தெலுங்கானா வரலாறு

தெலங்காணா வரலாறு,[1] என்பது தக்காணப் பகுதியின், பல ஆட்சியாளர்களால் அது ஆளப்பட்டது ஆகும். இப்பகுதியை ஆண்டவர்கள் சாதவாகனர் (கி.மு. 230 முதல் கி.பி. 220), காக்கத்தியர் (1083–1323), முசுனூரி நாயக்கர்கள் (1326–1356) தில்லி சுல்தானகம், பாமினி சுல்தானகம் (1347–1509) விஜயநகரப் பேரரசு (1509–1529). பிற்காலத்தில், தெலங்காணா பிரதேசம் கோல்கொண்டா சுல்தான்களின் (1529–1687) ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியானது.

2014 சூன் அன்று தெலங்காணா இந்தியாவின் 29-ஆவது மாநிலமாக பத்து மாவட்டங்களுடன், ஐதராபாத்தை தலைநகராகக்கொண்டு உருவாக்கப்பட்டது.[2] ஐதராபாத் நகரம் ஆந்திரப்பிரதேசத்துக்கும் சேர்த்து தலைநகராக பத்தாண்டுகளுக்குத் தொடரும்.

தெலங்காணா வரலாறு மற்றும் ஆந்திரப்பிரதேச வரலாறு ஆகியவை ஓரளவு ஒத்ததாகவே உள்ளது. இரு மாநிலங்களின் மொழியும், பண்பாடும் ஒன்றாகவே உள்ளது.[3]

முற்கால வரலாறு தொகு

சாதவாகன பேரரசு தொகு

மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு ஆந்திரப்பிரதேசப் பகுதியில் சாதவாகனப் பேரரசு அதிகாரம் பெற்றது. சாதவாகன பேரரசுக்கு உட்பட்ட 30 நகரங்களில் ஒன்றாக கோட்டி லிங்கா இருந்தது.[4] அகழாய்வுகளில் சாதவாகனர்களுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த செங்கலால் கட்டப்பட்ட கிணறுகள், நாணயங்கள் போன்றவை கோபத்ரா மற்றும் சமகோபா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இங்குதான் பவரி என்ற முனிவரின் ஆசிரம் இருந்தது என்று நம்பப்படுகிறது.[5] சாதவாகன மரபின் நிறுவணரான சிமுகா என்பவரின் பல நாணயங்களும், பிற துவக்கக்கால ஆட்சியாளர்களான கன்ஹா மற்றும் முதலாம் சதகரணி போன்றவர்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன.[6]

இக்காலகட்டத்தில் தக்காணம் கடல் மற்றும் தரைவழி வணிகத்தில் சிறந்து விளங்கியது. கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி துறைமுகங்கள் சுறுசுறுப்பாக இயங்கின. இங்கு தொழில் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக நாணய செலாவணியும், தொழில்துறையும் வளர்ந்திருந்தது. இவர்கள் காலத்தில் பௌத்தம் தழைத்தோங்கியது, ஆட்சியாளர்கள் வேத சமய சமயசடங்குகளில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். இவர்களால் பல பௌத்த ஸ்தூபிகளும், விகாரைகளும், சைத்தியங்களும் கட்டப்பட்டன. சாதவாகனர்கள் இலக்கியங்களையும், கட்டக்கலையையும் ஆதரித்னர். இந்த மரபின் 17 ஆம் மன்னரான, ஹல்லா என்பவர் சிறந்த கவிஞராவார் இவரது கதசப்தசதி என்ற பிராக்கிருதத்தினை அனவராலும் கவணிக்கவைத்தது. ஹல்லாவின் அமைச்சரான குணதயா என்பவர் "பிரிஹத்கதா" வை இயற்றியவர். மச்சப் புராணத்தின் படி, இந்த மரபில் 29 ஆட்சியாளர்கள் இருந்தன. அவர்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து 2 ஆம் நூற்றாண்டு வரை, சுமார் 456 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.இந்தப் பேரரசு துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளான மகாராட்டிரம் , ஒரிசா , மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இவர்களின் ஆட்சி மொழியாக பிராகிருதம் இருந்தது.

சாதவாகனர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. உள்ளூர் ஆட்சியாளர்களர்களுடன் படையெடுப்பாளர்களும் இந்த அரசாட்சிக்குட்பட்ட பகுதிகளை துண்டாடுவதற்கு முயற்சித்தனர். இந்த குழப்ப நிலை சாளுக்கியர் எழுச்சிவரை நிலவியது.

காக்கதியர் தொகு

12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் காக்கதிய மரபு தோற்றம் கண்டது.[7] இவர்கள் வாரங்கல்லை அடுத்த சிறிய பகுதியில் மேலைச் சாளுக்கியருக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தனர். இந்த மரபின் ஆட்சியாளரான இரண்டாம் புரொல்லா (1110–1158), தன் ஆட்சிப்பகுதியை தெற்குப் பகுதியில் விரிவாக்கி, தன்னுடைய சுயாட்சியை அறிவித்தார். இந்த மரபில் வந்த ருத்திரன் (1158–1195) பேரரசை கிழக்கில் கோதாவரி வடிநிலம்வரை விரிவாக்கினார். இவர் தேவகிரி யாதவர்களின் தலையீட்டைத் தடுப்பதற்காக வாரங்கல் கோட்டையை கட்டி அதை இரண்டாவது தலைநகராக ஆக்கினார். அடுத்த ஆட்சியாளரான மகாதேவன் தன் பேரரசை கடலோரம்வரை விரிவுபடுத்தினார். 1199-இல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய கணபதி தேவன் காக்கதீய மரபில் மிகப்புகழ்வாய்ந்த மன்னனாவார், இவரே சாதவாகனர்களுக்கு அடுத்து முதன்முதலில் தெலுங்கு பிரதேசம் முழுவதையும் ஒரே ஆட்சிக்குள் கொண்டுவந்தவராவார். இவர் 1210-இல் கணபதி வேலநாட்டி சோடர்களின் (வேலநாட்டி சோழர்கள்) ஆட்சிக்கு முடிவுகட்டினார். மேலும் தனது ஆட்சிப்பரப்பை வடக்கில் அனகாலபள்ளிவரை விரிவாக்கினார். இம்மரபின் பிரபலமான அரசி ருத்திரமாதேவி (1262–1289), இந்திய வரலாற்றில் ஆட்சி செய்த ஒருசில அரசிகளில் ஒருவர். ருத்ரம்மா தன் நாட்டை சோழர், தேவகிரி யாதவர் ஆகியோரிடமிருந்து காத்து மரியாதையைப் பெற்றார். ருத்ரம்மா 1290-இன் துவக்கத்தில் இறந்தார். ருத்ரம்மாதேவிக்குப் பின்னர் அவரின் பேரன் பிரதாபருத்திரன் மன்னனானார். பிரதாபருத்ரன் தன் நாட்டுக்கு உள்ளிருந்த குறுநிலத் தலைவர்களுடனும், வெளியிலிருந்த எதிரிகளுடனும் பல போர்களைச் செய்தார். இவர் தனது அரசின் பரப்பை மேற்கில் ராய்ச்சூர் வரையிலும் தெற்கில் ஒங்கோல் மற்றும் நல்லமல்லா மலைகள் வரையிலும் விரிவாக்கினார். இவர் காலத்தில் ஆட்சி நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன, இவற்றில் சிலவற்றை பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசு சுவீகரித்துக்கொண்டது.

 
காக்கதீய தோரணவாயில் இடிபாடுகள் (வாரங்கல் வாயில்).

வாரங்கல் கோட்டை, ராம்புரா கோயில், ஆயிரம் தூண் ஆலயம் ஆகியவற்றின் கட்டடக்கலைக்காக காக்கதியர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.[8]

ககாதியா மரபு 1310ஜஇல் இருந்து முஸ்லீம்களின் தாக்குதல்களை எதிர்கொண்டது, முடிவாக 1323-இல் தில்லி சுல்தான்களின் ஆட்சிக்குள் வந்தது. அதன்பிறகு தெலுங்கு தேசத்தை முசுனூரி நாயக்கர்கள் தில்லியின் ஆட்சியில் இருந்து விடுவித்து 50 ஆண்டுகள் குறுகிய காலம் சுதந்திரத்தை அனுபவித்தனர்.

தெலங்காணா புரட்சி தொகு

 
தெலங்காணா புரட்சி ஏற்பட்ட மாவட்டம்

1945-ஆண்டு ஐதராபாத் நிசாம் ஆட்சிக்காலத்தில் தெலங்காணா பகுதியில் விவசாயிகளிடையே எழுச்சி ஏற்பட்டது. இது கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்தது. இந்த தெலங்காணா புரட்சி வெட்டி சாக்கிரி உதயம் (Vetti Chakiri Udyamam) அல்லது தெலங்காணா ரைதங்கா சாயுதா போராட்டம் (Telangana Raithanga Sayudha Poratam) என அழைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தால் கம்யூனிஸ்டுகளுக்கு பலவேறு இடங்களிலிருந்து ஆதரவு கிடைத்தது. அங்கு இருந்த ஜாகிர்தார் அமைப்பில் பல குறைகள் இருந்தன, அவர்கள் வசம் 43% நிலங்கள் இருந்தன இது ஏழை விவசாயிகளின் மத்தியில் போராட்டத்துக்கு ஆதரவான நிலையை உருவாக்கியது. அவர்கள் கம்யூனிஸ்டு தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த புரட்சி 1948-இல் இந்திய அரச படைகள் ஐதராபாத்தை கைப்பற்றிய பிறகு ஒடுக்கப்பட்டது. இந்தியா புலனாய்வுத் துறை துணை இயக்குனர் கூற்றின்படி, "கம்யூனிஸ்டுகளின் சமூக மற்றும் பொருளாதார திட்டங்களில் சில திட்டங்கள் முற்போக்கானதாகவும், சிறப்பானதாகவும் இருந்தன ... கம்யூனிஸ்டுகளின் கட்டாயத்தால் நூறு சதவீதம் சம்பளம் அதிகரி்க்கப்பட்டது, கம்யூனிஸ்டுகளால் நிலம் மற்றும் கால்நடைகளின் விலை விகிதங்கள், குறைக்கப்பட்டு, மறுவிநியோகமும் செய்யப்பட்டன. அவர்களால் மக்கள் தொகைக்கேற்ப பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டன, மகளிர் அமைப்புக்களுக்கு ஊக்கம் தரப்பட்டன, குறுங்குழுவாத உணர்வு மற்றும் தீண்டாமை ஆகியவற்றை ஒழிக்க முயன்றனர்."

துவக்கத்தில், அதாவது 1945-இல் கம்யூனிஸ்ட்டுகள் ஜமீந்தார்கள் மற்றும் தேஷ்முக்குகளை குறிவைத்து இயங்கினர். ஆனால் விரைவில் அவர்கள் நிஜாம் அரசுக்கு எதிரான முழு கிளர்ச்சியைத் துவக்கினர். 1946-இன் துவக்கத்தில், ரஜாக்குகள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் மிருகத்தனமான வன்முறை அதிகரித்தது. ரஜாக்குகள் கிராமங்களை குறிவைத்து, சந்தேகப்படும் கம்யூனிஸ்டுகளை பிடித்து, கும்பலாக படுகொலை செய்தனர் (காங்கிரஸ்காரர் ஒருவரின் கூற்றின்படி). இந்திய அரசின் துண்டுப்பிரசுரத்தின்படி, 1948-இல் கம்யூனிஸ்டுகள் சுமார் 2,000 பேர்வரை கொல்லப்பட்டதாக தெரிகிறது.[9]

விடுதலைக்கு முன்பு தொகு

இந்திய விடுதலை 1947-இல் நிகழ்ந்தது. ஆங்கிலேயர் வெளியேறிய நிலையில், இந்தியாவுடன் இணையாமல் முஸ்லிம் ஐதராபாத் நிசாம் ஐதராபாத்தை சுதந்திர நாடாக வைத்துக்கொள்ள விரும்பினார், ஆனால் இந்தியாவின் போலோ நடவடிக்கையின் காரணமாக ஐதராபாத் இராஜ்ஜியம் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டு 1948 முதல் ஐதராபாத்து இராச்சியம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவுடன் ஐதராபாத் ஒருங்கிணைப்பு தொகு

 
மேஜர் ஜெனரல் சையது அகமது எல் எட்ரோஸ் (வலது) ஐதராபாத் ராஜ்ஜிய படைகளின் சரணடைவை செகந்தராபாதில் உள்ள மேஜர் ஜெனரல் (பிற்கால ஜெனரல் மற்றும் ராணுவ தலைவர்) ஜோயண்டோ நாத் சவுத்ரியிடம் வழங்குகிறார்.

ஆபரேசன் போலோ, என்பது ஐதராபாத் மீது எடுக்கப்பட்ட "படை நடவடிக்கையைக்" குறிக்கும் குறியீட்டுப் பெயராகும்.[10][11] 1948 செப்டம்பரில், இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஐதராபாத் இராஜ்ஜியத்தின் மீது படையெடுது, அதன் நிஜாமை தூக்கி வீசி இந்திய ஒன்றியம் தனது ஒரு மாநிலமாக ஆக்கிக்கொண்டது.

இந்தியப் பிரிப்பு நேரத்தில் இந்தியத் துணைக்கண்ட மன்னர் அரசுகள், தங்கள் எல்லைக்குள் சொந்த அரசாங்கங்களைக் கொண்டிருந்தன, இவை பிரித்தானியருடன் துணைப்படைத் திட்டத்தில் இருந்தன வெளியுறவுக் கொள்கையை பிரித்தானியர் வசம் ஒப்புவித்தும் இருந்தனர். இந்திய விடுதலைச் சட்டம், 1947படி இந்தியாவுக்கு முழு விடுதலை அளித்தும், மன்னர் அரசுகளுடன் கொண்டிருந்த அனைத்து கூட்டணிகளையும் விட்டு விலகி விடுதலை அளித்தது. எனினும், 1948-இல் அனைத்து மன்னராட்சிப் பகுதிகளும் தங்கள் அரசுகளை இந்தியா அல்லது பாக்கிஸ்தானுடன் இணைத்துவிட ஒப்புக்கொண்டன. இதில் முதன்மை விதிவிலக்காக ஐதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலி கானின், ஏழாம் ஆசிப் ஜா இந்து மத மக்களை பெரும்பான்மையாக உள்ள பிரதேசத்தின் முஸ்லீம் ஆட்சியாளராக இருந்தார். இவர் இந்தியாவுடன் இணையாமல் சுதந்திர அரசை நடத்த முடிவுசெய்து, ரஜாக்கள் என்னும் முஸ்லீம் நிலப்புரபுக்களின் துணையுடன் ஆட்களைச் சேர்த்த ஒழுங்கற்ற இராணுவத்தைக் கொண்டு ஆட்சிபுரிய இயலுமென்று நம்பினார்.[12]:224 நிஜாமின் ஆட்சிப் பகுதி ஏற்கனவே தெலங்காணா மக்களின் ஆயுதப் போராட்டத்தால் சூழப்பட்டிருந்தது, இதிலிருந்து மீளமுடியாமல் நிஜாம் தவித்துக் கொண்டிருந்தார்.[12]:224

இந்திய ஒன்றிய அரசாங்கம் ஐதராபாத்தை தன்னுடன் இணைத்துக்கொள்ள விரும்பியது.[12]:223 ரசாக்கர்கள் அட்டூழியங்களின் மத்தியில், இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள[13] "படை நடவடிக்கை" எடுக்க முடிவெடுத்தார். இந்த நடவடிக்கை ஐந்து நாட்கள் நடத்தப்பட்டது. இதில் ரஜாக்கள் எளிதாக தோற்கடிக்கப்பட்டனர்.

இந்தப் படை நடவடிக்கையின்போது இனவாத அடிப்படையில் பாரிய வன்முறைக்கு வழிவகுத்தது. இதுகுறித்து விசாரிக்க இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு, சுந்தர்லால் குழு என அழைக்கப்படும் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். இதன் அறிக்கை 2013 வரை வெளியிடப்படவில்லை, ஒரு பழமைவாத மதிப்பீட்டின்படி ... 27,000 முதல் 40,000 மக்கள் படை நடவடிக்கைக்குப் பிறகு அவர்களுடைய உயிர்களை இழந்தனர் என்று கூறுகிறது."[14]

மேற்கோள்கள் தொகு

 1. "Telangana History PDF". Bookinfo. http://www.telanganastateofficial.com/telangana-state-history-in-english-pdf/. 
 2. "Notification" (PDF). The Gazette of India (Government of India). 4 March 2014 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140327091502/http://www.egazette.nic.in/WriteReadData/2014/158365.pdf. பார்த்த நாள்: 4 March 2014. 
 3. "A brief history of Telangana". Business Standard Ltd. (New Delhi). 1 June 2014. http://www.business-standard.com/article/economy-policy/a-brief-history-of-telangana-114060100762_1.html. பார்த்த நாள்: 20 July 2014. 
 4. Protection wall for Koti Lingala temple
 5. Buddhism and Modern Society, ed. by Y. S. Rao and G.B. Naik, Deep & Deep Publications; 2008, p. 293
 6. Indian History, Krishna Reddy; Tata-McGraw Hill Education, New Delhi, 2011. p.
 7. Kakatiya dynasty
 8. Kakatiyas
 9. Sherman, Taylor C. (2007).
 10. "Hyderabad Police Action". Indian Army. http://indianarmy.nic.in/Site/FormTemplete/frmTempSimple.aspx?MnId=nmnz/S66ueKkrJc8PBO1kw==&ParentID=z2xdy5FtH8G+oZz4hw/CKg==. பார்த்த நாள்: 2014-09-13. 
 11. "Hyderabad on the Net" இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224193046/http://www.hyderabad.co.uk/policeaction.htm. பார்த்த நாள்: 12 September 2014. 
 12. 12.0 12.1 12.2 Barbara D. Metcalf; Thomas R. Metcalf (2006). A Concise History of India (2nd ). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0521682251. https://books.google.com/books?id=jGCBNTDv7acC. 
 13. Kate, P. V., Marathwada Under the Nizams, 1724-1948, Delhi: Mittal Publications, 1987, p.75
 14. Thomson, Mike (2013-09-24). "India's hidden massacre". BBC. http://www.bbc.co.uk/news/magazine-24159594. பார்த்த நாள்: 2013-09-26. பகுப்பு:தெலங்காணா கோயில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கானா_வரலாறு&oldid=3695281" இருந்து மீள்விக்கப்பட்டது