தேக்கின்காடு மைதானம்

மைதானம்

தேக்கின்காடு மைதானம் (Thekkinkadu Maidan) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. வடக்குநாதன் கோவிலின் அமைந்துள்ள இந்த சிறுமலை, கொச்சி தேவசம் வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சூர் நகரின் மையத்தில் உள்ள ஒரு திறந்த மைதானமாகும்.[1] இது கேரளாவில் உள்ள அனைத்து பூரங்களுக்கும் தாயாக கருதப்படும் திருச்சூர் பூரம் என்ற அற்புதமான கலாச்சார திருவிழாவை நடத்துகிறது.

தேக்கின்காடு மைதானம்
Map
அமைவிடம்திருச்சூர் நகரம், கேரளம்
பரப்பளவு65 ஏக்கர்கள்
உருவாக்கம்சக்தன் தம்புரான்
இயக்குபவர்கொச்சி தேவசம் வாரியம்
திறந்துள்ள நேரம்வருடத்தின் அனைத்து நாட்களும்

வரலாறு

தொகு

இம்மைதானம் பழங்காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. திருச்சூரில் தேடப்படும் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட இடமாகவும், அனைத்து வகையான வனவிலங்குகளும் சுற்றித் திரியும் இடமாகவும் இருந்துள்ளது. வடக்குநாதர் கோயில் வாசல் ஒன்றிலிருந்து அடர்ந்த காட்டுக்குள் குற்றவாளிகளை வீரர்கள் தள்ளுவது வழக்கம். பின்னர், பிராமணர்கள், பிற மரபுவழி மக்களின் எதிர்ப்பையும் மீறி, கொச்சியின் மகாராஜா, சக்தன் தம்புரான் தேக்கின்காடு மைதானத்தை சுத்தம் செய்தார்.[2] 1970 வரை மைதானத்தில் தேக்கு மரங்கள் இல்லை. 1970களில் கொச்சி தேவசம் வாரியம் சில தேக்கு மரங்களை நட்டது. 1928 வரை மைதானம் சுகாதார வாரியத்திடம் இருந்தது. 1928இல் திருச்சூர் நகராட்சி உருவாக்கப்பட்டபோது அதனைடம் ஒப்படைக்கப்பட்டது. 1934ஆம் ஆண்டில், திவான் பருவக்காடு நாராயணன் நாயர் மைதானத்தை கொச்சி தேவசம் வாரியத்திடம் வழங்கினார். இடமாற்றத்திற்கான ஒரே நிபந்தனை என்னவென்றால், எந்தவொரு நிறுவனமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கூட்டம் அல்லது விழாவை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.[3]

கட்டமைப்பு

தொகு

மைதானம் 65-ஏக்கர் (260,000 மீ2) பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும், திருச்சூர் சுவராஜ் சுற்றுப் பாதையால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது. இதில் வடக்குநாதன் கோவில், நேரு பூங்கா, கேரள நீர் ஆணைய அலுவலகம்ஆகியனவும் உள்ளன. மைதானத்திலிருந்து ஒன்பது சாலைகள் வழியாக நகரம் முழுவதும் கிளைச் சாலைகள் செல்கிறது. நகரத்தின் பரவலை ஒரு வட்டமாக மாற்ற இந்த சாலைகள் மேலும் சந்திப்புகளை உருவாக்குகின்றன.

செயல்பாடுகள்

தொகு

இந்த மைதானத்தில் பரந்த அளவிலான செயல்பாடுகள் காணப்படுகின்றன. மைதானத்தில் மாலையில் சீட்டாட்டம் ஆடுபவர்களும், சதுரங்க ஆட்டக்காரர்களும் அதிகம் காணப்படுகின்றானர். இங்கு தினமும் அரசியல் விவாதங்களும் நடக்கின்றன. மாணவர்கள் மூலை, தொழிலாளி மூலை, நேரு மண்டபம் ஆகியவை வரலாற்று நிகழ்வுகள் நடந்த புகழ்பெற்ற இடங்களாகும். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, செ. அச்சுத மேனன், ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு போன்ற பிரபலங்கள் மாணவர்கள் மூலையில் உரை நிகழ்த்தியுள்ளனர் . ஜோசப் வடக்கன், அரசியல் ரீதியாக தீவிரமான பாதிரியார், சர்ச்சைக்குரிய புனித ஆராதனையை மைதானத்தில் நடத்தினார். இது அவரை தேவாலயத்தில் இருந்து இடைநீக்கத்திற்கு வழிவகுத்தது. பூரம் திருவிழா, திருச்சூர் வாகனக் கண்காட்சி (திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது) உட்பட மாவட்டத்தில் கூட்டங்களுக்கும், திருவிழாக்களுக்கும் இது ஒரு முக்கிய இடமாகும்.[4] இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 1952 ஆம் ஆண்டு திருச்சூர் நகருக்கு வருகை புரிந்தபோது இந்த மைதானத்தில் உரை நிகழ்த்திய நேரு மண்டபம் அவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. 1982ல் இந்தியாவின் மற்றொரு பிரதமரான அடல் பிகாரி வாச்பாய் இம்மைதானத்தில் உரை நிகழ்த்தினார்.[3]

மைதானத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர்கள்

தொகு
 
வடக்குநாதன் கோயிலிலிருந்து திருச்சூர் நகராட்சி அலுவலச் சாலை ஒரு காட்சி
 
வடக்குநாதன் கோயிலிலிருந்து திருச்சூர் நகராட்சி அலுவலச் சாலை ஒரு காட்சி

சான்றுகள்

தொகு
  1. "Rs. 6 crore for beautification of Thekkinkadu maidan". தி இந்து (Chennai, India). 2005-03-19 இம் மூலத்தில் இருந்து 2005-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050426141837/http://www.hindu.com/2005/03/19/stories/2005031904160300.htm. 
  2. "Thekkinkadu Maidan". Manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2010-02-15.
  3. 3.0 3.1 "Thekkinkadu Maidan and speeches". Mathrubhumi.com. Archived from the original on 2014-03-17. பார்க்கப்பட்ட நாள் 2014-03-14.
  4. "First Fr. Vadakkan Award presented". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article2092841.ece. 
  5. "Thekkinkadu Maidan and speeches". Mathrubhumi.com. Archived from the original on 2014-03-17. பார்க்கப்பட்ட நாள் 2014-03-14.
  6. "Thrissur gears up for Modi's visit". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-29.
  7. "Thrissur gets set to welcome Modi". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-29.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thekkinkadu Maidan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேக்கின்காடு_மைதானம்&oldid=3741734" இலிருந்து மீள்விக்கப்பட்டது