தேசிய நெடுஞ்சாலை 309அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 309அ (National Highway 309A (India)), பொதுவாக தே. நெ. 309அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய மாநிலமான உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள இராமேசுவர் நகரத்தை அல்மோராவுடன் இணைக்கும் ஓர் ஒற்றை வழி நெடுஞ்சாலை ஆகும்.[1] 2000ஆம் ஆண்டில் உத்தராகண்ட மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, இந்த நெடுஞ்சாலையின் அல்மோரா-பாகேசுவர் பகுதி உத்தரப் பிரதேசத்தின் மாநில நெடுஞ்சாலை 37-இன் ஒரு பகுதியாக இருந்தது. இது பாகேசுவரிலிருந்து பரேலி வரை செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 309அ | ||||
---|---|---|---|---|
நிலப்படத்தில் தே. நெ. 309அ சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 126 km (78 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | அல்மோரா | |||
பட்டியல்
| ||||
மேற்கு முடிவு: | இராமேசுவர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தராகண்டம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வரலாறு
தொகுஇந்த நெடுஞ்சாலையின் அல்மோரா-பாகேசுவர் பகுதி பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாகாண 'அல்மோரா ஜோஷிமடம் வண்டி சாலையின்' ஒரு பகுதியாக இருந்தது.[3] இந்த சாலை தாக்லாவுக்கு (இப்போது தகுலா) செல்லும் வழியில் செங்குத்தான இறக்கத்தைக் கொண்டிருந்தது. மேலும் ஓக் மற்றும் ரோடோடென்ட்ரான்களின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. இருப்பினும், மலைகள் தாக்லா மற்றும் பாகேசுவருக்கு இடையில் மிகச் சிறந்த சீர் காடுகளால் சூழப்பட்டிருந்தன.[3] பின்னர் 1909ஆம் ஆண்டில், நெடுஞ்சாலையின் பல பகுதிகள் அல்மோரா கெஜெட்டரில் "மூன்றாம் நிலை உள்ளூர் சாலைகள்" என்று பதிவு செய்யப்பட்டன. இதில் 24 மைல் 'கங்கோலிகாட் முதல் தரம்கர் சாலை மற்றும் 22 மைல் 'பாகேசுவர் முதல் பெரிநாக் சாலை ஆகியவை அடங்கும்.[4]
வழித்தடம்
தொகுதேசிய நெடுஞ்சாலை 309அ இராமேசுவரில் தொடங்கி அல்மோராவில் முடிவடைகிறது. தே. நெ. 309அ முற்றிலும் உத்தராகண்டு மாநிலத்தில் அமைந்துள்ளது. இச்சாலை பித்தோராகர், பாகேசுவர் மற்றும் அல்மோரா மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 309அ பல்வேறு மாவட்டங்களின் நகரங்களையும் இணைக்கிறது. இராமேசுவர், கங்கோலிகாட், பெரிநாக், சௌகோரி, கந்தா, பாகேசுவர், தகுலா, அல்மோரா.[5]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 9 இராமேசுவர் அருகே முனையம்[6]
- தே.நெ. 109K பாகேசுவரில்
- தே.நெ. 109 அல்மோரா அருகே முனையம்[6]
தேசிய நெடுஞ்சாலை 309ஆ
தொகுதேசிய நெடுஞ்சாலை 309ஆ அல்லது தே. நெ. 309ஆ என அழைக்கப்படும் மாற்று நெடுஞ்சாலையும் அல்மோரா மற்றும் இராமேசுவர் நகரங்களை இணைக்கிறது.[7] இது பாகேசுவர் வழியாக 126 கி. மீ. நீளமுள்ள பாதையில் செல்வதை விட நேரடிப் பாதையைக் கடந்து பயணத் தூரத்தை 66 கி. மீ ஆகக் குறைக்கிறது.
படங்கள்
தொகு-
தே. நெ. 309அ கந்தா அருகில்
-
தே. நெ. 309அ மைல் கல் விஜய்பூரில்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.
- ↑ "Complete Road_Detail's_SH" (PDF). Public Works Department, Government of Uttar Pradesh. Archived from the original (PDF) on 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
- ↑ 3.0 3.1 Gamble, J.S. (1882). The Indian Forester (in ஆங்கிலம்). Calcutta: The Calcutta Central Press Co. ltd. p. 210. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
- ↑ Walton, H.G. (1911). Almora: A Gazetter. Allahabad: The Government Press, United Provinces. p. xxvi.
- ↑ "नेशनल हाइवे में बने गड्ढे दुर्घटना को दे रहे दावत- Amarujala" (in en). Amar Ujala. 20 March 2017. http://www.amarujala.com/uttarakhand/bageshwar/national-pitcher-pit-crew-made-in-highway.
- ↑ 6.0 6.1 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.
- ↑ "Declaration of National Highways in Uttarakhand". pib.nic.in. Press Information Bureau, Government Of India. பார்க்கப்பட்ட நாள் 10 April 2017.