பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை

(தொல்பழங்கால எகிப்தியக் கட்டிடக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
SaintPierre1.JPG

இக் கட்டுரை
மேலைநாட்டுக்
கட்டிடக்கலை வரலாற்றுத்

தொடரின்
ஒரு பகுதியாகும்.

புதியகற்காலக் கட்டிடக்கலை
பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை
சுமேரியக் கட்டிடக்கலை
செந்நெறிக்காலக் கட்டிடக்கலை
பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை
பண்டை உரோமன் கட்டிடக்கலை
மத்தியகாலக் கட்டிடக்கலை
பைசண்டைன் கட்டிடக்கலை
ரோமனெஸ்க் கட்டிடக்கலை
கோதிக் கட்டிடக்கலை
மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
பரோக் கட்டிடக்கலை
புதியசெந்நெறிக்காலக் கட்டிடக்கலை
நவீன கட்டிடக்கலை
Postmodern architecture
Critical Regionalism
தொடர்பான கட்டுரைகள்
கட்டத்தைத் தொகுக்கவும்

எகிப்திய நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்று காணக் கிடைக்கும் மிகப் பழைய கட்டிடங்கள் பல இப்பண்பாட்டைச் சேர்ந்தவையாகும். இக் கட்டிடங்களின் மூலம் எகிப்திய நாகரிகம் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறியக் கூடியதாக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

நைல் பள்ளத்தாக்கு ஒரு பழமையான செல்வாக்கு பெற்ற நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்திய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இங்குள்ள பழமையான கிசாவின் பெரிய பிரமிட் மற்றும் கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் ஆகியவை புகழ் பெற்ற கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களாகும்.

பண்டைய எகிப்து கட்டிடங்களில், மரம் பற்றாக்குறை காரணமாக, சூரிய வெப்பத்தில்-சுட்ட மண்செங்கல் மற்றும் கல் (முக்கியமாக சுண்ணாம்பு, ஆனால் மணற்பாறை மற்றும் கருங்கல்) ஆகிய இரண்டு முக்கிய கட்டுமான பொருட்களை கணிசமான அளவு பயன்படுத்தினர்.

பழைய இராஜ்ஜியம் முதலாகவே, கல் பொதுவாக, கல்லறைகள் மற்றும் கோயில்கள் கட்டுவதற்கு பயன்படுத்தினர், செங்கற்கள் அரச அரண்மனைகள், கோட்டைகள், கோவில், மாவட்ட மற்றும் நகரங்களின் சுவர்கள், மற்றும் கோவில்வளாகங்களில் உள்ள துணை கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தினர்.