தமிழ் நூற்பட்டியல்
தமிழ் நூல்பட்டியல் என்பது தமிழ் மொழியில் வெளிவந்த நூல்களைப் பற்றிய விபரங்களைத் திரட்டும் பட்டியல் ஆகும்.
வரலாறு
தொகுதமிழில் 2300 ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான எழுதப்பட்ட இலக்கிய மரபு உண்டு. நூல் என்றால் என்ன என்பது துல்லியமாக வரையறை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான நூல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொட்டே வரத் தொடங்கின. தமிழ் நூல்களைத் திரட்டுவது, வகுப்பது, உரை எழுதுவது தமிழ் அறிஞர்கள் தொடர்ச்சியாக செய்து வந்த ஒரு பணியே. எனினும் நூல்கள் அச்சிடப்படத் தொடங்கிய பின்பே நூல்பட்டியல் உருவாக்கம் விரிபு பெற்றது. பல்வேறு இடங்களில் வெளிவரும் தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைத் தொகுப்பது என்பது மிகவும் சிக்கலான பணி. இதனை அரசுகளோ, அல்லது பெரும் நிறுவனங்களோ செய்ய வல்லவை. ஆனால் தமிழ் மொழிக்கு இவ்வாறு வாய்ப்பு நெடுங்காலம் வாய்க்காதால், சில அறிஞர்களின் தனிப்பட்ட முயற்சிகளாளேலேயே தமிழ் நூல்பட்டியல்கள் தொகுக்கப்படாயின.
தொகுப்புகள்
தொகு- தொகைநூல்கள்
- 1709 - தமிழ்நூல்களின் பட்டியல் (யேர்மன் நூல்) - பர்த்தலோமேயு சீகன்பால்க்
- 1718 - தமிழ் கணிதச் சுவடிகள் தொகுப்பு
- 1828 - காலின் மெக்கன்சியின் கிழக்கத்திய சுவடிகள் விபரப்பட்டியல் (ஆங்கில நூல்) - எச்.எச் வில்சன் (Horace Hayman Wilson) தொகுத்தது
- 1835 - தமிழ் மொழியில் உள்ள கிழக்கத்திய வரலாற்று சுவடிகள் - யே.சி ரெய்லர் தொகுத்தது (ஆங்கிலம்-தமிழ் இருமொழி நூல்)
- 1849 - தமிழ்மொழி நூற்பட்டியல் (1949) - சைமன் காசிச்செட்டி
- 1853 - கே. கிராலின் தொகை - K. Graul's The Tamilian Library of the Protestant-Lutheran Mission at Leipzig (in German) [1][தொடர்பிழந்த இணைப்பு][2] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- 1857, 1860, 1862 - அரசு நூலகத்தில் உள்ள கிழக்கத்திய சுவடிகளின் நூற்பட்டியல் (ஆங்கில நூல்) தொகுதிகள் 1, 2, 3 - வில்லியம் ரெய்லர்
- 1865 - அச்சிடப்பட்ட தமிழ் நூல்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியல் (1865 நூல்)
- 1866 - La bibliothèque tamoule de M. Ariel, de Pondichéry
- 1882 - Mackenzie Collection: A Descriptive Catalogue of the Oriental Manuscripts [3]
- 1909 - பிரித்தானிய அருங்காட்சியக நூலகத்தில் உள்ள தமிழ் நூற்களின் நூற்பட்டியல் (ஆங்கில நூல்) - ஜி. யு. போப், எல். டி. ஃபார்நெற்
- 1912 - அரசினர் நூலகத்தில் உள்ள கையெழுத்து நூல்களின் விவர அட்டவணை - எம். ரங்காச்சாரி
- 1912 - Catalogue sommaire des manuscrits indiens, indochinois & malayo-polynésiens (1912) [4] - (தமிழ் உட்பட்ட பன்மொழி நூல்கள் பற்றிய தகவல்கள்)
- 1925 - சரசுவதி மகால் நூலகத் தமிழ்ச் சுவடிகள் அட்டவணை
- 1956, 1961 - உ. வே. சாமிநாதையர் - தமிழ்ச் சுவடிகளின் விளக்கம்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - அரசினர் கீழ்த்-திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை (3 பகுதிகள்)
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - சுவடி விளக்க அட்டவணை (4 பகுதிகள்)
- 1950 - காந்தியடிகள் நூல் நிலைய புத்தகப் பட்டியல் - அம்மையப்பன் பஞ்சாயத்து போர்டு
- 1958, 1961 - இலவச நூல் நிலைய புத்தகப் பட்டியல் - கோட்டூர் இரங்கசாமி முதலியார்
- 1959 - டென்மார்க்கில் உள்ள தமிழ்ச் சேகரிப்புகள்
- 1962 - சாமிநாதஐயர் நூல்நிலையச் சுவடிகளின் விளக்கம்
- 1964 - சரசுவதி மகால் அச்சுப் புத்தக அகரவரிசைப் பட்டியல்
- 1969 - தமிழ் மலேசியானா: மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பதிக்கப்பட்ட தமிழ் நூல்கள் இதழ்கள் பட்டியல் - இராமசுப்பையா
- தமிழ்நாட்டு நூற்றொகை - (1954 - 1980 ஆண்டு காலப் பகுதியில் வெளியிடப்பட்ட நூற்களுக்கான) - கன்னிமாரா நூலகம்
- தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை - வே. தில்லைநாயகம் அவர்களைக் ஆசிரியராகக் கொண்டு 1960களில் வெளிவரத் தொடங்கிய இந்த நூற்றொகை, பின்னர் நின்றுவிட்டது. [5]
- தமிழ் நூல் விபர அட்டவணை (1867 - 1957) - தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் - 7 தொகுதிகள்
- இந்திய தேசிய நூல் விவரப் பட்டியல் (தமிழ்ப் பகுதி) (1958 - 1991)
- 1978 - தமிழ் அகராதிகள் பற்றிய நூற்றொகை - அ. தாமோதரன்
- 1980 - Second supplementary catalogue of Tamil books in the British Library
- 1983 - வையாபுரிப்பிள்ளையின் தமிழ் சுவடிகள் சேகரிப்பு - ஒரு சரிபார் பட்டியல் (ஆங்கில நூல்)
- 1983 - மொழிபெயர்ப்பு நூற்றொகை (1983) - ச. சிவகாமி [6]
- 1985 - Catalogue of Tamil palmleaf manuscripts in the Tamil University - K. C. Chellamuthu, T. Padmanaban, Pa. Ve Nākarācan̲
- தமிழ் நாவல்கள் - அகர வரிசை (நூல்) [7]
- 1990 - A Descriptive Catalogue of Palm-leaf Manuscripts in Tamil - Shu Hikosaka, G. Samuel (5 தொகுதிகள்)
- 1997 - ஆ.ஆ.நி தமிழ் மருத்துவ சுவடித் தொகுப்பு
- ந. முருகேச பாண்டியனின் - பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு 1990 கள் மட்டும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களின் அடைவு [8]
- நூல்தேட்டம் (நூல்) - ந. செல்வராஜா (9 தொகுதிகள் - இலங்கைத் தமிழ் நூல்கள்)
- 2007 - மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் - ந. செல்வராஜா
- 201? - பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழுக்கு வந்துள்ள நூல்கள் - ச. முருகேசன்
- 201? - யேர்மன் மொழியில் இருந்து தமிழுக்கு வந்துள்ள நூல்கள் - ச. முருகேசன்
- சுவடி ஆற்றுப்படை - இலங்கைத் தமிழ் முசுலிம் எழுத்தாளர்களின் நூற்பட்டியல் (4 தொகுதிகள்) [9]
- இலங்கைத் தேசிய நூல் விபரப்பட்டியல் - (தமிழ் நூல்கள் அரிதாகவே இதில் சேர்க்கப்பட்டுள்ளது) [10]