டி. எஸ். திருமூர்த்தி

டி. எஸ். திருமூர்த்தி (T. S. Tirumurti, பிறப்பு 7 மார்ச் 1962) ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவுப் பணியைச் சேர்ந்த குடிமைப் பணியாளர் (தூதர்) ஆவார்.[7] இவர் இராஜதந்திரப் பணியில் 37 ஆண்டுகள் (1985-2022) சேவை செய்துள்ளார். இந்தியா 8 வது முறைாக ஐ. நா பாதுகாப்புச் அவைக்கான நிரந்தரமற்ற உறுப்பினரானதைத் தொடர்ந்து நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். [8] இவர் ஆகத்து 2021 இல் ஐ. நா. பாதுகாப்பு அவையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[9]

டி. எஸ். திருமூர்த்தி
2018 இல் திருமூர்த்தி
இந்தியாவுக்கான ஐ. நா. அவையின் நிரந்தர பிரதிநிதி
பதவியில்
19 மே 2020 – 30 சூன் 2022
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
முன்னையவர்சையத் அக்பருதீன்
பின்னவர்ருச்சிரா கம்போஜ்
செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகம்
பதவியில்
5 பிப்ரவரி 2018[1] – 30 ஏப்ரல் 2020
முன்னையவர்விஜய் கேசவ கோகலே [2]
பின்னவர்ராகுல் சப்ரா
இந்தியாவுக்கான மலேசியத் தூதர் [4]
பதவியில்
20 திசம்பர் 2013[3] – 4 பிப்ரவரி 2018
முன்னையவர்விஜய் கேசவ கோகலே[5]
பின்னவர்மிருதுல் குமார்[6]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மார்ச்சு 1962 (1962-03-07) (அகவை 62)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
துணைவர்கௌரி திருமூர்த்தி
வேலைஐ. எப்ஃ. எஸ்
தொழில்குடிமைப்பணி

இந்திய வெளியுறவுச் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கவுரவ பேராசிரியராக திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.[10] காந்திநகரில் உள்ள திருபாய் அம்பானி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆளுநர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ளகோயம்புத்தூரில் திருமூர்த்தி பிறந்தார்.[12] இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலுள்ள வித்யா மந்திர் பள்ளியில் படித்தார். இவர் தனது இளங்கலை வணிகவியல் பட்டத்தை சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், பெற்றார். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் புனித அன்னை ஆகியோரின் போதனைகள் இவரது வாழ்க்கையில் வழிகாட்டியுள்ளன. பின்னர் இவர் தனது எல். எல். பி (இளங்கலை சட்டங்கள்) பட்டத்தை 1985 ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாக சட்ட மையத்தில் பெற்றார். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் திருமூர்த்தியின் பேரன் ஆவார்.[13]

இவர் கௌரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமூர்த்தியின் மனைவி கௌரி ஓய்வு பெற்ற டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணனின் மகள் ஆவார்.[14] 1982 ஆம் ஆண்டு தேசிய இளையோர் சாம்பியன் பட்டத்தை வென்ற கௌரி பிரெஞ்சு இளையோர் ஓபன் போட்டியிலும் போட்டியிட்டுள்ளார். இவர் தற்போது டெல்லியில் ஒரு அறிவுசார் சொத்து சட்ட நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். இவர்களது மகன் விஸ்வஜித், மகள் பவானி ஆகியோரும் டென்னிசு வீரர்கள் ஆவர்.[15][16]

தொழில்

தொகு

திருமூர்த்தி 1985 இல் இந்திய வெளியுறவு சேவையில் இணைந்தார். இவர் கெய்ரோ, ஜெனீவா, காசா, வாஷிங்டன், டி. சி., ஜகார்த்தா மற்றும் கோலாலம்பூர் ஆகியவற்றின் இந்திய தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சகத்தில் செயலாளராகவும் (பூட்டான்), இயக்குனராகவும் (வெளியுறவு செயலாளர் அலுவலகம்), வங்கதேசம், இலங்கை, மியான்மர் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான வெளியுறவு இணைச் செயலாளராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக பிரிவவின் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவுக்கான பாலஸ்தீன தேசிய ஆணையத்தின் முதல் பிரதிநிதியாக திருமூர்த்தி இருந்தார்.[17][18] இவர் ஜகார்த்தா தூதரகத் துணை தலைவராகவும் மற்றும் மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையராகவும், இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் செயலாளராக வளைகுடா மற்றும் அரபு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கையாண்டார்.

அரபு மொழி பேசுபவராகவும், எகிப்து மற்றும் பாலத்தீனத்தில் பணியாற்றியவராகவும், வளைகுடா மற்றும் அரபு உலகத்தை டெல்லியில் செயலாளராகப் பணியாற்றி நல்ல முறையில் கையாண்டவராகவும், இருந்த திருமூர்த்தி அரபு உலகில் நிபுணராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டவராகத் திகழ்கிறார்.

ஐக்கிய நாடுகள் அவை

தொகு

சையத் அக்பருதீனைத் தொடர்ந்து 19 மே 2020 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பொறுப்பேற்றார் .[19]

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாக இருந்தபோது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் ஜூலை 2020 இல் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது .[20] 2021 ஜனவரி 1 ஆம் தேதி இந்தியா இரண்டு ஆண்டு காலத்திற்கு ஐ.நா பாதுகாப்பு அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2021-2025 ஆம் பதவி ஆண்டில் பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையத்துக்கு (CSW) தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஐ. நா. பாதுகாப்பு அவையின் தலிபான் பொருளாதாரத் தடைக் குழுவின் தலைவராகவும் ( இது1988 பொருளாதாரத் தடைக் குழு என்றும் அழைக்கப்படுகிறது), 2021-2022 ஆம் ஆண்டில் லிபியா பொருளாதாரத் தடைக் குழு (1970 பொருளாதாரத் தடைக் குழு என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் 2022 இல் ஐ. நா. அவையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் .[21]

மாதாந்திர சுழற்சி கொள்கைக்கு இணங்க, இவர் ஆகத்து 2021 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தலைவராக இருந்துள்ளார்.[22] இவரது தலைமையின் கீழ் நிறைவேற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் (யு. என். எஸ். சி. ஆர்) 2593 ஆகத்து 31 அன்று நிறைவேற்றப்பட்டது. இது ஒரு முக்கியமான தீர்மானம் ஆகும். குறிப்பாக பயங்கரவாதம் குறித்த அனைவரின் "கூட்டு கவலைகளை" கவனத்தில் எடுத்துக்கொண்டது. தீர்மானம் 1267 இன் கீழ் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள் உட்பட ஆப்கானிய மண்ணை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று தலிபான்களின் உறுதிப்பாட்டைக் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தனது அரசாங்கத்தை அறிவித்த பின்னர் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் இது என்பதால் இது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.[23]

திசம்பர் மாதம், பல தசாப்தங்களுக்குப் பிறகு, முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு பற்றிய வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. காலநிலை மாற்றம் குறித்த விவாதத்திற்கான மன்றம் ஐ. நா. பாதுகாப்பு அவை அல்ல என்பதை திருமூர்த்தி அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் இந்த தீர்மானம் பொருத்தமான மன்றத்திலிருந்து பொறுப்பைத் தவிர்ப்பதற்கான உந்துதல் முயற்சி என்று கூறினார். காலநிலை மாற்றத்தை நாடுகளுக்குள் கையாள வேண்டும் என்று இந்தியா கடுமையாக உணர்த்தியது[24]

பிறகு 2022 உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியதற்கான காரணங்களை திருமூர்த்தி விளக்கினார்.[25][26] அவையின் 15 உறுப்பினர்களில், 11 நாடுகள் ஆதரவாகவும், 1 நாடு (ரஷ்யா) எதிராகவும் வாக்களித்தது, சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் தீர்மான வாக்கெடுப்பிலிருந்து விலகியது.ரஷ்யாவின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதன் காரணமாக தீர்மானம் தோல்வியடைந்தது .[26]

மே 2022 இல், இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான நெதர்லாந்து நாட்டு தூதரின் ட்வீட்டுக்கு பதிலளித்தபோது திருமூர்த்தி மீண்டும் செய்திகளில் அடிபடத் துவங்கினார். “உக்ரைன் தொடர்பான ஐ.நா பொது அவையின் அமர்வின் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கக்கூடாது. ஐ. நா சாசனத்தை மதிக்கவும்” என்று டுவிட்டரில் பதிவிட்ட டச்சு தூதர் கரேல் வான் ஓஸ்டெரோமிடம் "தயவுசெய்து எங்களுக்கு அறிவுரை கூற வேண்டாம், என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும்" என்று திருமூர்த்தி பதிலளித்தார்.[27]

வெளியீடுகள்

தொகு

திருமூர்த்தி பின்வரும் புத்தகங்களை எழுதியுள்ளார்-

  • வானங்களை முத்தமிடுதல்: கைலாஷ் - மானசரோவர் யாத்திரை (1999)[28]
  • கிளைவ் அவென்யூ (2002)[29]
  • சென்னைவாசி (2012)[30]

மேற்கோள்கள்

தொகு
  1. name="archive.org">"MEA - About MEA : Profiles : Secretary (ER)". 20 February 2018. Archived from the original on 20 February 2018.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. Diplomat T S Tirumurti Appointed Economic Relations Secretary News18. Retrieved 29 August 2021
  3. "Welcome to High Commission of India, Kuala Lumpur (Malaysia)". 20 February 2018. Archived from the original on 20 February 2018.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  4. "Vijay Gokhale, T S Tirumurti rise on Malaysia experience". The Times of India.
  5. "Know Your Diplomat: India's new ambassador to Germany Vijay Keshav Gokhale". www.babusofindia.com.
  6. "Indian Mandarins is Exclusive News, Views and Analysis News portal on Indian bureaucracy, governance, PSUs and Corporate".
  7. "IFSA bid fond farewell to Mr T S Tirumurti, PR at UN, New York..." (Tweet). Missing or empty |user= (help); Missing or empty |number= (help); Missing or empty |date= (help)
  8. "T S Tirumurti appointed India's Permanent Representative to the UN" (in en). https://gulfnews.com/world/asia/india/t-s-tirumurti-appointed-indias-permanent-representative-to-the-un-1.1588183494233. 
  9. "Ambassador T. S. Tirumurti (India) on the programme of work for the month of August - Security Council Media Stakeout | UN Web TV". webtv.un.org (in ஆங்கிலம்). 2021-08-02. பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.
  10. "Department of Humanities and Social Sciences, IIT Madras, India". IIT Madras. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  11. "Board of Governors | Dhirubhai Ambani Institute of Information and Communication Technology". www.daiict.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.
  12. name="timesofindia.indiatimes.com">A. Subramani (5 May 2020). "Proud to be from Chennai, says civil servant made India's representative to UN | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.
  13. "INSA :: Deceased Fellow Detail". insaindia.res.in. Archived from the original on 2021-03-06. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  14. "Ramanathan Krishnan". prtraveller.blogspot.in. 21 March 2015.
  15. A. Subramani (5 May 2020). "Proud to be from Chennai, says civil servant made India's representative to UN | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.A. Subramani (5 May 2020).
  16. "College Tennis Teams - University of Denver - Team Roster - Bhavani Tirumurti". www.collegetennisonline.com.
  17. "Shodhganga : a reservoir of Indian theses @ INFLIBNET" (PDF).
  18. "The Telegraph - Calcutta : Opinion". www.telegraphindia.com. Archived from the original on 17 November 2004.
  19. "TS Tirumurthy will permanent representative of India to UN to replace Syed Akbaruddin, | NewsCrab" (in english). www.newscrab.com. https://www.newscrab.com/article/india/ts-tirumurthy-will-permanent-representative-of-india-to-un-to-replace-syed-akbaruddin-21792. பார்த்த நாள்: 30 April 2020. [தொடர்பிழந்த இணைப்பு]
  20. Chaudhury, Dipanjan Roy. "India wins 184 out 192 votes to enter UN Security Council". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/india-mexico-norway-ireland-elected-to-un-security-council/articleshow/76435650.cms. 
  21. "Chair of the Counter-Terrorism Committee | Security Council - Counter-Terrorism Committee (CTC)". www.un.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-30.
  22. "India set to take over as President of UN Security Council for month of August". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  23. "India's envoy Tirumurti calls for inclusive dispensation in Afghanistan at UNSC". WION (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-30.
  24. Haidar, Suhasini (2021-12-18). "Explained | Why did India reject UNSC draft on climate?" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/explained-why-did-india-reject-unsc-draft-on-climate/article37988088.ece. 
  25. Bengali, Shashank (2022-02-25). "Live Updates: Kyiv Rocked by Explosions for Second Night" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/live/2022/02/25/world/russia-ukraine-war. 
  26. 26.0 26.1 Security Council Fails to Adopt Draft Resolution on Ending Ukraine Crisis, as Russian Federation Wields Veto, United Nations (25 February 2022).
  27. ""Don't Patronize Us Ambassador": India's UN Envoy On Tweet Over Ukraine". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
  28. "Book review: T.S. Tirumurti's 'Kissing The Heavens'". India Today. 31 May 1999.
  29. "The Sunday Tribune - Spectrum - Literature". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
  30. "Tirumurti's 'Chennaivaasi' is a charming read". 8 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._திருமூர்த்தி&oldid=4107616" இலிருந்து மீள்விக்கப்பட்டது