ஜாம்பி பிரிவு
ஜாம்பி பிரிவு (ஆங்கிலம்: Province of Jambi; இந்தோனேசியம்: Provinsi Jambi) ) என்பது இந்தோனேசியா நாட்டின் 38 பிரிவுகளில் ஒன்றாகும். இந்தப் பிரிவு மத்திய சுமத்திரா தீவில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜாம்பி மாநகரம் ஆகும். இதன் மேற்கில் பாரிசான் மலைகள் உள்ளன.
ஜாம்பி பிரிவு Province of Jambi Provinsi Jambi | |
---|---|
ஜாம்பி பிரிவு | |
இந்தோனேசியா நாட்டின் சமத்திரா தீவில் ஜாம்பி மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°35′S 103°37′E / 1.583°S 103.617°E | |
நிறுவிய ஆண்டு | 6 சனவரி 1957 |
தலைநகரம் | ஜாம்பி மாநகரம் |
அரசு | |
• நிர்வாகம் | ஜாம்பி மாநில அரசு |
• ஆளுநர் | அல் ஹரிஸ், (தேசிய சாசன கட்சி) |
• துணை ஆளுநர் | அப்துல்லா சஞ்சித் |
பரப்பளவு | |
• மொத்தம் | 49,026.58 km2 (18,929.27 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 11வது |
ஏற்றம் | 500 m (1,600 ft) |
உயர் புள்ளி (கெரிஞ்சி மலை) | 3,805 m (12,484 ft) |
மக்கள்தொகை (2023 மதிப்பீடு)[1] | |
• மொத்தம் | 36,79,169 |
• தரவரிசை | 19வது |
• அடர்த்தி | 75/km2 (190/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 23வது |
மக்கள் தொகை பரம்பல் | |
• இனக்குழுக்கள் | ஜாம்பி மலாய் மக்கள் 43.57% ஜாவா மக்கள் 29.10% பிற இந்தோனேசிய மலாய் மக்கள் 5.37% மியாங்கபௌ மக்கள் 5.33% பதாக் மக்கள் 3.46% பஞ்சார் மக்கள் 3.33% பக்கீ மக்கள் 3.13% சுந்தானிய மக்கள் 2.58% பலேங்பாங் மக்கள் 1.88% சீன இந்தோனேசிய மக்கள் 1.215 பிறர் 1.04% [2] |
• சமயங்கள் | இஸ்லாம் 95.08% கிறிஸ்தவம் 3.88% புராட்டஸ்டண்ட் 3.31% கத்தோலிக்கம்- 0.58% பௌத்தம் 0.94% நாட்டுப்புற மதம் 0.06% கன்பூசியம் 0.02% இந்து சமயம் 0.013% [3] |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மதிப்பீடு) | 2022 |
- மொத்தம்[4] | இந்தோனேசிய ரூபாய் 276.3 டிரில்லியன் |
தனி நபர் வருமானம்[5] | இந்தோனேசிய ரூபாய் 76.1 மில்லியன் |
- மொத்த வளர்ச்சி[6] | 5.13% |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.728 |
இணையதளம் | jambiprov |
ஜாம்பி பிரிவு 49,026.58 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 2010 கணக்கெடுப்பின்படி 30,92,265 மக்கள் தொகையும் கொண்டது.[2] 2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் தற்காலிக மதிப்பீடின்படி, இதன் மக்கள் தொகை 3,679,169 ஆக உயர்ந்துள்ளது.[7]
இனம், சமயம் & மொழிகள்
தொகுஜாம்பி பிரிவில் ஜாம்பி மலாய் மக்கள் 43.57%, ஜாவா மக்கள் 29.10%, பிற இந்தோனேசிய மலாய் மக்கள் 5.37%, மியாங்கபௌ மக்கள் 5.33%, பதாக் மக்கள் 3.46%, பாஞ்சார் மக்கள் 3.33%, பக்கீ மக்கள் 3.13%, சுந்தானிய மக்கள் 2.58%, பலேங்பாங் மக்கள் 1.88%, சீன இந்தோனேசிய மக்கள் 1.215 மற்றும் பிற மொழி பேசுபவர்கள் 1.04% ஆகவுள்ளனர். ஜாம்பி மாகாண மக்களில் இஸ்லாம் 95.08%, கிறிஸ்தவம் 3.88% (புராட்டஸ்டண்ட் 3.31% மற்றும் கத்தோலிக்கம்- 0.58%), பௌத்தம் 0.94%, நாட்டுப்புற மதம் 0.06%, கன்பூசியம் 0.02% மற்றும் இந்து சமயம் 0.013% பேர் பின்பற்றுகின்றனர்.
ஜாம்பி பிரிவில் பெரும்பான்மையாக இந்தோனேசிய மொழியும், பிரதேச மொழிகளாக ஜாம்பி மலாய் மொழி, கெரிஞ்சி மொழி மற்றும் குபி மொழிகள் பேசப்படுகிறது.
எல்லைகள்
தொகுஜாம்பி பிரிவில் வடக்கின் ரியாவு மாகாணம், மேற்கில் மேற்கு சுமாத்திராவும், தென்மேற்கில் பெங்குலு, தெற்கில் தெற்கு சுமாத்திரா மாகாணம்; கிழக்கில் பசிபிக் பெருங்கடலில் உள்ள ரியாவு தீவுகள் அமைந்துள்ளது.
மாகாண நிர்வாகம்
தொகுஜாம்பி பிரிவு நிர்வாக வசதிக்காக 9 மாநிலங்கள் மற்றும் 2 மாநகரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து. அவை வருமாறு:
சுட்டெண் | பகுதி அல்லது நகரத்தின் பெயர் |
பரப்பளவு சகிமீ2 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2010 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020 |
மக்கள் தொகை தற்காலிக மதிப்பீடு 2023 |
தலைமையிடம் | மனித மேம்பாட்டுச் சுட்டெண்[8] 2018 மதிப்பீடு |
---|---|---|---|---|---|---|---|
15.01 | கெரிஞ்சி மாநிலம் | 3,445.20 | 229,495 | 250,259 | 255,120 | சியுலாக் | 0.705 (High) |
15.02 | மெரஞ்சின் மாநிலம் | 7,540.12 | 333,206 | 354,052 | 368,390 | பாங்கோலி | 0.688 (Medium) |
15.03 | சரோலங்குன் மாநிலம் | 5,935.89 | 246,245 | 290,047 | 302,240 | சரோலாங்குன் | 0.694 (Medium) |
15.04 | பதாங் ஹரி மாநிலம் | 5,387.52 | 241,334 | 301,700 | 312,730 | முவாராபுளியான் | 0.693 (Medium) |
15.05 | முவாரோ ஜாம்பி மாநிலம் | 5,225.80 | 342,952 | 402,017 | 418,800 | செங்கெட்டி | 0.683 (Medium) |
15.06 | மேற்கு தன்சுங் ஜபூங் மாநிலம் | 5,546.06 | 278,741 | 317,498 | 330,470 | குவாலா துங்கல் | 0.671 (Medium) |
15.07 | கிழக்கு தன்சுங் ஜபோங் மாநிலம் | 4,546.62 | 205,272 | 229,813 | 236,730 | முவாரா சாபாக் | 0.633 (Medium) |
15.08 | பூங்கோ மாநிலம் | 4,760.83 | 303,135 | 362,363 | 376,380 | முவாரா பூங்கோ | 0.694 (Medium) |
15.09 | தெபோ மாநிலம் | 6,103.74 | 297,735 | 337,669 | 350,760 | முவாரா தெபோ | 0.686 (Medium) |
15.71 | ஜாம்பி மாநகரம் | 169.89 | 531,857 | 606,200 | 627,770 | - | 0.774 (High) |
15.72 | சுங்கை பெனுக் மாநகரம் | 364.92 | 82,293 | 96,610 | 99,770 | - | 0.746 (High) |
மொத்தம் | 49,026.58 | 3,092,265 | 3,548,228 | 3,679,169 | ஜாம்பி | 0.705 (High) |
உலகப் பாரம்பரியக் களங்கள்
தொகு- கெரிஞ்சி செப்லாத் தேசியப் பூங்கா
- முவாரோ ஜாம்பி ஆலய வளாகம், 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இவ்வளாகம் பௌத்த சமயக் கல்வி நிலையமாக உள்ளது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Jambi Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.15)
- ↑ 2.0 2.1 Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ "ArcGIS Web Application".
- ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
- ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto Per Kapita (Ribu Rupiah), 2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
- ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
- ↑ "Jumlah Penduduk Menurut Agama" (in இந்தோனேஷியன்). Ministry of Religious Affairs. 31 August 2022. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.
- ↑ All Stats search பரணிடப்பட்டது 2017-08-09 at the வந்தவழி இயந்திரம் jambi.bps.go.id
- ↑ "Waspada Online – Pusat Berita dan Informasi Medan Sumut Aceh". waspada.co.id. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
ஆதார நூற்கள்
தொகு- Locher-Scholten, Elsbeth. 1993. Rivals and rituals in Jambi, South Sumatra. Modern Asian Studies 27(3):573-591.