திருநெல்வேலி - பிலாஸ்பூர் சந்திப்பு அதிவிரைவு தொடருந்து

திருநெல்வேலி சந்திப்பு - பிலாஸ்பூர் சந்திப்பு அதி விரைவு தொடருந்து [1] தென்னிந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான தமிழ்நாட்டின் திருநெல்வேலி சந்திப்பு நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் சந்திப்பு வரை இயக்கப்படும் ஒரு அதிவிரைவு தொடருந்தாகும்.

திருநெல்வேலி சந்திப்பு - பிலாஸ்பூர் சந்திப்பு அதிவிரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைSuperfast
முதல் சேவை4 சனவரி 2010; 12 ஆண்டுகள் முன்னர் (2010-01-04)
நடத்துனர்(கள்)தென்னிந்திய ரயில்வே
வழி
தொடக்கம் திருநெல்வேலி சந்திப்பு
இடைநிறுத்தங்கள்22
முடிவு பிலாஸ்பூர் சந்திப்பு
ஓடும் தூரம்2,151 km (1,337 mi)
சேவைகளின் காலஅளவுவாரம் ஒரு முறை
தொடருந்தின் இலக்கம்22620 / 22619
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஈரடுக்கு மற்றும் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் முன்பதிவில்லாத பொது பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி உண்டு
உணவு வசதிகள்வசதி உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புLHB Coaches
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge
வேகம்57.5 km/h (36 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

(Bilaspur - Tirunelveli) Express Route map.png

22620 என்ற எண்ணில் திருநெல்வேலி சந்திப்பு முதல் பிலாஸ்பூர் சந்திப்பு வரை இயக்கப்படும் இந்த தொடருந்து மறு மார்கதொடருந்து19 என்ற எண்ணில் பிலாஸ்பூர் சந்திப்பு முதல் திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் சத்தீசுகர் போன்ற மாநிலங்களின் வழியாக இந்த தொடர்ந்து பயணிக்கிறது. [2]

பயணப் பெட்டிகளின் வடிவமைப்புதொகு

திருநெல்வேலி பிலாஸ்பூர் அதிவிரைவு தொடருந்து , ஈரடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்று , மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மூன்று, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பன்னிரண்டு, முன்பதிவில்லாத பொது பெட்டிகள் நான்கு, அமரும் வசதி கொண்ட சரக்கு பெட்டிகள் இரண்டு, அதிக அளவு கொள்ளளவு கொண்ட சரக்கு கொள்ளளவு கொண்ட சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் இருபத்தி இரண்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தொடருந்தில் சமையலறை பெட்டி இல்லை.[3] பயணிகளின் எண்ணிக்கை, திருவிழா காலம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக பயண பெட்டிகள் தென்னிந்திய ரயில்வே துறையினரால் மாற்றப்படலாம்.

வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள்தொகு

திருநெல்வேலி சந்திப்பு - பிலாஸ்பூர் சந்திப்பு அதிவிரைவு தொடர்ந்து, திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் சந்திப்பு, பாலக்காடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு , ரேணிகுண்டா சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, பலகர்ஷா சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, காண்டியா சந்திப்பு, ராய்ப்பூர் சந்திப்பு வழியாக இயக்கப்பட்டு பிலாஸ்பூர் சந்திப்பு நிலையத்தை வந்தடைகிறது.

இழுவை இயந்திரம்தொகு

தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி முதல் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் வரையிலான இருப்புப்பாதை முழுவதும் மின்மயமாக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி சந்திப்பு - பிலாஸ்பூர் சந்திப்பு அதிவிரைவு தொடருந்து, ஈரோடு சந்திப்பு அல்லது ராயபுரம் மூலம் பராமரிக்கப்படும் WAP-4 என்ற மின்சார இழுவை இயந்திரத்தின் மூலம் இயக்கப்படுகிறது.


வண்டி எண் 22620தொகு

'திருநெல்வேலி- பிலாஸ்பூர் அதிவிரைவு தொடருந்து வண்டியானது திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.15 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் சந்திப்பு, பாலக்காடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு , ரேணிகுண்டா சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, பலகர்ஷா சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, காண்டியா சந்திப்பு, ராய்ப்பூர் சந்திப்பு வழியாக இயக்கப்பட்டு 29 நிறுத்தங்களையும் 419 நிலையங்களையும் கடக்க மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 44 மணி 20 நிமிடங்கள் பயணித்து சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் நிலையத்தை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 09.30 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2492 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் ரேணிகுண்டா சந்திப்பு முதல் பிலாஸ்பூர் சந்திப்பு நிலையம் வரையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[4]

வண்டி எண் 22619தொகு

மறுமார்க்கமாக 22619 என்ற எண்ணைக் கொண்ட பிலாஸ்பூர் - திருநெல்வேலி அதிவிரைவு தொடருந்து வண்டியானது பிலாஸ்பூர் சந்திப்பு நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 08.10 மணிக்கு இயக்கப்பட்டு 29 நிறுத்தங்களையும் 419 நிலையங்களையும் கடக்க மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 45 மணி 10 நிமிடங்கள் பயணித்து திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை இரண்டாம் நாள் (வியாழக்கிழமை) காலை 05.20 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2492 கிலோ மீட்டர் ஆகும் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வரை இதன் பயணத்தின் போது இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[5]

இந்த தொடருந்தின் வேகம் மணிக்கு 55 கிலோ மீட்டர்களுக்கு மேல் இருப்பதால் இந்திய ரயில்வே சட்டத்தின்படி அதிவிரைவுக்கான கூடுதல் கட்டணம் பயண கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "43 new trains including four Garib Raths introduced". இந்திய அரசு. Press Information Bureau. 13 February 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Trains to be regulated". The Hindu. 9 December 2016. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Trains-to-be-regulated/article16781876.ece. பார்த்த நாள்: 10 December 2018. 
  3. "LHB rake for TEN BSP Superfast express". 30 May 2018.
  4. https://indiarailinfo.com/train/-train-tirunelveli-bilaspur-weekly-sf-express-22620/7847/797/182. Missing or empty |title= (உதவி)
  5. http://amp.indiarailinfo.com/train/-train-bilaspur-tirunelveli-sf-express-22619/7851/182/797. Missing or empty |title= (உதவி)