாம்பி பிரிவின் மக்கள் தொகையில் 17%) வாழ்கின்றனர்.[2]
2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மக்கள் தொகை 627,774 (பெண்கள் 315,855; ஆண்கள் 315,911) என அதிகாரப்பூர்வ மதிப்பீடு அறிவிக்கிறது.[1]
ஜாம்பி பிரிவில் இந்த ஜாம்பி மாநகரமே அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்;[1] மிகவும் மாறுபட்ட மற்றும் பல இனங்களைக் கொண்டுள்ளது.[3]
- ஜாம்பி மலாய்க்காரர்கள் (27.84%)
- ஜாவானியர்கள் (22.05%)
- மினாங்கபாவு மக்கள் (12.64%)
- மலாய்க்காரர்கள் (11.47%)
- இந்தோனேசிய சீனர்கள் (6.82%)
- பத்தாக் மக்கள் (6.62%)
- சுந்தானிய மக்கள் (4.47%)
- பூகிஸ் மக்கள் (2.03%)
இரட்டை நகரங்கள் - சகோதர நகரங்கள்
தொகுஜாம்பி மநகரத்தின் சகோதர நகரங்கள்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Kota Jambi Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.1571)
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ Badan Pusat Statistik Provinsi Jambi
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் ஜாம்பி மாநகரம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.