தண்டி யாத்திரை சிலை

தண்டி யாத்திரை சிலை அல்லது பதினொருவரின் சிலை(Gyarah Murti) என்பது இந்தியாவின் புது புது தில்லியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நினைவுச்சின்னமாகும், மகாத்மா காந்தியின் தலைமையில் நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியான உப்புச் சத்தியாகிரகம் சென்றதை நினைவுகூரும் வகையில் சிற்பி,தேவி பிரசாத் ராய் சௌத்ரி இதனை சிற்பமாக வடிவமைத்துள்ளார்.

பல்வேறு சமூக கலாச்சார, மத மற்றும் பொருளாதார பின்னணியில் உள்ள பதினொரு மனிதர்கள் கொண்ட ஒரு குழுவானது, மகாத்மா காந்தியை பின்பற்றி செல்வதை இச்சிலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தண்டி அணிவகுப்பை சித்தரிப்பதாக[1] நம்பப்படும், இந்த சிலையின் பிரதிகள், இந்தியாவின் பிற நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளதோடு பழைய 500 ரூபாய் நாணயத் தாளிலும் இடம்பெற்றுள்ளது. [2] [3]

பதினொருவரின் சிலை

அமைவிடம்

தொகு

புது டெல்லியில் உள்ள ஜனாதிபதி தோட்டத்திற்கு அருகில் சர்தார் படேல் பிரிவும் அன்னை தெரசா வளைவும் சந்திக்கும் டி வடிவ சந்தியில், இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. [4] [5] [6] சர்தார் படேல் சாலை வழியாக இந்த சிலையை பார்வையிட அணுகமுடியும். இந்த சிலையை குறிப்பிட்டே இது அமைந்துள்ள வட்டாரமுளுவதும் கியாரா மூர்த்தி பகுதி என்று அழைக்கப்படுகிறது. [7]

 
சர்தார் படேல் மார்க் மற்றும் அன்னை தெரசா வளைவு சந்திப்பில் இந்த சிலை அமைந்துள்ளது.

சிற்பி

தொகு

இந்திய சுதந்திரத்தின் வெள்ளி விழாவை நினைவுகூரும் வகையில் 1972 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக இந்திய அரசால் நியமிக்கப்பட்ட சிலையை உருவாக்கியவர் திரு தேவி பிரசாத் ராய் சௌத்ரி, அவர்களாவார். [8] [9] [10] இது பாட்னாவில் உள்ள தியாகிகள் நினைவிடத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு, 1959 ஆம் ஆண்டில் இச்சிலை சவுத்திரியால் முடிக்கப்பட்டது, கொடி ஏந்தியவரைப் பின்தொடர்ந்து விழுந்தாலும் மீண்டும் எழுந்து வரும் ஆறு உருவங்களைக் கொண்டுள்ள இந்த பாட்னாவில் உள்ள தியாகிகள் நினைவிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் சாதாரண இந்தியர்கள் செய்த தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.[11]

 
பாட்னாவில் உள்ள தியாகிகள் நினைவிடம்

வடிவமைப்பு

தொகு

மகாத்மா காந்தி முதன்மையாக நடந்து செல்லுவதையும் அவரைத் தொடர்ந்து, புடவை கட்டிய ஒரு பெண், மூன்று ஆண்களைக் கொண்ட ஒரு குழு - ஒரு இந்து, ஒரு சீக்கியர், ஒரு முஸ்லீம், ஒரு தலைப்பாகை அணிந்த ஆண், ஒரு கிறிஸ்தவ பாதிரியார், ஒரு பெண் , ஒரு மெலிந்த ஆண் உட்பட பதினொரு நபர்களுடன் இச்சிலை அமைந்துள்ளது. ஒரு இளைஞன் சோர்வாக இருக்கும் ஒரு முதியவரை எழுந்து குழுவில் சேர வலியுறுத்தும் வார்ப்புரு அமைக்கப்பட்டுள்ளது. [12] சிலைகள் வெண்கலத்தில் 8 அடிகள் (2.4 m) கொன்டதாகவும், முழு அமைப்பும் 26 மீட்டர்கள் (85 அடி) நீளம் மற்றும் 3 மீட்டர்கள் (9.8 அடி) உயரம் [13] [14] கொன்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது

தண்டி யாத்திரையிம் காந்தியின் அணிவகுப்பை இந்தச் சிலை பிரதிபலிக்கிறது என்றும், சில உருவங்கள் மாதங்கினி ஹஸ்ரா, சரோஜினி நாயுடு, பிரம்மபந்தப் உபாத்யாய் மற்றும் அப்பாஸ் தியாப்ஜி போன்றோரை மாதிரியாகக் கொண்டதாகவும் நம்பப்படுகிறது. [15] [16] இருப்பினும், இந்த இரண்டு அனுமானங்களும் சர்ச்சைக்குரியவை. இந்த ஊர்வலத்தில் காந்தியுடன் சென்ற சத்தியாக்கிரகிகளின் குழுவில் பெண்கள் யாரும் இல்லாததால் இந்த சிலை உப்பு அணிவகுப்பின் பிரதிநிதித்துவம் அல்ல என்று கூறப்பட்டது. [17] அந்தச் சிலையிலுள்ள பலகையில், "அன்னிய ஆட்சிக்கு எதிராக, தலைமுறை தலைமுறையாக, போராடி, தியாகம் செய்த எண்ணற்ற இந்தியர்களின் நினைவாக, இந்திய தேசிய காங்கிரசின் மகாத்மா காந்தியின் தலைமை சுதந்திரம் பெற்று, ஜவஹர்லால் நேரு முதல் பிரதமரானார் . 15 ஆகஸ்ட் 1947 இல் சுதந்திர இந்தியா" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.[18] சௌத்ரியின் மற்ற படைப்புகளில் உள்ளதைப் போலவே, காந்தியைத் தவிர, பதினோருவரின் சிலையில் உள்ள நபர்கள் யாரும் புகழ்பெற்றவர்கள் அல்ல, ஆனால் பல்வேறு வகுப்புகள் மற்றும் சமூகங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான பொதுவான காரணத்தில் இந்தியா ஒன்றுபட்டது. [19] இந்தச் சிலை டெல்லியின் பொதுக் கலைக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. [20] [21]

பிரதிகள் மற்றும் பிற சித்தரிப்புகள்

தொகு
 
அக்டோபர் 1997 - நவம்பர் 2016 இடையே வெளியிடப்பட்ட 500 ரூபாய் நோட்டின் பின்புறம்

முதலில் விலகியது யார்? என்ற, கலைஞர் ஜிகி ஸ்காரியாவின் காப்பகத் தாளில் ஒரு இலக்கமுறை பதிப்பில், காந்தியைப் பின்தொடரும் சிலைகள் திரும்பி பதினோரு பேரும் அவருக்கு எதிர் திசையில் நடப்பது போல் தோன்றும் திருத்தம் செய்யப்பட்ட புகைப்படத்தில் இதன் பிரதி பயன்படுத்தப்பட்டுள்ளது . [22] [23] இந்த 2010 ஆம் ஆண்டின் படைப்பு காந்தியின் இலட்சியங்களிலிருந்து இந்தியா வேறுபட்டு செல்வதோடு வளர்ந்து வரும் வகுப்புவாத மற்றும் சாதிய வன்முறை பற்றிய கருத்தை பிரதிபலிக்கிறது. [24] [25]

2011 ஆம் ஆண்டு கர்நாடகாவின் மைசூரில் பதினோருவரின் சிலையின் பிரதி நிறுவப்பட்டது,

2015 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் இதேபோல் கட்டப்பட்ட பிரதியானது அசலில் உள்ளதைப் போல பத்துக்குப் பதிலாக ஒன்பது பேர் மட்டுமே பின்தொடர்பவர்கள் என்று வெளிவந்தபோது சர்ச்சையை சந்தித்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, நகராட்சி அதிகாரிகள், அதனை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. [26] [27] [28] [29] [30]

டோகோவால் வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டு அஞ்சல்தலையில் பதினோருவரின் சிலை இடம்பெற்றுள்ளது.[31]

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், 2019 ஆம் ஆண்டில் இந்திய தபால் மூலம் நவீன இந்தியாவில் காந்திய பாரம்பரியம் குறித்த தொடரின் ஒரு பகுதியாக ,வெளியிடப்பட்ட அஞ்சல்தலையிலும் இதன் உருவம் இடம்பெற்றுள்ளது. [32]

இந்தியாவின் பழைய 500 ரூபாய் தாளின் பின்புறத்தில் இச்சிலையின் உருவம் இடம்பெற்றுள்ளது. [33]

சர்ச்சைகள்

தொகு

1999 ஆம் ஆண்டு காந்தியின் சிலையில் இருந்த உருண்டைக் கண்ணாடிகள் திருடப்பட்டன, அதன்பின் அந்தச் சிலை கண்ணாடிகள் இல்லாமல் இருந்துவருகிறது. இன்னமும் திருடன் பிடிபடவில்லை, அத்திருட்டும் தீர்க்கப்படாமல் உள்ளது. [34] [35]

மேற்கோள்கள்

தொகு
  1. "குஜராத்தின் தண்டியில் தண்டி யாத்ரா உப்பு நினைவகம் & அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்".
  2. "This Gandhi Jayanti, we follow trail of the Mahatma's statues in Delhi NCR" (in en). Hindustan Times. 1 October 2016. https://www.hindustantimes.com/india-news/ahead-of-gandhi-jayanti-here-s-a-trail-of-the-mahatma-s-statues-in-the-capital/story-05TqaoT72tHScsB1SLmPiO.html. 
  3. "Glimpses of Gandhi: Places you can visit" (in en). Hindustan Times. 2 October 2019. https://www.hindustantimes.com/india-news/glimpses-of-gandhi-places-you-can-visit/story-ICQ1OXPVuSPJoahpenTe3L.html. 
  4. Brown, Judith; Parel, Anthony (21 February 2011). The Cambridge Companion to Gandhi (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-82484-2. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
  5. Das, Arpita (6 April 2019). "The women who heeded Gandhi's call" (in en). https://www.livemint.com/mint-lounge/features/the-women-who-heeded-gandhi-s-call-1554530300409.html. 
  6. "Mahatma Gandhi's legacy looms large over Rashtrapati Bhavan" (in en). 4 October 2020. https://indianexpress.com/article/express-sunday-eye/mahatma-gandhis-legacy-looms-large-over-rashtrapati-bhavan-6689174/. 
  7. "Delhi's missing public art" (in en). 27 March 2009. https://indianexpress.com/article/cities/delhi/delhis-missing-public-art/. 
  8. . 19 July 2022. 
  9. . 23 March 2018. {{cite book}}: Missing or empty |title= (help)
  10. . 16 October 2015. 
  11. "தியாகிகள் நினைவிடம்".
  12. "Here's All About Gyarah Murti, A Massive & Glistening Black Sculpture In The Heart Of The City" (in ஆங்கிலம்). 12 March 2022. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
  13. "Public Art: Sculptures by Deviprasad Roy Chowdhury capture key moments in Indian History". 17 June 2021. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
  14. Milton, Lawrence; Aug 10, H. M. Aravind / TNN / Updated. "I-Day gift: Bringing alive Dandi March" (in en). The Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/9516666.cms. 
  15. . 6 April 2019. 
  16. . 17 June 2021. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  17. . 9 June 2015. {{cite book}}: Missing or empty |title= (help)
  18. . 9 June 2015. {{cite book}}: Missing or empty |title= (help)
  19. . 30 March 2021. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  20. . 27 March 2009. 
  21. . 10 October 2010. 
  22. "Artists across generations have painted the Mahatma" (in en). 2 October 2021. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/artists-generations-painted-mahatma-gandhi-jayanti-october-2-7546717/. 
  23. "Bapu as a muse" (in en). https://www.dailypioneer.com/2020/vivacity/bapu-as-a-muse.html. 
  24. Cultural Memories of Nonviolent Struggles: Powerful Times (in ஆங்கிலம்). Springer. 9 June 2015. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
  25. "A look at Mahatma Gandhi through the eyes of artists" (in Indian English). Condé Nast. 2 October 2019. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
  26. "Replica of 'Gyarah Moorti' unveiled in city" (in en). 15 August 2011. https://www.deccanherald.com/content/184058/replica-gyarah-moorti-unveiled-city.html. 
  27. "I-Day gift: Bringing alive Dandi March" (in en). http://timesofindia.indiatimes.com/articleshow/9516666.cms. 
  28. "Godhra's 'Gyarah Murti' minus one, to be replaced" (in en). 7 July 2016. https://indianexpress.com/article/cities/ahmedabad/godhras-gyarah-murti-minus-one-to-be-replaced-2898700/. 
  29. "Godhra municipality begins work to fix Gyarah Murti mural" (in en). 29 July 2016. https://timesofindia.indiatimes.com/city/vadodara/godhra-municipality-begins-work-to-fix-gyarah-murti-mural/articleshow/53445774.cms. 
  30. "Missing 'Gyarah Murti' figure: Godhra Municipality begins work to modify Dandi march sculpture" (in en). 30 July 2016. https://indianexpress.com/article/cities/ahmedabad/missing-gyarah-murti-figure-godhra-municipality-begins-work-to-modify-dandi-march-sculpture-2943540/. 
  31. Life of Mahatma Gandhi through Philately: Gandhi Stamp Catalogue (in ஆங்கிலம்). Catabooks.
  32. "Postage Stamps Highlight Gandhian Heritage in Modern India" (in ஆங்கிலம்). 20 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
  33. "Iconic sculpture in the heart of Delhi" (in English). Ministry of Culture, Government of India. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  34. "What makes this Gandhi statue in Luxembourg a rare find" (in en). https://www.theweek.in/leisure/society/2019/10/23/what-makes-this-gandhi-statue-luxembourg-rare-find.html. 
  35. "Gandhi statue without glasses 18 years after theft" (in en). 1 October 2018. https://www.hindustantimes.com/delhi-news/gandhi-statue-without-glasses-18-years-after-theft/story-pdMWVQJ2eyy1FKeowUnELM.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டி_யாத்திரை_சிலை&oldid=3888556" இலிருந்து மீள்விக்கப்பட்டது