திலக் வர்மா

நம்பூரி தாகூர் திலக் வர்மா (பிறப்பு 8 நவம்பர் 2002) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் . இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியதற்காக பரவலாக அறியப்பட்டவர். [1] [2] அவர் 30 டிசம்பர் 2018 அன்று 2018-19 ரஞ்சிக் கோப்பையில் ஐதராபாத் அணிக்காக முதல் தர துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். [3] அவர் 28 பிப்ரவரி 2019 அன்று 2018-19 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார் [4] 2019-20 விஜய் ஹசாரே கோப்பையில் ஐதராபாத் அணிக்காக 28 செப்டம்பர் 2019 அன்று பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். [5]

திலக் வர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நம்பூரி தாகூர் திலக் வர்மா
பிறப்பு8 நவம்பர் 2002 (2002-11-08) (அகவை 21)
ஐதராபாத், தெலங்கானா, இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குமட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018–தற்போதுஐதராபாத்
2022-தற்போதுமும்பை இந்தியன்ஸ் (squad no. 9)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முத பஅ இ20
ஆட்டங்கள் 1 16 23
ஓட்டங்கள் 39 784 653
மட்டையாட்ட சராசரி 19.50 52.26 34.36
100கள்/50கள் 0/0 3/3 0/5
அதியுயர் ஓட்டம் 34 156* 84*
வீசிய பந்துகள் 140 36
வீழ்த்தல்கள் 5
பந்துவீச்சு சராசரி 21.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 9/– 10/–

2019 டிசம்பரில், 2020 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். [6] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸால் வாங்கப்பட்டார். [7] [8]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

திலக் வர்மா 8 நவம்பர் 2002 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். அவரது தந்தை நாகராஜு வர்மா மின்தொழுல்நுட்பவியலாளராகப் பணிபுரிந்தார், மேலும் அவரது தாயார் காயத்ரி தேவி இல்லத்தரசி. அவருக்கு தருண் வர்மா என்ற மூத்த சகோதரர் உள்ளார். திலக் சிறுவயதிலேயே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தெலுங்கானாவில் உள்ள லீகலா துடுப்பாட்டப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறச் சேர்ந்துகொண்டார். அங்கு, அவருக்கு சலாம் பயஷ் வழிகாட்டியாக இருந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை ஹைதராபாத்தில் உள்ள கிரசண்ட் மாடல் ஆங்கிலப் பள்ளியில் தொடங்கினார்.

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

திலக் 2018-19 ரஞ்சிக் கோப்பையில் 30 டிசம்பர் 2018 இல் தனது முதல் தர அறிமுகப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அவரது முதல் போட்டி ஆந்திராவுக்கு எதிரானது. தொடரில், திலக் ஏழு போட்டிகளில் 215 ஓட்டங்கள் எடுத்தார். அவர் 28 பிப்ரவரி 2019 அன்று 2018-19 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக தனது இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். அவர் நான்கு முதல்தர போட்டிகளிலும், பதினாறு பட்டியல் அ போட்டிகளிலும், பதினைந்து T20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். விஜய் ஹசாரே கிண்ண 2021-22 தொடரில், அவர் ஐந்து ஆட்டங்களில் 180 ஓட்டங்கள் குவித்து நான்கு இலக்குகளை வீழ்த்தினார். செப்டம்பர் 28, 2018 அன்று, 2019-20 விஜய் ஹசாரே கிண்ணப் போட்டித் தொடரில் ஹைதராபாத் அணிக்காக பட்டியல் அ அணியில் அறிமுகமானார். டிசம்பர் 2019 இல், திலக் 2020 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அவர் தொடரில் 6 ஆட்டங்களில் விளையாடி 86 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தின் போது, அடிப்படை விலை ரூ. 20 லட்சத்துடன் ஏலத்திற்கு வந்து மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 1.7 கோடிக்கு வாங்கப்பட்டார். லீக்கின் இரண்டாவது ஆட்டத்தில், நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல் அரங்கில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக திலக் 33 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்தார். ஏப்ரல் 2023 இல், திலக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 84*(46) ஓட்டங்கள் எடுத்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tilak Varma". ESPN Cricinfo. Archived from the original on 22 April 2023. பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
  2. "The uncapped ones: Shahrukh Khan, Umran Malik and more". ESPN Cricinfo. Archived from the original on 25 March 2022. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  3. "Elite, Group B, Ranji Trophy at Vizianagaram, Dec 30 2018 - Jan 2 2019". ESPN Cricinfo. Archived from the original on 22 April 2023. பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
  4. "Group E, Syed Mushtaq Ali Trophy at Delhi, Feb 28 2019". ESPN Cricinfo. Archived from the original on 22 April 2023. பார்க்கப்பட்ட நாள் 28 February 2019.
  5. "Elite, Group A, Vijay Hazare Trophy at Alur (2), Sep 28 2019". ESPN Cricinfo. Archived from the original on 22 April 2023. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  6. "Four-time champion India announce U19 Cricket World Cup squad". Board of Control for Cricket in India. Archived from the original on 12 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2 December 2019.
  7. "Mumbai Indians signs Tilak Varma". https://www.thehindu.com/sport/cricket/mumbai-indians-signs-tilak-varma/article65046119.ece. 
  8. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. Archived from the original on 13 February 2022. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலக்_வர்மா&oldid=4134269" இலிருந்து மீள்விக்கப்பட்டது