டேர் மாளிகை
டேர் மாளிகை (Dare House) சென்னையிலுள்ள ஓர் எழில்படுக் கட்டிடம் ஆகும். இதில் தற்போது முருகப்பாக் குழுமத்தின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. 1938க்கும் 1940க்கும் இடையில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் வில்லியம் டேர் என்ற ஆங்கிலேய அதிகாரியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. வில்லியம் டேர் 1819-1838 காலகட்டத்தில் பாரி & கோ நிறுவனத்தின் ஒரு பங்காளியாக இருந்துள்ளார். இதனாலேயே இந்தக் கட்டிடம் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் பகுதி பரவலாக பாரி முனை என வழங்கப்படுகின்றது. தற்போது ஈஐடி பாரி நிறுவனம் முருகப்பா குழுமத்தின் முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது.
வரலாறு
தொகுஇந்தக் கட்டிடம் உள்ள பகுதி முன்பு முத்தையால் பேட்டையின் பகுதியாக இருந்தது. 1758-59இல் கர்நாடகப் போரில் புனித ஜார்ஜ் கோட்டை முற்றுகையின்போது இங்குதான் பிரெஞ்சுப் படைகளின் பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்தன. போர் முடிவடைந்த பிறகு மீண்டும் இத்தகைய நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு இங்கிருந்த கருப்பர் நகரம் முற்றிலுமாக தரை மட்டமாக்கப்பட்டு திறந்தவெளி உருவாக்கப்பட்டது. எஸ்பிளேடு என அழைக்கப்பட்ட இப்பகுதியை ஆறு எல்லைக் கம்பங்களைக் கொண்டு அடையாளமிட்டனர். இதில் தற்போது ஐந்து அழிந்துவிட்டன. எஞ்சிய ஒன்று டேர் மாளிகை வளாகத்தினுள் இன்றுமுள்ளது.
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முதன்மைப் பொறியாளராக இருந்த ஜான் கால் இங்கு பூங்கா மாளிகையைக் கட்டினார். இதுவே இங்கு கட்டப்பட்ட முதல் கட்டிடமாகும். இதனை பின்னர் ஆற்காட்டரசர் மொகமது அலி கானிற்கு விற்றார்.
ஈஐடி பாரி நிறுவனம்
தொகுஇந்தியத் துணைக்கண்டத்தின் மிகத் தொன்மையான வணிக நிறுவனங்களில் ஈஐடி பாரி ஒன்றாகும்; இதனை 1780களில் வேல்சிலிருந்து இந்தியா வந்த தாமஸ் பாரி என்ற வணிகர் துவக்கினார். 1788இல் சூலை 17 அன்று வங்கி மற்றும் சில்லறை வணிக நிறுவனமாகத் துவக்கினார்.[1]
1819இல் "பாரி & டேர்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது; ஜான் வில்லியம் டேர் பங்காளியாக இணைந்தார். நாளடைவில் பாரி நிறுவனமும் ஈஸ்ட் இந்தியா டிசுடில்லரிசு (East India Distilleries) என்ற நிறுவனமும் இணைக்கப்பட்டு ஈஐடி பாரி என அழைக்கப்பட்டது. 1981இல் இதன் முதன்மை உரிமையை முருகப்பா குழுமம் நிதி நிறுவனங்களிடமிருந்து பங்குகளை வாங்கிப் பெற்றது.
முருகப்பாக் குழுமம்
தொகுமுருகப்பா குடும்பத்திற்கு பெருமளவில் உரிமையுடைய இந்த நிறுவனங்கள் 1900களில் நிறுவப்பட்டது.[2][3][4]. இந்தக் குழுமத்தில் இந்திய தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உட்பட 28 நிறுவனங்கள் அடங்கியுள்ளன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றது. இதில் உள்ள முதன்மை நிறுவனங்கள்: கார்பொரண்டம் யூனிவர்சல், சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம், சோழமண்டலம் பொதுக் காப்பீடு நிறுவனம், கோரமண்டல் இன்டர்நேசனல், கோரமண்டல் பொறியியல் நிறுவனம், ஈஐடி நிறுவனம், பாரி அக்ரோ, டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆகியன. கோவையிலுள்ள சாந்தி கியர்சு இந்தக் குழுமத்தினுடையதாகும்.
இக்குழுமத்தின் தற்போதைய செயல் தலைவராக எம்.எம்.முருகப்பன் செயல்படுகின்றார். [5]. தேய்ப்புப் பொருட்கள், தானுந்து உதிரிபாகங்கள், மிதிவண்டிs, சீனி, வேளாண் கருவிகள், உரங்கள், பெருந்தோட்டங்கள், உயிரிப் பொருட்கள், ஊட்டச்சத்து மருந்துகள் என பல துறைகளிலும் விரிந்துள்ளனர். இத்துறைகளில் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆழ்ந்த பிணைப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் 13 மாநிலங்களிலும் உலகின் ஐந்து கண்டங்களிலும் பரந்துள்ளனர்.
இக்குழமத்தின் முன்னணி வணிகச் சின்னங்களாக பிஸ்ஏ, எர்குலிசு, பால்மாஸ்டர், அஜாக்சு, பாரிசு, சோழா, பரம்போசு ஆகியன உள்ளன. இதன் வருமானம் INR 300 பில்லியனாக உள்ளது;இதில் 35,000 பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.[6][7].
இந்தக் குழுமத்தின் அடிக்கல் 1900இல் ஏ.எம்.எம்.முருகப்பா செட்டியாரால் நிதி நிறுவனமாக தொடங்கப்பட்டது.[8] பர்மாவில் (தற்போது மியான்மர்) துவங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளில் விரிவடைந்தது. 1930களில் இந்தியாவில் கால் பதித்தது.
மேற்கோள்கள்
தொகு- S. Muthiah (11 திசம்பர் 2002). "The house that Parry built". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2003-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030312235950/http://thehindu.com/thehindu/mp/2002/12/11/stories/2002121100070300.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-03-12. பார்க்கப்பட்ட நாள் 2018-03-27.
- ↑ "The Economist: A rare south Indian business house does things the difficult way". 1 June 2013. https://www.economist.com/news/business/21578693-rare-south-indian-business-house-does-things-difficult-way-harder-path.
- ↑ Raghunathan, Anuradha. "Forbes article on Murugappa Group". https://www.forbes.com/global/2011/1107/india-billionaires-11-murugappa-vellayan-old-bold-raghunathan.html.
- ↑ "How Gen 5 is reimagining the 117-year-old Murugappa Group". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2018-03-26.
- ↑ Chandrashekhar, Anandi (2018-02-05). "Murugappa Group appoints MM Murugappan as executive chairman". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/banking/finance/murugappa-group-appoints-mm-murugappan-as-executive-chairman/articleshow/62792748.cms.
- ↑ "Murugappa Group clocks best ever performance in 2016-17". The Economic Times. 2017-05-19. https://economictimes.indiatimes.com/markets/stocks/earnings/murugappa-group-clocks-best-ever-performance-in-2016-17/articleshow/58753009.cms.
- ↑ "Conglomerates in India | Murugappa Group | Business Groups" (in en-US). 2015-10-14 இம் மூலத்தில் இருந்து 2018-03-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327102305/http://www.murugappa.com/about-us/.
- ↑ "Murugappa Group History". Archived from the original on 2016-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-03-27.
வெளி இணைப்புகள்
தொகு- [[https://web.archive.org/web/20210415064052/https://www.murugappa.com/ பரணிடப்பட்டது 2021-04-15 at the வந்தவழி இயந்திரம்]] முருகப்பா குழுமத்தின் அலுவல்முறை இணையதளம்