தேத்தாகுடி
தமிழகத்தில் நாகப்பட்டின மாவட்டத்தில் வேதாரண்ய வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் தேத்தாகுடி[4] (Thethakudi). இதன் பழமையான பெயர் தேவதாகுடி என்பது ஆகும்[சான்று தேவை].
தேத்தாகுடி கிராமம் | |||||||
— கிராமம் — | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | நாகப்பட்டினம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. ஆகாசு, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை | 3,892 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
வேதாரண்ய வட்டத்தில் தேத்தாகுடி பெரிய ஊர். நிர்வாகத்திற்காக இவ்வூர் தேத்தாகுடி வடக்கு, தேத்தாகுடி தெற்கு என இரண்டு ஊர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இவ்வூரைச் சுற்றி, செம்போடை, கத்திரிபுலம், குரவப்புலம், நெய்விளக்கு, தோப்புதுறை, பெரியகுத்தகை, புட்பவனம் போன்ற ஊர்கள் அருகில் அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு
தொகுஇவ்விரண்டு ஊர்களிலும் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி ஆண்கள் 5790 பேரும் பெண்கள் 5787 பேரும் மொத்தம் 11587 பேர் வசிக்கின்றனர். இம்மக்களில் பெரும்பான்மையானோர் நாட்கூலி வேலைக்கே செல்கின்றனர்.
நீர்வளமும் தொழிலும்
தொகுஉவர்மணலின் காரணமாக இப்பகுதியில் கூடுதலாகத் தென்னை, சவுக்கு, முந்திரி, மா,வேர்கடலை போன்ற பணப்பயிர்களே அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
இக்கிராமத்தின் கிழக்குப்பகுதில் உப்பனாறு செல்கின்றது. இது பெரியகுத்தகை என்ற ஊரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. இந்த ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள இறால் பண்ணையில் இறால்கள் வளர்க்கப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
கோயில்கள்
தொகுகுளுந்தாளம்மன், முனிஸ்வரர் ஆலயங்கள் இவ்வூரில் அமைந்துள்ளன. கோயில் திருவிழா மற்றும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறும். மேலும் இவ்வூரில் அழகியநாதர், பிச்சைகொடை அய்யனார், திரௌபதியம்மன், மாரியம்மன், தருமலிங்க சித்தர் சுவாமி, காமட்சியம்மன் போன்ற கோவில் அமைந்துள்ளன.
பள்ளிகள்
தொகுஇவ்வூரில் ஒரு மேனிலைப் பள்ளியும், இரண்டு நடுநிலைப் பள்ளிகளும் அமைந்துள்ளன. தொடக்கப் பள்ளிகளும் அமைந்துள்ளன. மேலும் இரண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளும் அமைந்துள்ளன.
வங்கிகள்
தொகுஇவ்வூரில் இரண்டு அரசு வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் கனரா வங்கியும் அமைந்துள்ளன.
போக்குவரத்து
தொகுஇவ்வூரில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், தலைஞாயிறு, திருத்துறைப்பூண்டி போன்ற ஊர்களுக்குச் செல்ல அதிகளவில் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இருந்து 25கி.மி தூரத்தில் அமைந்து வேளாங்கண்ணியில் இருந்து தென்னிந்தியாவின் அநேக பகுதிகளுக்கும் பேருந்து மற்றும் தொடர்வண்டி வசதிகள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.