ஜொ. வெ. சோமயாஜுலு

இந்திய நடிகர்

ஜொன்னலகட்டா வெங்கட சோமயாஜுலு (Jonnalagadda Venkata Somayajulu) (ஜூலை 30,1920 அல்லது சுமார் 1928[1] -ஏப்ரல் 24,2004) தெலுங்குத் திரைப்படத்துறையில் தனது படைப்புகளுக்காகவும், ஒரு சில தமிழ், கன்னடம், பாலிவுட் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்காகவும் அறியப்பட்ட ஒரு இந்திய நடிகர் ஆவார்.[2][1][3][4] 1980 ஆம் ஆண்டில் வெளியான சங்கராபரணம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுதைப் பெற்றார். இந்தியத் திரைப்படத்துறையின் நூற்றாண்டு விழாவில், போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியத் திரைப்படங்களில் 25 சிறந்த நடிகர்களில் இவரையும் சேர்த்தது.[5]

ஜொ. வெ. சோமயாஜுலு
J. V. Somayajulu
பிறப்புஜொன்னலகட்டா வெங்கட சோமயாஜுலு
(1920-07-30)30 சூலை 1920 or அண். 1928
சிறீகாகுளம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு24 April 2004 (2004-04-25)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
சங்கராபரணம் திரைப்படத்தில் சங்கர சாஸ்திரி, தியாகையா (1981 ) படத்தில் தியாகராஜர்
உறவினர்கள்இரமண மூர்த்தி (சகோதரர்)

இளமை வாழ்க்கை

தொகு

ஜொன்னலகட்டா வெங்கட சோமயாஜுலு இன்றைய ஆந்திராவின் சிறீகாகுளம் மாவட்டத்திலுள்ள இலுகலம் அக்ரகாரத்தில் பிறந்தார்.[6] இவரது தந்தை குடிவாடா மற்றும் பிற நகரங்களில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் ஆய்வாளராக பணியாற்றினார். இவர் தனது குழந்தைப் பருவத்தை விஜயநகரத்தில் கழித்தார். அங்கு மேடை நாடகங்களிலும் பங்கேற்றார். ஒரு அரசு அதிகாரியாக இருந்த இவர் மகபூப்நகர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியாற்றினார்.[6][1]

தொழில் வாழ்க்கை

தொகு

சோமயாஜுலுவுக்கு நடிகராக நற்பெயரைப் பெயரைப் பெற்ற பிற படங்களில் அல்லரி பிள்ளலு, நெலவங்கா, ரவுடி அல்லுடு, சிப்பிக்குள் முத்து, தியாகையா, சப்தபாடி , விஜேதா, அப்புலா அப்பா ராவ், வம்சா விருக்ஷம் மற்றும் ஜாக் உத்தா இன்ஸான் (இந்தி படம்) ஆகியவை அடங்கும். ஸ்ரீ ராகவேந்திரா என்ற தமிழ் திரைப்படத்தில் இராகவேந்திரர் கதாபாத்திரத்தில் நடித்தார்.[7] கன்யாசுல்கம் என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு 13 அத்தியாயங்கள் கொண்ட தொலைக்காட்சி தொடரையும் உருவாக்கினார்.[1]அபய் சரண் என்ற வாழ்க்கை வரலாற்றுத் தொடரில் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவாகவும் நடித்தார்.

மேடை நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இவரது வாழ்க்கை ஐந்து தசாப்தங்களாக நீடித்தது. குரஜாதா அப்பாராவின் நாடகமான கன்யாசுல்கம் மீது இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக தனது சகோதரரும் நடிகருமான இரமண மூர்த்தியுடன் இணைந்து 45 ஆண்டுகளில் சுமார் 500 முறை அதை மேடையேற்றினார். நாடகத்தில் "ராமப்பந்துலு" என்ற இவரது கதாபாத்திரமானபுகழ்பெற்றது. சோமயாஜுலுவின் வெற்றியின் பின்னணியில் இவரது தாயார் சாரதம்மா இருந்தார். சோமயாஜுலுவுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.[1]

இரட்டை நகரங்களான ஐதராபாத்து மற்றும் சிக்கந்தராபாத் ஆகிய பகுதியில் தெலுங்கு நாடகத்தின் வளர்ச்சிக்காக, சோமயாஜுலு தனது சமகாலத்தவர்களான சட்லா ஸ்ரீராமுலு, கரிமெல்லா ராம மூர்த்தி மற்றும் ரால்லபள்ளி ஆகியோருடன் இணைந்து 'ரசரஞ்சனி' என்ற நாடக நிறுவனத்தை நிறுவினார்.[1] சோமயாஜுலு அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கலாச்சார விவகார இயக்குநரகத்தில் பணியாற்றினார்.

சோமயாஜுலு 2004 ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் மாரடைப்பால் தனது 76 வயதில் இறந்தார்.[1][8]

தமிழ் திரைப்படங்கள் மற்றும் பாத்திரங்களின் பட்டியல்
ஆண்டு தலைப்பு பாத்திரம் (
1984 நீங்கள் கேட்டவை இசை ஆசிரியர்
1985 ஸ்ரீ ராகவேந்திரா புனித சுதீந்திரா
யார் சுவாமிஜி
1988 இது நம்ம ஆளு ஸ்ரீனிவாச சாஸ்திரி
1989 திருப்பு முனை சத்தியமூர்த்தி
1990 பகலில் பௌர்ணமி துறவி.
1997 மன்னவா ஜோதிடர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "The Hindu : Andhra Pradesh News : Somayajulu passes away". Archived from the original on 12 June 2009. பார்க்கப்பட்ட நாள் 22 January 2007.
  2. P., Jyosthna Kumari (7 May 2011). "శంకరాభరణం శంకరశాస్త్రిగా పేరుగాంచిన జె.వి.సోమయాజులు". Visalaandhra. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.
  3. "Actor Somayajulu passes away". The Times of India (in ஆங்கிலம்). 24 April 2004. Archived from the original on 26 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
  4. "An embodiment of Uttarandhra culture". தி இந்து. Archived from the original on 11 June 2009. பார்க்கப்பட்ட நாள் 2 March 2009.
  5. Prasad, Shishir; Ramnath, N. S.; Mitter, Sohini (27 April 2013). "25 Greatest Acting Performances of Indian Cinema". Archived from the original on 12 January 2016. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  6. 6.0 6.1 P., Jyosthna Kumari (7 May 2011). "శంకరాభరణం శంకరశాస్త్రిగా పేరుగాంచిన జె.వి.సోమయాజులు". Visalaandhra. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.
  7. "Metro cultural round-up". தி இந்து. Archived from the original on 29 June 2006. பார்க்கப்பட்ட நாள் 2 March 2009.
  8. "Actor Somayajulu passes away". The Times of India (in ஆங்கிலம்). 24 April 2004. Archived from the original on 26 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொ._வெ._சோமயாஜுலு&oldid=4127874" இலிருந்து மீள்விக்கப்பட்டது