தேசிய நெடுஞ்சாலை 312 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 312 (National Highway 312 (India)) பொதுவாக தே. நெ. 312 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில்[3] உள்ள தேசிய நெடுஞ்சாலை 12-ன் இரண்டாம் பாதையாகும்.[2][4]
தேசிய நெடுஞ்சாலை 312 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 329 km (204 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஜாங்கிபூர், முர்சிதாபாத் மாவட்டம் | |||
தெற்கு முடிவு: | பாசிர்ஹத், வடக்கு 24 பர்கனா மாவட்டம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுசாலை கீழ்க்கண்ட நகரங்களை இணைக்கிறது
- முர்சிதாபாத் மாவட்டம்
ஜாங்கிபூர், ஓமர்பூர், லால்கோலா, பகவங்கோலா, முர்சிதாபாத், சுனாகாளி, இசுலாம்பூர், தோம்கல், ஜலங்கி
- நதியா மாவட்டம்
கரீம்பூர், நசீர்பூர், ஹரிபூர், பேட்டை, தேவ்நாத்பூர், தெகட்டா, சாப்ரா, கிருஷ்ணநகர், ஹன்ஷ்காலி, தத்தாபுலியா
- வடக்கு 24 பர்கானாசு
பனேசுவர்பூர், கெலன்சா, பங்காவ்ன், பெரிகோபால்பூர் காட், இச்சாமதி, தர்னிபூர் காட், சுவரூப்நகர் மற்றும் பாசிர்ஹத் (கோஜாதாங்கா)[1][2]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 12 ஜாங்கிபூருக்கு அருகில் முனையம்[1]
- தே.நெ. 112 கெய்ஹாட்டா-பசிர்ஹத் சாலை சந்திப்பு, கைகாடா
- பங்காவ்ன் மோதிகஞ்ச் அருகே
மறுசீரமைப்பு
தொகு2022ஆம் ஆண்டில், இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 318 கிமீ (198 மைல்) நெடுஞ்சாலையை 4 வழிச்சாலைகளாக மறுவடிவமைக்க 4,500 கோடி ரூபாய் (530 அமெரிக்க டாலர்) ஒதுக்கியது. இந்த நெடுஞ்சாலை 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[5] இருப்பினும், பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் இந்தத் திட்டத்திற்குப் பல ஆண்டுகளாகத் தாமதத்தை ஏற்படுத்துகின்றன.
பிப்ரவரி 2024-இல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குப் பதிலளித்த நெடுஞ்சாலை ஆணையத் தகவலின்படி இந்த நெடுஞ்சாலையின் விரிவான திட்ட அறிக்கை இன்னும் முடிக்கப்படவில்லை என்றும், திட்டத்தின் தொடக்கத்திற்கும் நிறைவிற்கும் எந்தக் குறிப்பு காலமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.[6]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ "List of National Highways" (PDF). Ministry of Road Transport and Highways. p. 40. பார்க்கப்பட்ட நாள் 4 June 2022.
- ↑ "বসিরহাট থেকে জঙ্গিপুর পৌছে যান আরও কম সময়ে, নতুন জাতীয় সড়ক পাচ্ছে রাজ্য" (in bn). News18 Bengali. 1 April 2022. https://bengali.news18.com/news/south-bengal/west-bengal-to-get-new-national-highway-from-basirhat-to-jangipur-dmg-773350.html.
- ↑ "Memo No: 27203/NHAI/PIU-Krishnagar/E-27". rtionline.gov.in. NHAI. பார்க்கப்பட்ட நாள் 24 February 2024.