தியோசாய் தேசியப் பூங்கா

பாக்கித்தானிலுள்ள தேசியப் பூங்கா

தியோசாய் தேசிய பூங்கா (Deosai National Park) என்பது பாக்கித்தானின் ஸ்கர்டு மாவட்டத்திற்கும் ஆஸ்தோர் மாவட்டத்திற்கும் இடையில் வடக்கு நிலங்களில் அமைந்துள்ள உயரமான அல்பைன் சமவெளி தேசியப் பூங்கா ஆகும்.[1]

தியோசாய் தேசியப் பூங்கா
The Land of Giants
அமைவிடம்ஸ்கர்டு மாவட்டம், வடக்கு நிலங்கள்,
அருகாமை நகரம்ஸ்கர்டு மற்றும் ஆஸ்தோர்
ஆள்கூறுகள்34°58′N 75°24′E / 34.967°N 75.400°E / 34.967; 75.400
பரப்பளவு843 km2 (325 sq mi)
சராசரி ஏற்றம்4,114 m (13,497 ft)

தியோசாய் சமவெளி கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,114 மீட்டர் (13,497 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மேலும், உலகின் இரண்டாவது மிக உயரமான சமவெளியாகக் கருதப்படுகிறது.[2]

தியோசாய் தேசிய பூங்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சியோசர் ஏரி.

தியோசாய் தேசியப் பூங்கா கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,114 மீட்டர்கள் (13,497 அடி) உயரத்தில் உள்ளதால் திபெத்திய பீடபூமிக்குப் பிறகு உலகின் இரண்டாவது உயரமான பீடபூமியாக மாற்றுகிறது.[3][4] இந்த பூங்கா 843 சதுர கிலோமீட்டர் (325 சதுர மைல்) பரப்பளவை பாதுகாக்கிறது. காரகோரம்-மேற்கு திபெத்திய பீடபூமி ஆல்பைன் புல்வெளி சுற்றுச்சூழல் பிராந்தியத்தின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்காக இது நன்கு அறியப்பட்டதாகும். வசந்த காலத்தில், இது காட்டுப்பூக்கள் மற்றும் பலவகையான பட்டாம்பூச்சிகளால் சூழாப்பட்டிருக்கும்.


விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள்

தொகு

தியோசாய் தேசியப் பூங்கா 1993 ஆம் ஆண்டு ஆபத்தான நிலையில் உள்ள இமயமலை பழுப்புக் கரடி மற்றும் அதன் வாழ்விடத்தின் உயிர்வாழ்வைப் பாதுகாக்க நிறுவப்பட்டது. அதன் எண்ணிக்கை 1993 இல் 19 ஆகவும், 2005 இல் 40 ஆகவும், 2022 இல் 78 ஆகவும் அதிகரித்துள்ளது.[5]

 
தியோசாய் தேசிய பூங்காவின் முக்கிய இனமான இமயமலை பழுப்புக் கரடி

தியோசாய் சமவெளியில் சைபீரியன் இபெக்ஸ் காட்டாடு, பனிச்சிறுத்தை, காசுமீர கத்தூரி மான், இமாலய ஓநாய், இமயமலை மர்மோட் மற்றும் 124 வகையான உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் உள்ளன. பூங்காவில் உள்ள பறவைகளில் பொன்னாங் கழுகு, எலும்புண்ணிக் கழுகு, இமயமலை பிணந்தின்னிக் கழுகு, வெள்ளை வல்லூறு, பொரி வல்லூறு, சிற்றெழால் மற்றும் ஐரோவாசியச் சிட்டுப்பருந்து ஆகியவை அடங்கும். [6]

கலாச்சாரக் குறிப்புகள்

தொகு

கிமு 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசுவால் எழுதப்பட்ட ' தங்கம் தோண்டும் எறும்புகள் ' பற்றிய கதை, தியோசாய் சமவெளியின் தங்க இமாலய மர்மோட்டை பின்பற்றி நிறுவப்பட்டது என்று பிரெஞ்சு இனவியலாளர் மைக்கேல் பெய்சல் ஒரு கூற்று வைக்கிறார். பரோக்பா மக்கள் போன்ற உள்ளூர் பழங்குடியினர் மர்மோட்டின் துவாரங்களில் இருந்து தங்கத் தூளைச் சேகரிக்கின்றனர். [7]

பயண வழிகள்

தொகு

மேற்கில் ஆஸ்தோர் மாவட்டம், வடக்கே ஸ்கர்டு மாவட்டம் மற்றும் தென்கிழக்கில் கார்மாங் மாவட்டத்திலுள்ள கல்தாரி ஆகியவற்றிலிருந்து இதனை அணுகலாம். மெகதியாபாத்திலிருந்து மெகதியாபாத்-தாபா சாலை வழியாகவும் இதை அணுகலாம். தியோசாய் ஸ்கர்டு நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது தியோசாயிக்கு செல்ல மிகக் குறுகிய பாதையாகும். மற்றொரு பாதை ஆஸ்தோர் பள்ளத்தாக்கிலிருந்து சிலிம் வழியாக உள்ளது. சிலா பள்ளத்தாக்கிலிருந்தும் இதை அணுகலாம். கல்தாரி மக்கள் தியோசாய் வழியாக பயணிக்கின்றனர். குஜ்ஜர் - பக்கர்வால் மக்கள் தியோசாய் தேசியப் பூங்காவை மேய்ச்சல் நிலங்களாகப் பயன்படுத்த அதிக தூரம் பயணிக்கின்றனர்.[8] ஸ்கர்டுவின் சோக் கச்சுரா பள்ளத்தாக்கு வழியாக புர்கி லா என்று அழைக்கப்படும் மற்றொரு பாதையும் உள்ளது.[9] [10] [11]

இதனையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Deosai National Park Skardu". பார்க்கப்பட்ட நாள் 31 July 2021.
  2. Öztürk, Münir; Hakeem, Khalid Rehman; Faridah-Hanum, I.; Efe, Recep (2015-05-05). Climate Change Impacts on High-Altitude Ecosystems (in ஆங்கிலம்). Springer. p. 456. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319128597.
  3. Öztürk, Münir; Hakeem, Khalid Rehman; Faridah-Hanum, I.; Efe, Recep (2015-05-05). Climate Change Impacts on High-Altitude Ecosystems (in ஆங்கிலம்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319128597.
  4. "Deosai National Park 2nd Highest Plateau". பார்க்கப்பட்ட நாள் 21 March 2021.
  5. "Himalayan bears on verge of extinction". The Express Tribune (in ஆங்கிலம்). 2022-03-27. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
  6. Desk, Web. "Deosai National Park". paktourismportal.com.
  7. Peissel, Michel. "The Ants' Gold: The Discovery of the Greek El Dorado in the Himalayas". Collins, 1984. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-272514-9.
  8. Rafiq, Arshed (11 July 2018). "Nomadic life: A struggle against climate change and authorities". Earth Journalism Network (in ஆங்கிலம்). Daily Times Pakistan. பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  9. Karim Shah Nizari (17 July 2011). "Deosai: Anything but plain". பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  10. Syed Mehdi Bukhari (27 April 2015). "Deosai Plains: Welcome to surreal Pakistan". பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  11. Osman Ehtisham Anwar (9 April 2016). "My search for the elusive 'giant' of Deosai". பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோசாய்_தேசியப்_பூங்கா&oldid=4018401" இலிருந்து மீள்விக்கப்பட்டது