தேசிய நெடுஞ்சாலை 744 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 744 (National Highway 744 (India)) அல்லது தே. நெ. 744 (முன்பு தே. நெ. 208) [1] என்பது தென்னிந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது கேரளாவில் உள்ள கொல்லத்தைத் தமிழ்நாட்டின் மதுரையுடன் இணைக்கிறது.[2] கொல்லத்தில் உள்ள சின்னக்கடையில் தே. நே. 66 இல் தொடங்கி, தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா) மதுரையில் திருமங்கலத்தில் இணைகிறது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 744
744

தேசிய நெடுஞ்சாலை 744
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:206 km (128 mi)
வரலாறு:Announced as 'NH-208' in 2000
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு: தே.நெ. 66 கொல்லம்
கிழக்கு முடிவு: தே.நெ. 44 திருமங்கலம்
அமைவிடம்
மாநிலங்கள்:கேரளா, தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 544H தே.நெ. 744A

மத்திய வரவு செலவு திட்டத்தினை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரை கொல்லம் நெடுஞ்சாலை உட்படத் தமிழகத்தில் 3,500 கி. மீ. நெடுஞ்சாலைகளை மேம்படுத்த 1.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகத் திங்கள்கிழமை அறிவித்தார்.

பாதை விளக்கம்

தொகு

இந்த வழித்தடம் வரலாற்று ரீதியாக முந்திரி மற்றும் மசாலா உற்பத்தி செய்யும் கொல்லம் மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைத்துள்ளது. தற்போது, தமிழகத்திலிருந்து பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்கின்றன. ஆரியங்காவு பகுதியில் உள்ள குறுகிய இடைவெளியில் சாலை வெட்டப்பட்டு, குறிப்பாகத் தென்மலை முதல் செங்கோட்டை வரையிலான பாதை பார்வைக்கு இன்பம் தரும் அழகுமிக்க இடமாக உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லம்-செங்கோட்டை ரயில் பாதை இச்சாலையின் ஓரமாகச் செல்கிறது.[3]

சின்னக்கடை → கல்லும்தாழம் கேரளாபுரம் குந்தாரா → கொட்டாரக்கரைபுனலூர்தென்மலைஆரியங்காவுசெங்கோட்டைதென்காசிகடையநல்லூர்புளியங்குடிவாசுதேவநல்லூர்சிவகிரி →இராஜபாளையம் → திருவில்லிபுத்தூர்திருமங்கலம்[4]

விரிவாக்கம்

தொகு

தே. நெ. 744-ல் கேரளாவின் கடம்பட்டுகோணம் - தேனமலாவில் புதிய சீரமைப்பு செய்யப்படுகிறது. செய்தி அறிக்கைகள்[5] மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்[6] தரவுகளின்படி, தே. நெ. 744இல் திருமங்கலம் (தே. நெ. 44) மற்றும் ராஜபாளையத்திற்கு இடையே உள்ள பகுதியைச் சுங்கச்சாவடியுடன் கூடிய நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் மொத்த தூரம் 68 கி. மீ. ஆகும்.

முக்கிய சந்திப்புகள்

தொகு
மாநிலம் மாவட்டம் அமைவிடம் கிமி மைல் சேருமிடம் குறிப்புகள்
தமிழ்நாடு மதுரை திருமங்கலம் 0 0   தே.நெ. 44 மதுரை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதி முடிவு
விருதுநகர் அழகாபுரி 32 20 மா.நெ. 182 விருதுநகர்
திருவில்லிபுத்தூர் 86 53 மா.நெ. 42 சிவகாசி
திருநெல்வேலி புளியங்குடி 136 85 மா.நெ. 76 சங்கரன்கோயில்
தென்காசி 167 104 மா.நெ. 39 / மா.நெ. 40 பாவூர்சத்திரம், குற்றாலம்
செங்கோட்டை 173 107 மா.நெ. 40 குற்றாலம்
கேரளா கொல்லம் தென்மலை 202 126 மா.நெ. 2 திருவனந்தபுரம்
புனலூர் 223 139 மா.நெ. 48 / மா.நெ. 8 அஞ்சல், ஆயூர், பத்தனாபுரம்
கொட்டாரக்கரை 241 150 மா.நெ. 1 திருவனந்தபுரம், கோட்டயம், அங்கமாலி
கொல்லம் 264 164   தே.நெ. 66 திருவனந்தபுரம், ஆற்றிங்கல், எர்ணாகுளம் நெடுஞ்சாலை மேற்கு முடிவு. கொல்லம் புறவழிச்சாலை

படங்கள்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  2. 2.0 2.1 Details of National Highways in Indiaபரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2009 at the Library of Congress Web Archives
  3. "Government sanctions INR 3440 Cr for projects in Kerala". Devdiscourse. 9 August 2018. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.
  4. Google maps
  5. "Maalaimalar News: திருமங்கலம்-ராஜபாளையம் வரை 68 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிசாலையாக மாற்றம்: பொன்.ராதாகிருஷ்ணன் || Tirumangalam Rajapalayam 68 km to the modification 4 path road ponradhakrishnan". www.maalaimalar.com. Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-03.
  6. "Project Reporter | Four Laning of Thirumangalam to Rajapalayam Section". பார்க்கப்பட்ட நாள் 2016-12-03.