நடுவட்டம், மலப்புறம்
நடுவட்டம் (Naduvattom) என்பது இந்தியாவின் கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊர் ஆகும். கேவென்டர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் என்பது நடுவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான சங்கம் ஆகும். [1]
நடுவட்டம் | |
---|---|
கணக்கெடுப்ப ஊர் | |
ஆள்கூறுகள்: 10°52′56″N 76°00′30″E / 10.88220°N 76.00822°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 18,891 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679571 |
வாகனப் பதிவு | KL-55 |
மக்கள்தொகை
தொகு2001[update] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நடுவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 18891 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 9049 என்றும், பெண்களின் எண்ணிக்கை 9842 என்றும் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுநடுவட்டம் கிராமமானது குட்டிப்புரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 66 எடப்பாள் வழியாகச் செல்கிறது. இச்சாலையானது வடக்கில் கோவா, மும்பை ஆகியவற்றை இணைக்கிறது. தெற்கில் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் ஆகியவற்றை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள தொடருந்து நிலையம் குட்டிப்புரத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.