இந்தியாவின் மக்கள் தொகையியல்

இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையே கொண்டிருந்தாலும் உலகின் 17.5 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா மட்டுமேயாகும். ஏறக்குறைய 50 சதவிகிதம் 25 வயதிற்கும் , 65% சதவிகிதம் 35 வயதிற்கு குறைந்தவர்களாவர் .[2] 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி , 72.2 சதவிகிதம் மக்கள் 6,38,000 க்கும் அதிகமான கிராமங்களில் வாழ்கின்றனர். மீதமுள்ள 27.8 சதவிகித மக்கள் 5100-க்கும் மேற்பட்ட பெரு மற்றும் சிறு நகரங்களில் வாழ்கின்றனர்.[3][4]

{{{place}}}-இன் மக்கள் தொகையியல்
மக்கள் தொகை1,342,512,706 (செப்டம்பர் 2017)[1](இரண்டாம் இடம்)
வளர்ச்சி வீதம்1.51% (2009 கணிப்பு) (93ஆம் இடம்)
பிறப்பு வீதம்20.22 births/1,000 population (2013 கணிப்பு)
இறப்பு வீதம்7.4 deaths/1,000 population (2013 கணிப்பு)
ஆயுள் எதிர்பார்ப்பு68.89 ஆண்டுகள் (2009 கணிப்பு)<nowiki>
 • ஆண்67.46 ஆண்டுகள் (2009 கணிப்பு)
 • பெண்72.61 ஆண்டுகள் (2009 கணிப்பு)
கருவள வீதம்2.44 children born/woman (SRS 2011)
குழந்தை இறப்பு வீதம்44 deaths/1,000 live births (2011 கணிப்பு)
வயது அமைப்பு
0–14 ஆண்டுகள்31.2% ( 190,075,426ஆண்கள்/ 172,799,553 பெண்கள்) (2009 கணிப்பு)
15–64 ஆண்டுகள்63.6% (381,446,079ஆண்கள்/359,802,209 பெண்கள்) (2009 கணிப்பு)
65 மற்றும் அதற்கு மேல்5.3% (29,364,920 ஆண்கள்/32,591,030பெண்கள்) (2009 கணிப்பு)
பாலின விகிதம்
பிறக்கும்போது1.12 ஆண்கள்/பெண்கள் (2009 கணிப்பு)
15 க்குள்1.10 ஆண்(கள்)/பெண்(2009 கணிப்பு)
15–64 ஆண்டுகள்1.06 ஆண்(கள்)/பெண் (2009 கணிப்பு)
65 மற்றும் அதற்கு மேல்0.90 ஆண்(கள்)/பெண் (2009 கணிப்பு)
மொழி
அலுவல்பார்க்க இந்திய மொழிகள்

இந்திய அரசானது மொத்தம் 22 மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது. 80%-க்கும் அதிகமான மக்கள் இந்துக்கள் ஆவர். மேலும் இந்தியாவில் 13.4 விழுக்காடு இசுலாமியர்கள் வசிக்கின்றனர். இந்தியா உலகிலுள்ள இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், சமணர்கள், மற்றும் புத்த மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.

ஒப்பீட்டளவிலான புள்ளிவிவரங்களின்

தொகு
பகுப்பு உலக தரவரிசை குறிப்பு (மேற்கோள்கள்)
பரப்பளவு 7ஆம் இடம் [5]
மக்கள் தொகை 2ஆம் இடம் [5]
மக்கள்தொகை வளர்ச்சி 102/ 212 2010இல்[6]
மக்கள்தொகை அடர்த்தி
(people per square kilometer of land area)
24/212 2010இல்[6]
ஆண் : பெண் பிறப்பு சதவிகிதம் 12/214 2009இல்[7]

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்

தொகு
வரிசை எண் வருடம் மக்கள் தொகை [8] % மாற்றம் [8]
1 1951 361,088,000 -----
2 1961 439,235,000 21.6
3 1971 548,160,000 24.8
4 1981 683,329,000 24.7
5 1991 846,387,888 23.9
6 2001 1,028,737,436 21.5
7 2011 1,210,193,422 17.6
Population distribution in India by states
தர வரிசை மாநிலங்கள் /
ஒன்றியப் பகுதிகள்
விதம் மக்கள்தொகை % [9] பரப்பளவு [10]
(km²)
அடர்த்தி
(/km²)
ஆண்கள் பெண்கள் பாலின விகிதம்
[11]
எழுத்தறிவு நாட்டுப்புற [12]
மக்கள்தொகை
நகர்ப்புற[12]
மக்கள்தொகை
1 உத்தரப் பிரதேசம் மாநிலம் 199,812,341 16.50 240,928 828 104,480,510 95,331,831 912 67.68 131,658,339 34,539,582
2 மகாராட்டிரம் மாநிலம் 121,455,333 9.28 307,713 365 58,243,056 54,131,277 929 82.34 55,777,647 41,100,980
3 பீகார் மாநிலம் 103,804,637 8.60 94,163 1,102 54,278,157 49,821,295 918 61.80 74,316,709 8,681,800
4 மேற்கு வங்காளம் மாநிலம் 91,276,115 7.54 88,752 1,030 46,809,027 44,467,088 950 76.26 57,748,946 22,427,251
5 மத்தியப் பிரதேசம் மாநிலம் 72,626,809 6.00 308,245 236 37,612,306 35,014,503 931 69.32 44,380,878 15,967,145
6 தமிழ்நாடு மாநிலம் 72,147,030 5.96 130,058 555 36,137,975 36,009,055 996 80.09 34,921,681 27,483,998
7 இராச்சசுத்தான் மாநிலம் 68,548,437 5.66 342,239 201 35,550,997 32,997,440 928 66.11 43,292,813 13,214,375
8 கருநாடகம் மாநிலம் 61,095,297 5.05 191,791 319 30,966,657 30,128,640 973 75.36 34,889,033 17,961,529
9 குசராத்து மாநிலம் 60,439,692 4.99 196,024 308 31,491,260 28,948,432 919 78.03 31,740,767 18,930,250
10 ஆந்திரப் பிரதேசம் மாநிலம் 49,386,799 4.08 160,200 308 24,738,068 24,648,731 996 67.41 34,776,389 14,610,410
11 ஒடிசா மாநிலம் 41,974,218 3.47 155,707 269 21,212,136 20,762,082 979 72.87 31,287,422 5,517,238
12 தெலுங்கானா மாநிலம் 35,193,978 2.9 114,845 308 42,442,146 42,138,631 990 66.83 20,624,678 6,198,530
13 கேரளம் மாநிலம் 33,406,061 2.76 38,863 859 16,027,412 17,378,649 1084 95.50 23,574,449 8,266,925
14 சார்க்கண்ட் மாநிலம் 32,988,134 2.72 79,714 414 16,930,315 16,057,819 948 66.41 20,952,088 5,993,741
15 அசாம் மாநிலம் 31,205,576 2.58 78,438 397 15,939,443 15,266,133 958 72.19 23,216,288 3,439,240
16 பஞ்சாப் பகுதி மாநிலம் 27,743,338 2.29 50,362 550 14,639,465 13,103,873 895 75.84 16,096,488 8,262,511
17 சத்தீசுகர் மாநிலம் 25,545,198 2.11 135,191 189 12,832,895 12,712,303 991 70.28 16,648,056 4,185,747
18 அரியானா மாநிலம் 25,351,462 2.09 44,212 573 13,494,734 11,856,728 879 75.55 15,029,260 6,115,304
19 தில்லி ஆட்சிப்பகுதி 16,787,941 1.39 1484 11297 8,987,326 7,800,615 868 86.21 944,727 12,905,780
20 சம்மு காசுமீர் மாநிலம் 12,541,302 1.04 222,236 56 6,640,662 5,900,640 889 67.16 7,627,062 2,516,638
21 உத்தராகண்டம் மாநிலம் 10,086,292 0.83 53,483 189 5,137,773 4,948,519 963 78.82 6,310,275 2,179,074
22 இமாச்சலப் பிரதேசம் மாநிலம் 6,864,602 0.57 55,673 123 3,481,873 3,382,729 972 82.80 5,482,319 595,581
23 திரிபுரா மாநிலம் 3,673,917 0.30 10,486 350 1,874,376 1,799,541 960 94.65 2,653,453 545,750
24 மேகாலயா மாநிலம் 2,966,889 0.25 22,429 132 1,491,832 1,475,057 989 74.43 1,864,711 454,111
25 மணிப்பூர் மாநிலம் 2,855,794 0.21 22,327 122 1,290,171 1,280,219 992 79.21 1,590,820 575,968
26 நாகாலாந்து மாநிலம் 1,978,502 0.16 16,579 119 1,024,649 953,853 931 79.55 1,647,249 342,787
27 கோவா (மாநிலம்) மாநிலம் 1,458,545 0.12 3,702 394 739,140 719,405 973 88.70 677,091 670,577
28 அருணாசலப் பிரதேசம் மாநிலம் 1,383,727 0.11 83,743 17 713,912 669,815 938 65.38 870,087 227,881
29 புதுச்சேரி (நகரம்) ஆட்சிப்பகுதி 1,247,953 0.10 479 2,598 612,511 635,442 1037 85.85 325,726 648,619
30 மிசோரம் மாநிலம் 1,097,206 0.09 21,081 52 555,339 541,867 976 91.33 447,567 441,006
31 சண்டிகர் ஆட்சிப்பகுதி 1,055,450 0.09 114 9,252 580,663 474,787 818 86.05 92,120 808,515
32 சிக்கிம் மாநிலம் 610,577 0.05 7,096 86 323,070 287,507 890 81.42 480,981 59,870
33 அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆட்சிப்பகுதி 380,581 0.03 8,249 46 202,871 177,710 876 86.63 239,954 116,198
34 தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆட்சிப்பகுதி 343,709 0.03 491 698 193,760 149,949 774 76.24 170,027 50,463
35 தமன் மற்றும் தியூ ஆட்சிப்பகுதி 243,247 0.02 112 2,169 150,301 92,946 618 87.10 100,856 57,348
36 இலட்சத்தீவுகள் ஆட்சிப்பகுதி 64,473 0.01 32 2,013 33,123 31,350 946 91.85 33,683 26,967
மொத்தம் இந்தியா 29 + 7 1,210,193,422 100 3,287,240 382 623,724,248 586,469,174 940 74.04 833,087,662 377,105,760

இந்தியாவின் மக்கள்தொகை

தொகு

மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே இரண்டு இலட்சம் மக்கள் (1,210,193,422) உள்ளனர்.[13] அதில் ஆண்கள் 62 கோடியாகவும், பெண்கள் 58 கோடியாகவும் உள்ளனர். மொத்த மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 17.70 ஆக உயர்ந்துள்ளது.[14] அதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1,210,193,422 . இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாக்கிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக இந்திய நாட்டின் மக்கள்தொகை உள்ளது.

  • ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம்.
  • பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.

படிப்பறிவு

தொகு
  • படித்தவர்கள் எண்ணிக்கை 74 விழுக்காடு.
  • படிக்காதவர்கள் 26 விழுக்காடு.
  • 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 விழுக்காடு.
  • 2011ம் ஆண்டில் 74.04 விழுக்காடு.
  • 10 ஆண்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 விழுக்காடு அதிகரித்துஉள்ளது

பெண்கள்

தொகு
  • 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 விழுக்காடு.
  • 2011ம் ஆண்டு 65.46 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

ஆண்கள்

தொகு
  • 2001ம் ஆண்டு ஆண்களின் எண்ணிக்கை 75.26 விழுக்காடு.
  • 2011ம் ஆண்டு, 82.14 விழுக்காடு.

10 ஆண்டில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

அதிகம் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள்

தொகு
  • கேரளாவில் 93.91 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

குறைவாக எழுத, படிக்க தெரிந்தவர்கள்

தொகு
  • பீகார். இங்கு 63.82 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்
  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.
  • மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.
  • உ.பி.மகாராட்டிர மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.
  • அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக வடகிழக்கு தில்லி மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டரில் 36 ஆயிரத்து 155 பேர் வசிக்கின்றனர்.[15]
  • மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சலப் பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.
  • உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராட்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.

சமயவாரியான மக்கட்தொகை கணக்கெடுப்பு முடிவுகள்

தொகு
இந்திய மக்கட்தொகையின் முதன்மையான சமயவாரியான போக்கு (1951–2011)
சமயம்
1951 1961 1971 1981 1991 2001 2011[16]
இந்து சமயம் 84.1% 83.45% 82.73% 82.30% 81.53% 80.46% 79.80%
இசுலாம் 9.8% 10.69% 11.21% 11.75% 12.61% 13.43% 14.23%
கிறித்துவம் 2.3% 2.44% 2.60% 2.44% 2.32% 2.34% 2.30%
சீக்கியம் 1.79% 1.79% 1.89% 1.92% 1.94% 1.87% 1.72%
பௌத்தம் 0.74% 0.74% 0.70% 0.70% 0.77% 0.77% 0.70%
சமணம் 0.46% 0.46% 0.48% 0.47% 0.40% 0.41% 0.37%
சரத்துஸ்திர சமயம் 0.13% 0.09% 0.09% 0.09% 0.08% 0.06% n/a
பிற சமயங்கள் / சமயமின்மை 0.43% 0.43% 0.41% 0.42% 0.44% 0.72% 0.9%

2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.02 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%), கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%),சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[17]

சமயவாரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வு

தொகு

1951ல் 84.1%ஆக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் படிப்படியாக 4.30% வீழ்ச்சியடைந்து, 2011ல் 79.80%ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில் 1951ல் 9.8%ஆக இருந்த இசுலாமியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 4.40% வளர்ச்சியடைந்து, 2011ல் 14.23% ஆக உயர்ந்துள்ளது. மற்ற சமயங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிக ஏற்ற-இறக்கம் இல்லாது உள்ளது.

இந்துக்கள் சிறுபான்மையினத்தவராக வாழும் மாநிலங்கள்

தொகு

மக்கள் தொகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா என நான்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர்.[18] இந்துக்கள் அல்லோதோர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், சிறுபான்மை இன இந்துக்களுக்கு சிறுபான்மையினர் என்ற தகுதி இந்திய அரசால் வழங்கப்படவில்லை.இம்மாநிலங்களின் சிறுபான்மை இந்து மக்களுக்கு கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவிகள் இந்திய அரசாலும்; மாநில அரசுகளால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

தமிழ்நாடு மக்கள்தொகை

தொகு
  • தமிழகத்தின் பரப்பளவு 50,216 சதுர மைல் (1,30,060 சகிமீ) ஆகும்.
  • தமிழக மக்கள்தொகை (2001 - 2011) கடந்த 10 ஆண்டுகளில் 15.61% ஆக உயர்ந்துள்ளது.[19]
  • தமிழகத்தில் மக்கள்தொகை (72,147,030) 7 கோடி 21 லட்சத்து 47 ஆயிரத்து முப்பது ஆகும்.
  • ஆண்கள் 36,137,975
  • பெண்கள் 36,009,055
  • ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7,423,832 அகவுள்ளனர்.
  • 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது.
  • எழுத்தறிவு பெற்றவர்கள் 73.45 சதவிகிதத்திலிருந்து 80.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
  • 52 சதவீதம் பேர் கிராமங்களிலும்,
  • 48 சதவீதம் பேர் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், போன்ற நகர் பகுதியிலும் வசிக்கின்றனர்.

2023இல் சீனாவை விஞ்சிய இந்தியாவின் மக்கள் தொகை

தொகு

2023இல் உலக மக்கள் தொகையான 8.045 பில்லியனில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சீன-இந்தியாவின் மக்கள் தொகை உள்ளது. 2023ல் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகை 1.4286 பில்லினாகவும் (142.86 கோடி), சீனாவின் மக்கள் தொகை 1.4257 பில்லியனாகவும் (142.57 கோடி) இருக்கும் என கூறியுள்ளது.[20] [21][22] முன்னதாக 2022ஆம் ஆண்டில், சீனா 1,426 மில்லியனுடன் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தது. ஆனால் இந்தியா 1,412 மில்லியன் மக்கள் தொகை கொண்டிருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-08-27.
  2. Basu, Kaushik (25 July 2007). "India's demographic dividend". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6911544.stm. பார்த்த நாள்: 2011-09-24. 
  3. Rural-Urban distribution Census of India: Census Data 2001: India at a glance >> Rural-Urban Distribution. Office of the Registrar General and Census Commissioner, India. Retrieved on 2008-11-26.
  4. India at Glance - Population Census 2011
  5. 5.0 5.1 "CIA World Factbook". Central Intelligence Agency, USA. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் January 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |= ignored (help)
  6. 6.0 6.1 "World Bank Indicators Databank, by topic". The World Bank. பார்க்கப்பட்ட நாள் January 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Gender Statistics Highlights from 2012 World Development Report". World DataBank, a compilation of databases by the World Bank. February 2012.
  8. 8.0 8.1 "Census Population" (PDF). Census of India. Ministry of Finance India. Archived from the original (PDF) on 19 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  9. "Ranking of States and Union territories by population size: 1991 and 2001" (PDF). Government of India (2001). Census of India. pp. 5–6. பார்க்கப்பட்ட நாள் 2008-12-12.
  10. "Area of India/state/district". Government of India (2001). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.
  11. "Population" (PDF). Government of India (2011). Census of India.
  12. 12.0 12.1 "Population". Government of India (2001). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-26.
  13. "சென்சஸ் கணக்கெடுப்பு வெளியீடு: இந்திய மக்கள் தொகை 121 கோடி ஆனது; ஆண்கள்-62 கோடி பெண்கள்-58 கோடி". Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-08-27.
  14. Decadal Growth
  15. North East Delhi District : Census 2011-2018 data
  16. "Population by religious community – 2011". 2011 Census of India. Office of the Registrar General & Census Commissioner. Archived from the original on 25 August 2015. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015.
  17. Census: Hindu share dips below 80%, Muslim share grows but slower
  18. State Wise Religion Data 2011
  19. Tamil Nadu Population 2011-2018 Census
  20. India to have 2.9 million more people than China by mid-2023, UN estimate shows
  21. 2023-ம் ஆண்டில் சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை
  22. மக்கள் தொகையில் சீனாவை முந்தியது இந்தியா: ஆய்வாளர்கள் தகவல்

வெளி இணைப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு