துன்பேர்சியா கிரிகோரீ
துன்பேர்சியா கிரிகோரீ (தாவரவியல் பெயர்: Thunbergia gregorii, Orange Clock Vine) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 208 பேரினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள “துன்பேர்சியா” என்ற பேரினத்தில், மொத்தம் 150 இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1894 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளதாக, கியூ தாவரவியல் ஆய்வகம் தெரிவிக்கிறது.[1]
துன்பேர்சியா கிரிகோரீ | |
---|---|
தாவரம் | |
= மலர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | கரு மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | பெருந்தாரகைத் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. gregorii
|
இருசொற் பெயரீடு | |
Thunbergia gregorii S.Moore, 1894 |
வாழிடங்கள்
தொகுஇத்தாவரத்தின் பிறப்பிடங்களாக புருண்டி, எத்தியோப்பியா, கென்யா, தன்சானியா, உகாண்டா, சாயிர் ஆகிய நாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதீரா, வனுவாட்டு ஆகிய நாடுகளில் அறிமுகத் தாவரமாகவும் காணப்படுகிறது.
வளரியல்பு
தொகுஇத்தாவரம் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரும் இயல்புடைய கொடியாகும். பற்றி வளர பிடி இல்லையெனில், தரையில் படர்ந்து வளரும் இயல்புடையதாகும்.[2] கோடைகாலத்தில் ஏறத்தாழ நான்கு செண்டிமீட்டர் வரையுள்ள மஞ்சள் நிற மலர்களைப் பூக்கும் தன்மையுடையது.[3]
பயன்கள்
தொகுஇத்தாவரம் தோட்டங்களில் அழகுக்காக முதன்மையாக வளர்க்கப்பட்டாலும், காய்ச்சல், இருமல், சில தோல் நோய்களுக்கும் மருத்தாகப் பயனாகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thunbergia gregorii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச்சு 2024.
"Thunbergia gregorii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச்சு 2024. - ↑ Thunbergia gregorii - Orange Clock Vine
- ↑ The Royal Horticultural Society 2024
- ↑ Thunbergia gregorii - Uses, Benefits & Care