தெலுக் பூலாய்
தெலுக் பூலாய் (ஆங்கிலம்: Teluk Pulai; மலாய்: Teluk Pulai) (TTP) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம் (Klang District) கிள்ளான் மாநகரில் உள்ள புற நகரப்பகுதி ஆகும்.
தெலுக் பூலாய் | |
---|---|
Teluk Pulai | |
ஆள்கூறுகள்: 2°58′36.4″N 101°46′17.3″E / 2.976778°N 101.771472°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | கிள்ளான் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 41100 |
தொலைபேசி எண் | +60 33 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
தெலுக் பூலாய் புற நகரப்பகுதி கிள்ளான் நகராட்சியின் (Klang Municipal Council) அதிகார வரம்பிற்கு உட்பட்டது; மற்றும் கிள்ளான் புது நகரம் (Bandar Baru Klang); தெற்கு கிள்ளான் (Selat Klang) என இரண்டு சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற அதிகார வரம்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
பொது
தொகுதெலுக் பூலாய் புற நகரப்பகுதி, ஜாலான் ராயா பாராட் சாலை (Jalan Raya Barat); வடக்கு கிள்ளான் நீரிணை மாற்றுவழிச்சாலை (North Klang Straits Bypass); மற்றும் வடக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (North Klang Valley Expressway); ஆகிய சாலைகளுடன் கிள்ளான் மூன்றாவது பாலம் (Klang Third Bridge) வழியாக கூட்டாட்சி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
இங்கு அமைந்துள்ள KD15 தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் மற்ற தொடருந்து நிலையங்களுக்கும் சேவை வழங்குகிறது. கோலாலம்பூர் சென்ட்ரல்; தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம்; கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம் ஆகிய நிலையங்களுக்குத் தொடருந்து போக்குவரத்துச் சேவையை வழங்குகிறது.[2]
குடியிருப்புகள்
தொகு- தாமான் மெலாவிஸ்
- தாமான் தெலுக் பூலாய் இண்டா
- தாமான் தெலுக் பூலாய்
- தாமான் கோத்தா ஜெயா
- தாமான் வாங்கி
- தாமான் அனேகா
- கம்போங் சுங்கை ஊடாங்
- அமேசிங் அயிட்ஸ்
- பங்சாபுரி அங்கெரிக்
- பங்சாபுரி சவுஜானா டாமாய்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jambatan ketiga Klang dinamakan jambatan Raja Muda Nala Astro Awani".
- ↑ "The Teluk Pulai KTM station is a commuter train station operated by KTM Komuter and served by the Port Klang Route". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 20 August 2023.