தாம்பத்யம்

கே. விசயன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாம்பத்யம் (Thambathyam) என்பது 1987 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கிய இப்படத்தை டி. எஸ். கல்யாணி தயாரித்தார். இதில் சிவாஜி கணேசன், அம்பிகா, ராதா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர்.[1] இது தெலுங்கு படமான தாம்பத்தியத்தின் மறு ஆக்கமாகும் . [மேற்கோள் தேவை]

தாம்பத்யம்
சுவரிதழ்
இயக்கம்கே. விசயன்
தயாரிப்புடி. எஸ். கல்யாணி
கதைவலம்புரி சோமநாதன் (உரையாடல்)
இசைமனோஜ் கியான்
நடிப்புசிவாஜி கணேசன்
அம்பிகா
ராதா
துளசி
ஒளிப்பதிவுவிஸ்வநாத் ராய்
படத்தொகுப்புசெழியன்
கலையகம்கல்யாணி சினி ஆர்ட்ஸ்
வெளியீடுநவம்பர் 20, 1987 (1987-11-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணராக மருத்துவர் சத்தியமூர்த்தி உள்ளார். அவருக்கு ஜானகி என்ற அன்பான மனைவியும், ஜோதி, அருணா என்ற இரு மகள்களும் உண்டு. ஜானகியின் தந்தையும் இவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜானகி அன்பான, மறதியுள்ள குடும்பத் தலைவி. குடும்பத்தின் பெரும்பாலான விசயங்களில் அவருடைய விருப்பப்படியே முடிவெடுக்கப்படுகிறன. ஜோதி ஒரு துடிப்பான வழக்கறிஞருடன் காதல் கொள்கிறாள். அருணா ஒரு பத்திரிக்கை நிருபராக உள்ளார். அருணா காவல் ஆய்வாளர் வெங்கடேசைக் காதலிக்கிறாள். வெங்கடேசன் தன் சகோதரி லதாவைக் கொன்ற கொலையாளியைத் தேடி வருகிறார். சத்தியமூர்த்தியும், ஜானகியும் தங்கள் மகள்களின் காதலை அறிந்து அவர்களின் காதல்களுக்கு ஒப்புதல் அளித்து அவர்களின் திருமணங்களை நடத்த ஏற்பாடு செய்கின்றனர். ஒரு கட்டத்தில் லதாவை கொன்றது சத்தியமூர்த்தி என்ற குற்றச்சாட்டு வருகிறது. சத்தியமூர்த்தி கைது செய்யப்படுகிறார். இதனால் மகிழ்ச்சியான குடும்பம் குழப்பத்தில் தள்ளப்படுகிறது. குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் லதாவின் கொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர பாடுபடுகின்றனர்.

நடிகர்கள்

தொகு

பாடல்

தொகு

இப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்தார்.[2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(sகள்) நீளம்
1. "சொன்னா கேளுங்க"  சுரேந்தர், உமா ரமணன்  
2. "கீதம் வந்தது சங்கீதம் வந்தது"  வாணி ஜெயாரம், மலேசியா வாசுதேவன்  
3. "கண்ணனே"  வாணி ஜெயாரம், விஜய் ரமணி  
4. "நெஞ்சில் ஒரு ராகம்"  வாணி ஜெயராம்  

வரவேற்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "271-280". nadigarthilagam.com. Archived from the original on 21 December 2022. பார்க்கப்பட்ட நாள் 2014-09-15.
  2. "Dampatyam 1987 Tamil Vinyl LP". Bollywoodvinyl.in. Archived from the original on 30 March 2019. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பத்யம்&oldid=4085341" இலிருந்து மீள்விக்கப்பட்டது