சேவியர் செயக்குமார்
சேவியர் செயக்குமார் (Xavier Jayakumar Arulanandam; மலாய்: Xavier Jayakumar; சீனம்: 泽维尔贾古玛) என்பவர் முன்னாள் பாக்காத்தான் (Pakatan Harapan) நிர்வாகத்தில் 2018 சூலை முதல் 2020 பிப்ரவரி வரையில் மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக (Minister of Water, Land and Natural Resources) பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி ஆவார்.
சேவியர் செயக்குமார் Yang Berbahagia Dato' Xavier Jayakumar DJMK | |
---|---|
மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் | |
பதவியில் 2 சூலை 2018 – 24 பிப்ரவரி 2020 | |
தொகுதி | கோலா லங்காட் நாடாளுமன்றத் தொகுதி |
சிலாங்கூர் மாநில அமைச்சர் (நல வாழ்வு, தோட்டத் தொழிலாளர்கள், வறுமைத் துறை) | |
பதவியில் 25 மார்ச் 2008 – 29 மே 2013 | |
தொகுதி | சிறீ அண்டலாசு சட்டமன்றத் தொகுதி |
Malaysian நாடாளுமன்றம் கோலா லங்காட் | |
பதவியில் 9 மே 2018 – 19 நவம்பர் 2022 | |
பெரும்பான்மை | 17,112 (2018) |
சட்டமன்ற உறுப்பினர் Member சிலாங்கூர் சுங்கை கண்டீசு | |
பதவியில் 8 மே 2008 – 9 மே 2018 | |
பெரும்பான்மை | 10,203 (2008) 15,633 (2013) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சேவியர் செயக்குமார் அருளானந்தம் (Xavier Jayakumar s/o Arulanandam) 1953 (அகவை 70–71) ஈப்போ, பேராக், மலேசியா |
அரசியல் கட்சி | (மக்கள் நீதிக் கட்சி (PKR) (1998–2021) சுயேச்சை (2021-2022) பங்சா மலேசியா கட்சி (PBM) (2022) |
பிற அரசியல் தொடர்புகள் | பெரிக்காத்தான் நேசனல் (PN) (சுயேச்சை) (2021-2022) பாக்காத்தான் ஹரப்பான் (PH) (2015-2021) பாக்காத்தான் ராக்யாட் (PR) (2008-2015) மாற்று முன்னணி (BA) (1998-2004) |
வாழிடம்(s) | Taman Sri Andalas, Klang, Selangor |
முன்னாள் கல்லூரி | மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி |
வேலை | பல் மருத்துவர்[1] |
2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூர் மாநில நல வாழ்வு, தோட்டத் தொழிலாளர்கள், வறுமைத் துறை அமைச்சராகவும் (Health, Plantation Workers, Poverty and Friendly Government) பணியாற்றி உள்ளார்.
பொது
தொகுமே 2018 முதல் நவம்பர் 2022 வரை கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மார்ச் 2008 முதல் மே 2013 வரை சிலாங்கூர் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் (Selangor State Executive Council) (EXCO); மேலும் மார்ச் 2008 முதல் சிலாங்கூர் மாநில சிறீ அண்டாலாசு (Seri Andalas) தொகுதியின் (Selangor State Sungai Kandis Constituency) சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மே 2018 வரை.
இவர் மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party) (பிகேஆர்) முன்னாள் உறுப்பினராகவும் துணைத் தலைவராகவும் இருந்தார். இந்தக் கட்சி பாக்காத்தான் எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஒரு கூறு கட்சியாகும்.[2]
மார்ச் 2008 முதல் மே 2018 வரை சிலாங்கூர் மாநிலத்தின் சிறீ அண்டலாசு எனும் சுங்கை கண்டீசு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் செயல்பட்டார். மலேசியாவில் மாநில அமைச்சர்கள் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் (State Executive Councillor) (EXCO) என்று அழைக்கப் படுகின்றனர்.
அரசியல் வாழ்க்கை
தொகுநிலம், நீர் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர்
தொகு2014-ஆம் ஆண்டில், சிலாங்கூர் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய நிலச்சட்டத்தில் (National Land Code) ஒரு திருத்தம் செய்வதற்கான ஒரு முன்கருத்தை சேவியர் செயக்குமார் முன்வைத்தார். அந்தச் சட்டத்தின் பிரிவு 433B-இன் மூலம், மாநில அரசின் ஒப்புதலுடன் வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் மாநிலத்தில் உள்ள நிலங்களின் உரிமையைப் பெறுவதற்கு அனுமதி வழங்குகிறது.
1 மே 2019 அன்று, சிலாங்கூர் பாக்காத்தான் மாநில அரசாங்கத்தில் நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சராக சுமார் ஓர் ஆண்டு பதவியில் இருந்த போது, சிறப்பான சேவைகள் செய்ததற்காகச் சேவியருக்கு 10-க்கு ஏழு முதல் எட்டு வரை மதிப்பீடு வழங்கப்பட்டது.[3]
17 பிப்ரவரி 2021 அன்று, பாக்காத்தான் கட்சி உறுப்பினரும் சேவியரின் "நெருக்கமான குடும்ப நண்பரும்"; அவரின் அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஓர் ஒப்பந்தம் தொடர்பாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (Malaysian Anti-Corruption Commission) கைது செய்யப்பட்டார். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். 2019-ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.[4]
மக்கள் நீதிக்கட்சி
தொகுசேவியர் செயக்குமார் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் (Vice President of People's Justice Party) பதவி வகித்தவர். 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்திற்கான பாக்காத்தான் கூட்டணிக்கு தேர்தல் இயக்குநராகவும் (Selangor Election Director) நியமிக்கப்பட்டார்.
13 மார்ச் 2021 அன்று, மக்கள் நீதிக் கட்சியின் உறுப்பினர் பதவியையும்; கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் திடீரென துறப்பு செய்தார். 2020-ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகளால் தான் "மிகவும் விரக்தி அடைந்து விட்டதாக" குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, அவர் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினரானார். மேலும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கு தம்முடைய முழு ஆதரவையும் அறிவித்தார்.[5]
கட்சி விலகல்
தொகுசேவியர் அமைச்சராக இருந்தபோது, 2019-இல் வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் இருந்து எழுந்த அழுத்தத்தின் காரணமாக சேவியர் செயக்குமார் விலகியதாக மக்கள் நீதிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா கூறினார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A New Committee for the Indian Community!" - YB Dr. Xavier". astroulagam.com.my. Astro (television). 11 June 2018. பார்க்கப்பட்ட நாள் 14 March 2021.
- ↑ "Meet Malaysia's new Cabinet of 26 ministers, 23 deputy ministers". 2 July 2018. Archived from the original on 10 July 2018.
- ↑ Ida Nadirah Ibrahim (1 May 2019). "Water, land and resources minister rates himself 7/10 in Pakatan's first-year report card". The Malay Mail. https://www.malaymail.com/news/malaysia/2019/05/01/water-land-and-resources-minister-rates-himself-7-10-in-pakatans-first-year/1748573.
- ↑ Rajvinder Singh (18 February 2021). "MACC arrest Perak PKR deputy chairman and two company directors". The Sun (Malaysia). https://www.thesundaily.my/local/macc-arrest-perak-pkr-deputy-chairman-and-two-company-directors-YH6779526.
- ↑ Wani Muthiah (13 March 2021). "Kuala Langat MP Xavier Jayakumar leaves PKR". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2021/03/13/kuala-langat-mp-xavier-jayakumar-leaves-pkr.
- ↑ R. Loheswar (13 March 2021). "Sivarasa: PKR's Dr Xavier wouldn't have resigned if not for MACC probe targeted at him". The Malay Mail. https://www.malaymail.com/news/malaysia/2021/03/13/sivarasa-pkrs-dr-xavier-wouldnt-have-resigned-if-not-for-macc-probe-targete/1957582.