தெமங்கான் தொடருந்து நிலையம்
தெமங்கான் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Temangan Railway Station மலாய்: Stesen Keretapi Temangan) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், மாச்சாங் மாவட்டம், தெமங்கான் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். தெமங்கான் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[2]
தெமங்கான் | |||||||
---|---|---|---|---|---|---|---|
| கேடிஎம் இண்டர்சிட்டி Temangan Railway Station | |||||||
பொது தகவல்கள் | |||||||
அமைவிடம் | மாச்சாங், மாச்சாங் மாவட்டம், கிளாந்தான், மலேசியா | ||||||
ஆள்கூறுகள் | 5°43′2″N 102°10′20″E / 5.71722°N 102.17222°E[1] | ||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||
நடைமேடை | 1 நடைப்பாதை | ||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||
கட்டமைப்பு | |||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||
வரலாறு | |||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||
மறுநிர்மாணம் | 2008 | ||||||
சேவைகள் | |||||||
|
இந்த நிலையம் மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் (KTM East Coast Line) அமைந்துள்ளது; மற்றும் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது. தெமங்கான் நகரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.[3] இருப்பினும், இண்டர்சிட்டி தொடருந்துகள் இந்த நிலையத்தில் நிற்பதில்லை; தும்பாட் நிலையத்திலிருந்து குவா மூசாங் நிலையத்திற்குச் செல்லும் உள்ளூர் தொடருந்துகள் மட்டுமே இங்கு நிற்கின்றன.
பொது
தொகுதெமங்கான் நகரின் உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகள் அருகிலுள்ள பிற நகரங்களுக்குச் செல்ல தெமங்கான் தொடருந்து நிலையத்தின் வசதியான ரயில் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். தெமாங்கன் நகரம் அழகிய கிராமப்புற நிலப்பரப்புகளைக் கொண்ட நகரம். இந்த நகரம் அழகான கடற்கரைகள் மற்றும் கடலோர சமவெளிகளைக் கொண்டதாக அறியப்படுகிறது.
தெமங்கான் நகரத்திலிருந்து 30 மைல் தொலைவில் அமைந்துள்ள தெமங்கோர் ஏரி ஓர் உள்ளூர் சுற்றுலா தளமாகும். கிரிக் அருகே உள்ள பண்டிங் எனும் இடத்தில் தெமங்கோர் அணை (Temenggor Dam) எனும் ஒரு பெரிய ஏரி உள்ளது. மலேசியாவில் பிரசித்தி பெற்ற தெமங்கோர் நீர் மின் திட்டம் எனும் தெமங்கோர் மின் நிலையம் இங்குதான் உள்ளது.[4]
நிலைய வசதிகள்
தொகு- பக்க மேடை
- பொது கழிப்பறைகள்
- வாகன நிறுத்துமிடம்
- கடவுச்சீட்டு விற்பனை இயந்திரம்
- வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
- பானங்கள் விற்பனை இயந்திரம்[4]
தொடருந்து சேவைகள்
தொகு- ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து - 26/27 தும்பாட் - ஜொகூர் பாரு சென்ட்ரல் - (Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 51/52/57/60 தும்பாட் - குவா மூசாங் - (Shuttle Timur 51/52/57/60 Tumpat–Gua Musang)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 55/56 தும்பாட் - தாபோங் - (Shuttle Timur 55/56 Tumpat–Dabong)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Longitude latitude in Temangan, Kelantan, Malaysia GPS coordinates". www.longitude-latitude-maps.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
- ↑ "Temangan Railway Station is a railway station located in Temangan, Kelantan". Transport Malaysia. 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
- ↑ "Temangan KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Temangan, Kelantan. It is one of the two minor railway stations of KTM's East Coast Line". www.mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
- ↑ 4.0 4.1 "The town of Temangan is known for having magnificent rural landscapes, beautiful beaches and coastal plains which makes Kelantan popular among travellers from all over the globe for its authenticity. The local attraction such as the Temenggor Lake located just 30 miles from Temangan town is a must-visit place". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.