டக்ளஸ் ஜார்டீன்
டக்ளஸ் ஜார்டீன் (Douglas Jardine), பிறப்பு: அக்டோபர் 23 1900, இறப்பு: சூன் 18 1958) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 262 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1928 - 1934 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். இங்கிலாந்து தேசிய அணியின் தலைவராக 1931 - 1933/34 ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டக்ளஸ் ஜார்டீன் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 235) | சூன் 23 1928 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | பிப்ரவரி 10 1934 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 17 2008 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுடக்ளஸ் ஜார்டின், அக்டோபர் 23, 1900 அன்று பிரித்தானிய இந்தியாவின் மும்பையில் பிறந்தார். இவரது ஸ்காட்டிஷ் தந்தையான மால்கம் ஜார்டைன், முன்னாள் முதல் தர துடுப்பாட்டட் வீரர் ஆவார். இவர் ஒரு பாரிஸ்டர் ஆவார். இவரின் தாய் அலிசன் மோயர் ஆவர். [1] தனது ஒன்பது வயதில், தனது தாயின் சகோதரியுடன் ஸ்காட்லாந்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸுக்கு அனுப்பப்பட்டார். இவர் மே 1910 முதல் பெர்க்ஷயரின் நியூபரிக்கு அருகிலுள்ள ஹாரிஸ் ஹில் பள்ளியில் பயின்றார். [2] அங்கு, ஜார்டின், கல்வியில் சாதாரண மாணவராக இருந்தார். [2]1912 முதல், இவர் பள்ளியின் முதல் லெவன் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். ஒரு பந்து வீச்சாளராகவும் ஒரு மட்டையாளராகவும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். இவர் தனது இறுதி ஆண்டில் அணியை வழிநடத்தினார், மேலும் இவரது தலைமையின் கீழ் அணி அனைத்துப் போட்டியிலும் வெற்றி பெற்றது.[3] ஜார்டினின் மட்டையாட்ட முறைகளை இவரது பயிற்சியாளர் ஏற்கவில்லை. இருந்தபோதிலும் ஜார்டின் பின்வாங்கவில்லை மற்றும் ஃப்ரை தனது கருத்தினை ஆதரிக்க ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டினார். [4]
தேர்வுத் துடுப்பாட்டம்
தொகுமுதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர்கள் அணியின் முக்கிய இலக்காக இருந்த டான் பிராட்மன் விளையாடவில்லை. இருந்தாலும் அந்த அணிக்கு எதிராக விளையாடுவதற்கான சில உத்திகளை இவர் பயன்படுத்தினார். இங்கிலாந்து பயன்படுத்தும் தந்திரோபாயங்களை பிராட்மேன் பார்த்துக் கொண்டிருப்பார் என்று டேவிட் ஃப்ரித் சுட்டிக்காட்டியுள்ளார். [5] இருப்பினும், ஸ்டான் மெக்கேப் ஆட்டமிழக்காமல் 187 ஓட்டங்கள் எடுத்தார். எனவே தனது திட்டம் சரியான பலனை அளிக்கவில்லை என கவலையடைந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. [6] [7]
இரண்டாவது டேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் , ஜார்டின் ஆடுகளத்தை முழுவதுமாக தவறாகக் கருதி, ஒரு சுழற்பந்து வீச்சாளரை வெளியேற்றினார். [8] [9] முதல் ஆட்டப் பகுதியில் பிராட்மன் விளையாட வந்த போது இவர் தனது அணியினரின் பந்துவீச்சினை நடனமாடி பாராட்டினார்.1930 ஆம் ஆண்டுகளில் ஒரு வீரர் இவ்வாறு செய்வது அசாதாரணமான எதிர்வினையாகவே கருதப்பட்டது. குறிப்பாக ஜார்டன் துடுப்பாட்டத்தின் போது தனது உணர்ச்சிகளை இவ்வளவாக வெளிக்காட்டுவது இல்லை.[10] இரண்டாவது ஆட்டப் பகுதியில் , பிராட்மேன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நூறு ஓட்டங்களை அடித்தார், இது ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி போட்டியில் வெற்றி பெறவும், தொடரை தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமன் செய்யவும் உதவியது.[11]
இந்த கால கட்டத்தில் ஜார்டின் தனது அணியின்பல வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டார். இவர் விருப்பப்படி பந்துவீச மறுத்தததற்காக இரண்டு முறை கூபி ஆலனுடன் வாதிட்டார் .[12] [13] மற்றும் இப்திகார் அலி கான் பட்டோடி நவாப் இவர் நிற்கக் கூரிய இடத்தில் நிற்க மறுத்ததால் இவருடன் மோதலில் ஈடுபட்டார்.[14]
மரபுரிமை
தொகுதுடுப்பாட்ட எழுத்தாளர் கிதியோன் ஹைக் கருத்துப்படி, ஜார்டின் "துடுப்பாட்ட விளையாட்டில் மிகவும் பழிவாங்கப்பட்ட மனிதராக" காணப்பட்டார். [15] இந்த கருத்து 1950 களில் இருந்து மங்கிவிட்டது, மேலும் சமீபத்திய காலங்களில், ஜார்டின் மிகவும் அனுதாபத்துடன் பார்க்கப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் ஜார்டினுடன் ஒப்பிடப்பட்டார், இவர் எதிரணிகளுக்கு எதிராக இரக்கமற்ற தன்மையைக் காட்டினார். [15]
சான்றுகள்
தொகு- ↑ Douglas, pp. 1–2.
- ↑ 2.0 2.1 Douglas, p. 3.
- ↑ Douglas, pp. 3–4.
- ↑ Douglas, p. 5.
- ↑ Frith, p. 120.
- ↑ Frith, p. 124.
- ↑ Douglas, p. 135.
- ↑ Le Piesse, p. 21.
- ↑ "Australia v England 1932–33". Wisden Cricketers' Almanack. John Wisden & Co. 1934. பார்க்கப்பட்ட நாள் 15 February 2010.
- ↑ Bowes, p. 107.
- ↑ Frith, p. 165.
- ↑ Douglas, p. 137.
- ↑ Frith, p. 116.
- ↑ Frith, p. 118.
- ↑ 15.0 15.1 Haigh, Gideon. "Gideon Haigh on Bodyline". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 March 2010.