தியோ பெங் ஹோக்

அரசியல் உதவியாளர், சாட்சியாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்

தியோ பெங் ஹோக் (மலாய்; ஆங்கிலம்: Teoh Beng Hock; சீனம்: 赵明福) (20 ஏப்ரல் 1979 - 16 சூலை 2009) என்பவர் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரும்; சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான இயான் யோங் இயான் வான் என்பவரின் உதவியாளர்; மற்றும் சிறப்பு அதிகாரியும் ஆவார்.[1]

தியோ பெங் ஹோக்
Teoh Beng Hock
赵明福
சிலாங்கூர் செமினியில் தியோ பெங் ஹோக் நினைவுக் கல்லறை
பிறப்பு(1979-04-20)ஏப்ரல் 20, 1979
கோலாலம்பூர்  மலேசியா
இறப்புசூலை 16, 2009(2009-07-16) (அகவை 30)
சா ஆலாம், சிலாங்கூர், மலேசியா
தேசியம்மலேசியர்
பணிமாநில ஆட்சிக்குழு சிறப்பு அதிகாரி

சின் சியூ சிட் போ (Sin Chew Jit Poh) எனும் மலேசிய சீன நாளிதழின் செய்தியாளராகவும் பணிபுரிந்தவர்.[1]

ஐயத்திற்கு உரிய ஓர் ஊழல் வழக்கில், ஐயத்திற்குரிய ஒரு நபராக அல்லாமல், ஒரு சாட்சியாகத் தகவல்களை வழங்கவே தியோ பெங் ஹோக் அழைக்கப்பட்டு உள்ளார். அவரின் இறப்பு மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக அறியப்படுகிறது.[2][3]

பொது

தொகு
 
மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் கோலாலம்பூர் தலைமையக நுழைவாயிலில் தியோ பெங் ஹோக் நினைவுப் பதாகை.

சூலை 15, 2009 அன்று, சிலாங்கூர் மாநிலத்தின், செரி கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதிக்கான நிதி ஒதுக்கீடு விசாரணையில் உதவுவதற்காக, மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் அதிகாரிகளினால் தியோ பெங் ஹோக் அழைத்து வரப்பட்டார்.[4]

மறுநாள் மதியம், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய அலுவலகக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தியோ பெங் ஹோக்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் விழுந்து இறந்திருக்கலாம் என்று முதலில் ஐயப்பட்டது.[5][6]

அரச விசாரணைக் குழு

தொகு

எதிர்க்கட்சியான பாக்காத்தான் ராக்யாட்டின் தலைவர்களும் மத்திய அரசு அதிகாரிகள் சிலரும், தியோ பெங் ஹோக்கின் கொலையை விசாரிக்க அரச விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்."[7]

சூன் 20, 2018 அன்று, தியோ பெங் ஹோக் வழக்கு; மற்றும் அல்தான்தூயா சாரிபூ கொலை (Murder of Shaariibuugiin Altantuyaa) ஆகியவற்றை மீண்டும் விசாரிக்க அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது கட்டளையிட்டார்.[8][9][10]

ஊழல் விசாரணை

தொகு

சிலாங்கூர் மாநிலத்தின் நிதி ஒதுக்கீடுகளைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்பதன் தொடர்பாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் அதிகாரிகளினால் விசாரிக்கப்பட்ட சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்; மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எழுவரில்; செரி கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் இயான் வான் என்பவரும் ஒருவர் ஆவார்.

15 ஜூலை 2009 அன்று, சா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநிலச் செயலகக் கட்டிடத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் இயான் வானின் அலுவலகத்திற்கு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் அதிகாரிகள் சென்றனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை

தொகு

கீழ்க்காணும் சட்டமன்ற உறுப்பினர்களும் விசாரிக்கப்பட்டனர்.

2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் கைகளில் மலேசியாவின் 5 மாநில அரசுகள் வீழ்ந்தன. அவற்றுள் சிலாங்கூர் மாநிலமும் ஒன்றாகும்.[4] சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றிய பாக்காத்தான் அரப்பான் அரசாங்கம், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் RM 500,000 ரிங்கிட், அந்தந்தப் பகுதிகளின் சமூகத் திட்டங்களுக்கு நிதியளித்து வந்தது.[4]

அந்த நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறியது.

நிகழ்வுகள்

தொகு

சூலை 15, 2009 அன்று, சா ஆலாம் பிளாசா மசாலாம் (Plaza Masalam) வணிக வளாகத்தில் இருந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் தலைமையகத்திற்கு (Selangor Malaysian Anti-Corruption Commission office) தியோ பெங் ஹோக் அழைக்கப்பட்டார். சந்தேகத்திற்குரிய நபராக அல்லாமல், ஒரு சாட்சியாக தகவல்களை வழங்கவே அவர் அழைக்கப்பட்டு உள்ளார். அன்றிரவு விடியல்கால் 3.45 வரை விசாரணை செய்யப்பட்டார்.

மறுநாள் மதியம், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய அலுவலகக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தியோ பெங் ஹோக்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சூலை 2011-இல், அரச விசாரணை ஆணையம் அவரின் இறப்பு ஒரு தற்கொலை என்று முடிவு செய்தது.

திருப்பம்

தொகு

இருப்பினும், செப்டம்பர் 2014-இல், மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தியோ விழுந்து இறந்தது என்பது "சட்டவிரோதமான செயல் அல்லது அறியப்படாத நபர்களின் செயல்களால்" ஏற்பட்டு இருக்கலாம் என்று தீர்ப்பளித்தது. தியோவின் குடும்பத்தினர் நீண்ட காலமாக அவரின் இறப்பிற்கு நீதி கோரி வந்தனர்

இதற்கிடையில், தியோவிடம் விசாரணை நடத்திய மூன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.[11]

நிகழ்வுகளின் காலவரிசை

தொகு
  • சூலை 13, 2009: மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம், பாக்காத்தான் ராக்யாட் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரின் தொகுதிகளில்; அரசு நிதியைப் பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தியது.
  • சூலை 15, 2009: செரி கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் இயான் வானின் அலுவலகம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டது; மற்றும் சா ஆலாம் பிளாசா மசாலாம் (Plaza Masalam) வணிக வளாகத்தில் 14-ஆவது மாடியில் உள்ள அவர்களின் தலைமையகத்தில் விசாரணைக்காக தியோ பெங் ஹோக் இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டார்.
  • சூலை 16, 2009: பிளாசா மசாலாம் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியின் தரையிறக்கத்தில் தியோ பெங் ஹோக் இறந்து கிடந்தார்.
  • சூலை 29, 2009: இறப்பு விசாரணை அதிகாரி அசுமில் முந்தபா அபாஸ் முன்னிலையில் தியோ பெங் ஹோக் இறப்பு பற்றிய விசாரணை தொடங்கியது.
  • சனவரி 5, 2011: தியோவின் வழக்கிற்கு சா ஆலாம் இறப்பு விசாரணை நீதிமன்றம் ஒரு திறந்த நிலை தீர்ப்பை வழங்கியது; இறப்பு ஒரு தற்கொலை அல்லது கொலை என்பது காரணமாக இல்லை; அவரின் இறப்பில் மூன்றாம் தரப்பினரின் தொடர்பு இல்லை என தீர்ப்பு வழங்கியது.
  • சூலை 21, 2011: தியோவின் இறப்பு தற்கொலையால் ஏற்பட்டதாக அரச விசாரணை ஆணையம் அறிவித்தது.[12][13]
  • டிசம்பர் 5, 2011: நீதித்துறை மறுஆய்வுக்கான தியோ குடும்பத்தினரின் விண்ணப்பத்தை சா ஆலாம் உயர் நீதிமன்றம் நிராகரித்தது; இறப்பு விசாரணை நீதிமன்றத்தின் திறந்தநிலைத் தீர்ப்பைத் தக்க வைத்தது.
  • அக்டோபர் 30, 2012: தியோவின் இறப்பினால் ஏற்பட்ட ஏற்பட்ட சோகம், இழப்பு, வேதனை ஆகியவற்றிற்காக இழப்பீடு கோரி தியோவின் குடும்ப உறுப்பினர்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்; மற்றும் 13 பேர் மீது சிவில் வழக்கைத் தாக்கல் செய்தனர்.[14]
  • செப்டம்பர் 5, 2014: மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒருமனதாக தீர்ப்பளித்தது. “பிளாசா கட்டிடத்தின் 14-ஆவது மாடியில் இருந்து விழுந்ததினால் தியோவின் இறப்பு ஏற்பட்டு இருக்கலாம்; அல்லது இது ஒரு சட்டவிரோத செயல் அல்லது நபரின் செயல்களால் ஏற்பட்டு இருக்கலாம்; அல்லது அடையாளம் தெரியாத நபர்களால் ஏற்பட்டு இருக்கலாம்; கைது செய்து விசாரணையில் ஈடுபடுத்திய அதிகாரிகளினாலும் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.[15]
  • மே 12, 2015: ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் 10 பேர்; மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்; மற்றும் மலேசிய அரசாங்கம் அடங்கிய பிரதிவாதிகள் தரப்பு; தியோவின் குடும்பத்திற்கு RM 600,000 மலேசிய ரிங்கிட் நஷ்டயீடாகவும், RM 60,000 மலேசிய ரிங்கிட் செலவுத் தொகையாகவும் வழங்க சம்மதித்தது; மற்றும் அலட்சியமாக இருந்ததையும் பிரதிவாதிகள் தரப்பு ஒப்புக்கொண்டது.
  • சனவரி 4, 2022: நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தின் மூலம், ஒரு புதிய மனுவை தியோவின் பெற்றோர்கள் தாக்கல் செய்தனர்; தியோவின் 2009-ஆம் ஆண்டு இறப்பு தொடர்பான விசாரணைகளை முடித்துக் கொடுக்க காவல்துறையைக் கட்டாயப்படுத்துமாறு நீதிமன்றத்தைக் கோரினர்.
  • சூன் 6, 2022: வழக்கை அடுத்த ஆண்டு விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
  • சூலை 15, 2024: மக்கள் உரிமைக்கான தியோ பெங் ஹோக் அமைப்பின் உறுப்பினர்கள், நீதி கேட்டு மூன்று நாள் 96 கிமீ நடைபயணத்தைத் தொடர்ந்தனர். தங்கள் கோரிக்கைப் பட்டியலுடன் ஒரு குறிப்பாணையை வழங்குதற்காக மலேசிய நாடாளுமன்றத்திற்கு வந்தனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தியோவின் குடும்பத்தினரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
  • ஆகஸ்டு 1, 2024: தியோவின் குடும்ப உறுப்பினர்கள் பிரதமர் அன்வாரை தனிப்பட்ட முறையில் சந்தித்தனர். தியோவின் இறப்பு தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக பிரதமர் அன்வார் அறிவித்தார்.[16]

தற்போதைய நிலை

தொகு

தியோவின் இறப்பை நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டும் என அவரின் குடும்பத்தினர் செய்த விண்ணப்பத்தின் மீதான தீர்ப்பு, 2024 அக்டோபர் 29-ஆம் தேதி வழங்கப்படும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனிப்பட்ட விவரங்கள்

தொகு

தியோ பெங் ஹோக், 20 ஏப்ரல் 1979-இல், அலோர் காஜா, மலாக்காவில் பிறந்தார். மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சின் சியூ சிட் போ (Sin Chew Jit Poh) எனும் மலேசிய சீனப் பத்திரிகையில் செய்தியாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

17 சூலை 2009 அன்று, அதாவது அவரின் இறப்பிற்கு மறுநாள், சோ ஷெர் வெய் (Soh Sher Wei) என்பவரைத் திருமணம் செய்யவிருந்தார்.

மலேசிய அமைச்சரவை

தொகு

தியோவின் மரணத்தைத் தொடர்ந்து 2009 சூலை 22-ஆம் தேதி நடைபெற்ற வாராந்திர மலேசிய அமைச்சரவைக் கூட்டத்தில், சிலாங்கூர் அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் விசாரணையில் ஈடுபட்டிருந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அனைவரையும், அமைச்சரவை இடமாற்றம் செய்தது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை நடைமுறைகள் குறித்து அரச விசாரணை ஆணையம் நிறுவப்படுவதற்கும் அமைச்சரவை முடிவு செய்தது.[17]

பேரணிகள்

தொகு

மக்களவை உறுப்பினர் மாணிக்கவாசகம் கைது

தொகு

16 சூலை 2009 அன்று, காப்பார் மக்களவை உறுப்பினர் மாணிக்கவாசகம் சுந்தரம்; மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர். சேவியர் ஜெயக்குமார் ஆகியோரும் அவர்களின் ஆதரவாளர்களும் சிலாங்கூர் காவல் துறையினரின் அனுமதியின்றி தியோ பெங் ஹோக் தொடர்பான கூட்டத்தை நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.[18]

19 ஜூலை 2009 அன்று, தியோ பெங் ஹோக்கிற்கு நீதி கோரி 3,000-க்கும் மேற்பட்டவர்கள் சிலாங்கூர், அரங்கத்தில் கூடினர். பங்கேற்பாளர்கள் அரங்கத்தைச் சுற்றிலும் "தியோ பெங் ஹோக்கிற்கு நீதி" என்ற பதாகைகளை ஏந்தி நின்றனர்.

லிம் கிட் சியாங், சிலாங்கூர் முதல்வர் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், மத்திய பாஸ் குழு உறுப்பினர் டத்தோ உசாம் மூசா ஆகியோர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.[19]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "On July 16, 2009, the body of a young political aide was found dead, having fallen from a 14th floor window of the Malaysian Anti-Corruption Commission's office. The death of Teoh Beng Hock would set off one of the most riveting criminal cases in Malaysian history,". www.rage.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 September 2024.
  2. "Abide by RCI decision: lecturer". Sin Chew Jit Poh. 28 June 2011. http://www.mysinchew.com/node/59565. 
  3. "He had been called to provide information as a witness and not a suspect into a suspected corruption case". www.malaymail.com. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
  4. 4.0 4.1 4.2 "After the historic general election in 2008, which witnessed 5 state governments fell on the hands of opposition parties, Beng Hock worked with the Selangor State Executive Council Member Ean Yong Hian Wah as his political aide". Teoh Beng Hock Association for Democratic Advancement. பார்க்கப்பட்ட நாள் 25 September 2024.
  5. "THE SHIT HAS HIT THE FAN". 20 August 2009 இம் மூலத்தில் இருந்து 21 August 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090821232944/http://mt.m2day.org/2008/content/view/25886/84/. 
  6. "Senior MACC man denies forcing Teoh onto ledge | Malaysians for Beng Hock". Teohbenghock.org. 2 April 2011. Archived from the original on 30 August 2011.
  7. "Pakatan wants more from royal commission". Malaysiakini. 23 July 2009. http://malaysiakini.com/news/109099. 
  8. Han Liang. "Tun Mahathir gives green light to reopen investigation into case of Mongolian woman Teoh Beng Hock". Malaysia See Hua Daily News Network. Archived from the original on 2019-08-12. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  9. "Tun Mahathir gives green light to reopen case of Mongolian woman Teoh Beng Hock". Oriental Net Malaysia Oriental Daily. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  10. "Malaysia to re-investigate two "unsolved cases" - the Mongolian woman case and Teoh Beng Hock case"". Morning Post (in ஆங்கிலம்). 2018-06-21. Archived from the original on 2021-02-14. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  11. Teoh El Sen (July 23, 2011). "Teoh's suicide: MACC suspends three officers". Free Malaysia Today. http://www.freemalaysiatoday.com/category/nation/2011/07/23/teohs-suicide-macc-suspends-three-officers/. 
  12. "Malaysian Bar" (PDF). www.malaysianbar.org.my. பார்க்கப்பட்ட நாள் 25 September 2024.
  13. "SURUHANJAYA UNTUK MENYIASAT KEMATIAN TEOH BENG HOCK PERSEMBAHKAN LAPORAN SIASATAN KEPADA AGONG". www.bheuu.gov.my. பார்க்கப்பட்ட நாள் 25 September 2024.
  14. Ida Lim (September 5, 2014). "Beng Hock's death not suicide, caused by 'unknown' persons and MACC, court rules". The Malay Mail. http://www.themalaymailonline.com/malaysia/article/beng-hocks-death-not-suicide-caused-by-unknown-persons-and-macc-court-rules. 
  15. Lim, Ida (September 5, 2014). "Beng Hock's death not suicide, caused by 'unknown' persons and MACC, court rules". Malay Mail. https://www.malaymail.com/s/740341/beng-hocks-death-not-suicide-caused-by-unknown-persons-and-macc-court-rules. 
  16. "Datuk Seri Anwar Ibrahim said the government agreed with the police to reopen the investigation into the death of former Selangor exco assistant Teoh Beng Hock". Media Prima Group. பார்க்கப்பட்ட நாள் 25 September 2024.
  17. "Cabinet approves royal commission". Malaysiakini. 22 July 2009. http://malaysiakini.com/news/109051. 
  18. Demonstrasi: 7 ditahan dibebas selepas 7 jam
  19. Ribuan banjiri perhimpunan tuntut keadilan untuk Teoh

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோ_பெங்_ஹோக்&oldid=4095967" இலிருந்து மீள்விக்கப்பட்டது