தடித்த அலகு பச்சைப் புறா
தடித்த அலகு பச்சைபுறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கொலும்பிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | தெரெரான்
|
இனம்: | தெ. கர்விரோசுட்ரா
|
இருசொற் பெயரீடு | |
தெரெரான் கர்விரோசுட்ரா ஜெமிலின், 1789 |
தடித்த அலகு பச்சைப் புறா (Thick-billed green pigeon)(திரெரான் கர்விரோசுட்ரா) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.
வகைப்பாட்டியல்
தொகுதடித்த அலகு பச்சைப் புறாவை 1789ஆம் ஆண்டில் செர்மன் இயற்கை ஆர்வலர் ஜோஹன் பிரெட்ரிக் கெமெலின் கார்ல் லின்னேயஸின் சிஸ்டமா நேச்சுரேவின் திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பில் விவரித்தார். இவர் கொலம்பா பேரினத்தில் உள்ள அனைத்து புறாக்கள் மற்றும் காட்டுப்புறாக்களுடன் இதை வைத்து கொலம்பா கர்விரோசுட்ரா என்ற இருசொல் பெயரை உருவாக்கினார்.[2] 1783ஆம் ஆண்டில் இங்கிலாந்து பறவையியல் வல்லுநரான ஜான் லாதம் என்பவரால் விவரிக்கப்பட்டு விளக்கப்பட்ட "தென் கடலில் உள்ள தன்னா தீவில்" இருந்து "கொக்கி அலகு புறா" என்ற இவரது விளக்கத்தை கெமெலின் அடிப்படையாகக் கொண்டார்.[3] லாதம் தனது மாதிரி நியூ ஹெப்ரைடில் உள்ள டான்னா தீவிலிருந்து வந்தது என்று தவறாக நம்பினார். 1912-ல் ஹாரி சி. ஓபர்ஹோல்சரால் இந்த வகை இடம் மலாய் தீபகற்பமாக நியமிக்கப்பட்டது.[4][5][6] 1816ஆம் ஆண்டில் பிரெஞ்சு பறவையியல் வல்லுநரான லூயிஸ் ஜீன் பியர் வைலோட்டால் அறிமுகப்படுத்தப்பட்ட திரெரான் பேரினத்தைச் சேர்ந்த தடித்த அலகு பச்சைப் புறா இப்போது சுமார் 30 பச்சைப் புறாச் சிற்றினங்களுடன் வைக்கப்பட்டுள்ளது.[7][8] "புறா" என்று பொருள்படும் பண்டைய கிரேக்க சொல்லான ட்ரெரோனிலிருந்து (trērōn) இந்த பேரினத்தின் பெயர் இடப்பட்டது. கர்விரோசுட்ரா என்ற சிற்றினப் பெயரானது இலத்தீன் கர்வசு அதாவது "வளைந்த" என்று பொருள்படும் -ரோஸ்ட்ரிஸ் உடன் "பில்ட்" என்று ஒருங்கிணைந்த சொல்லாகும்.[9]
ஒன்பது துணையினங்கள் இந்தச் சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[8]
- தி. க. நிப்பாலென்சிசு (காட்ஜ்சன், 1836) – மத்திய நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியா மியான்மர் வழியாக தெற்கு இந்தோசீனா வரை
- தி. க. கெயினானசு ஆர்டெர்ட் & கோட்ஜ்சன், 1918 - ஹைனன் தீவு (தென்கிழக்கு சீனாவில்)
- தி. க.. கர்விரோசுட்ரா (ஜெமிலின், 1789) - மலாய் தீபகற்பம் மற்றும் சுமத்ரா
- தி. க. ஹாலிப்லசு ஓபர்ஹோல்சர், 1912 – சிமியூலு (வடக்கு சுமத்ராவின் மேற்கு)
- தி. க.பெகசு ஓபர்ஹோல்சர், 1912 – நியாஸ் (வடக்கு சுமத்ராவின் மேற்கு)
- தி. க. சுமிக்ரசு ஓபர்ஹோல்சர், 1912 - சிபுரா, சைபரட் மற்றும் பத்து தீவுகள் (மத்திய சுமத்ராவின் மேற்கு)
- தி. க. கைபோதாப்சினசு ஓபர்ஹோல்சர், 1912 – எங்கனோ தீவு (தெற்கு சுமத்ராவின் மேற்கு)
- தி. க. நாசிகா செல்ஜெல், 1863 – போர்னியோ
- தி. க. எரிமாக்ரசு ஓபர்ஹோல்சர், 1924 - மிண்டோரோ மற்றும் பலவான் குழு (வடமேற்கு, தென்மேற்கு பிலிப்பைன்ஸ்)
விளக்கம்
தொகுபிற பச்சைப் புறாக்களுடன் ஒப்பிடும் போது, சிறிய அளவிலான புறா. உடல் நீளம் 26 cm (10 அங்) உடையது. சிவப்பு அடிப்பாகமும், அகன்ற நீலம் கலந்த பச்சை நிற கண் வளையமும், சாம்பல் நிற தலைப்பகுதியும் தடித்த வெளிர் பச்சை நிற அலகும் கொண்டது. இறக்கைகள் மஞ்சள் நிற வெளிப்புற விளிம்புடன் கருப்பு நிற முதன்மை மற்றும் இரண்டாம் நிலைகளைக் கொண்டுள்ளன. புறாவின் அடிப்பகுதி பச்சை நிறத்தில் காணப்படும் . தொடைப்பகுதி கரும் பச்சை நிறத்தில் வெண்மையான செதில்களுடன் காணப்படும். பெண் புறாக்கள் வெள்ளை நிற செதில்களுடன் பச்சை கலந்த வால் மறைப்புகளுடன் உள்ளன. ஆண் புறாக்கள் மெரூன் நிற முதுகு மற்றும் மந்தமான கசுகொட்டை கீழ் வால் உறைகளைக் கொண்டிருக்கும்.[10][11]
பரவலும் வாழிடமும்
தொகுதடித்த அலகு பச்சைப்புறா இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் கிழக்குப் பகுதிகள் முழுவதும், கிழக்கு இமயமலையிலிருந்து போர்னியோ மற்றும் சுமத்ரா வரை பரவியுள்ளது.
வங்காளதேசம், பூட்டான், புரூணை, கம்போடியா, ஆங்காங், இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து, திபெத் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.[10][11]
நடத்தை மற்றும் சூழலியல்
தொகுமரக் கிளைகளில் மெதுவாக நடந்து செல்லும் இயல்புடையது. அத்திப்பழங்களில் உட்பகுதியினை உண்ணுகின்றன.[11]
படங்கள்
தொகு-
புக்சா புலிகள் காப்பகம், மேற்கு வங்காளத்தில்
-
புக்சா புலிகள் காப்பகம், மேற்கு வங்காளத்தில்
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2018). "Treron curvirostra". IUCN Red List of Threatened Species 2018: e.T22691160A130177198. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22691160A130177198.en. https://www.iucnredlist.org/species/22691160/130177198. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Gmelin, Johann Friedrich (1789). Systema naturae per regna tria naturae : secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis (in Latin). Vol. 1, Part 2 (13th ed.). Lipsiae [Leipzig]: Georg. Emanuel. Beer. p. 777.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Latham, John (1783). A General Synopsis of Birds. Vol. 2, Part 2. London: Printed for Leigh and Sotheby. p. 632; Plate 59.
- ↑ Harry C. Oberholser (1912). "Descriptions of one hundred and four new species and subspecies of birds from the Barussan Islands and Sumatra". Smithsonian Miscellaneous Collections 60 (7): 1-22 [3, Note]. https://www.biodiversitylibrary.org/page/8910432.
- ↑ Peters, James Lee, ed. (1937). Check-List of Birds of the World. Vol. 3. Cambridge, Massachusetts: Harvard University Press. p. 14.
- ↑ Gibbs, D.; Barnes, E.; Cox, J. (2001). Pigeons and Doves: A Guide to the Pigeons and Doves of the World. Robertsbridge, UK: Pica Press. pp. 435–436. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-873403-60-0.
- ↑ Vieillot, Louis Jean Pierre (1816). Analyse d'une Nouvelle Ornithologie Élémentaire (in French). Paris: Deterville/self. p. 49.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 8.0 8.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2022). "Pigeons". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 389, 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ 10.0 10.1 Robson, Craig, and Richard Allen. New Holland field guide to the birds of South-East Asia. New Holland Publishers, 2005
- ↑ 11.0 11.1 11.2 "Pictures and description of the Pigon birds". Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-03-11.