நத்தாநல்லூர்

நத்தாநல்லூர், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டத்தில் வாலாஜாபாத் ஒன்

நத்தாநல்லூர் (Nathanallur) தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியத்தில், உள்ள சிறிய கிராமம் ஆகும்..[5][6][7][8][9]

நத்தாநல்லூர்
—  கிராமம்  —
நத்தாநல்லூர்
இருப்பிடம்: நத்தாநல்லூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°48′9.79″N 79°50′41.42″E / 12.8027194°N 79.8448389°E / 12.8027194; 79.8448389ஆள்கூறுகள்: 12°48′9.79″N 79°50′41.42″E / 12.8027194°N 79.8448389°E / 12.8027194; 79.8448389
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். மா. ஆர்த்தி, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர் மணி. வ[4]
மக்கள் தொகை

அடர்த்தி

2,158 (2011)

417/km2 (1,080/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.18 சதுர கிலோமீட்டர்கள் (2.00 sq mi)

64 மீட்டர்கள் (210 ft)

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 48, நத்தாநல்லூர் வழியாக செல்கிறது. நத்தாநல்லூருக்கு 5.5 கி.மீ தொலைவில் வாலாஜாபாத் பேருராட்சியும் 20.9 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் நகராட்சியும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை 67.1 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நத்தாநல்லூர் வரலாறுதொகு

உயர்திரு நந்தனர் என்னும் புலவர் வாழ்ந்ததால் இந்த ஊர் நத்தாநல்லூர் என்று பெயர் பெற்றது என பலராலும் நம்பப்படுகிறது. நத்தாநல்லூர், மதுரா நல்லூர் அல்லது நெல்லூர் என்கிற சிறிய கிராமத்தையும் கொண்டுள்ளது. நெல்லூர் கிராம மக்கள் நத்தாநல்லூரில் இருந்து விவசாயம் செய்வதற்காக சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊருக்குக் குடி பெயர்ந்தனர்.

நடைபெறும் விழாக்கள்தொகு

நத்தாநல்லூரில் பல்வேறு ஆலயங்கள் உள்ளது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு திருவிழா என பல்வேறு காலங்களில் நடைபெறுகிறது.

நத்தாநல்லூரில் உள்ள ஆலயங்களின் பெயர்கள் பின்வருமாறு.

 • எல்லயம்மன் ஆலயம்,
 • பெருமாள் ஆலயம்,
 • விநாயகர் ஆலயம்,
 • கங்கையம்மன் ஆலயம்,
 • துர்கையம்மன் ஆலயம்,
 • செல்லியம்மன் ஆலயம்,
 • அடைஞ்சியம்மன் ஆலயம் என இன்னும் பல,.


தேவி எல்லம்மன் கோயில்தொகு

 
தேவி எல்லம்மன் கோயில் முன்தோற்றம்
 
திருவிழாவில் எடுத்த அருள்மிகு எல்லம்மன் கோயில் முகப்பு புகைப்படம்

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் அமாவசை அன்று பிரமாண்டமாகத் தெப்ப உற்சவமும் சிம்ம வாகன பார்வேட்டை உற்சவமும் அலங்கார வாண வேடிக்கைகளுடன் எல்லம்மனுக்குச் வெகுசிறப்பாகத் திருவிழா நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கொடியேற்று விழாவுடன் இனிதே தொடங்கி ஒவ்வொரு நாளும் பிரம்ம உற்சவத்தோடு கோலாகலமாக நடைபெறும்.

இறுதி நாள் திருவிழா அன்று, அனைத்து கிராம மக்களும் அவர்களது உறவினர்களோடு எல்லையம்மன் ஆலயத்திற்கு முன் உள்ள தெப்பக்குளத்திற்கு அருகாமையில் ஒன்று திரண்டு அம்மனைத் தரிசனம் செய்ய காத்திருப்பார்கள். எல்லம்மன் அலங்கரித்து முதலில் ஊஞ்சலில் அமர வைத்து பின் தெப்பலுக்கு கொண்டு செல்வர். தெப்பல் மூன்று முறை குளத்தைச் சுற்றிவர வாண வேடிக்கைகளுடன் திருவிழா நடைபெறும். பின் எல்லம்மன் ஊரைச் சுற்றி வீதிஉலா வர மக்கள் அனைவரும் தரிசனம் செய்து திருவிழாவை இனிதே கொண்டாடி மகிழ்வர். மறுநாள் தெரு கூத்து அல்லது நாடகம் நடைபெற இந்தத் திருவிழா இனிதே முடிவடைகிறது.

தெப்ப உற்சவம் புகைப்படத் தொகுப்புதொகு

பிரம்ம உற்சவங்கள்தொகு

 
தேவி எல்லம்மன் சிம்மவாகன பார்வேட்டை உற்சவம்
நாள் அம்மன் வீதி உலா
நாள் 1 கொடியேற்று விழா, பார்வதியம்மாள், எல்லம்மன் கிரக புஷ்ப அலங்காரம் பம்பை
நாள் 2 அருள்மிகு துர்கையம்மன்
நாள் 3 அருள்மிகு சாமுண்டீஸ்வரி
நாள் 4 அருள்மிகு ரேணுகாபரமேஸ்வரி
நாள் 5 அருள்மிகு மீனாட்சி அம்மன்
நாள் 6 அருள்மிகு ஆண்டாள் அம்மன்
நாள் 7 அருள்மிகு இராஜராஜேஸ்வரி
நாள் 8 அருள்மிகு கன்னியம்மன்
நாள் 9 அருள்மிகு காமாட்சியம்மன்
நாள் 10 தேவி எல்லம்மன் சிம்ம வாகன பார்வேட்டை
நாள் 11 சந்தன காப்பு அலங்காரம்

பெருமாள் ஆலயம்தொகு

பிரசித்தி பெற்ற திருமால் ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மகா உற்சவம் நடைபெறுகிறது. பண்டிதர்கள் பஜனை பாடி, உற்சவ மூர்த்தி பொதுமக்களுக்கு காட்சி அருள்கிறார். புரட்டாசி இறுதி சனிக்கிழமையன்று பொதுமக்கள் ஒன்றுதிரள, பெருமாளுக்கு உரி அடி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

திருமால் அல்லது பெருமாள் உற்சவம்

இதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும், ஆடி மாதம் பொம்மாயி அம்மன் மற்றும் கங்கை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் என பல்வேறு விழாக்கள் நடைபெறும்.

பள்ளிக்கூடம்தொகு

 
நத்தாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி 1923-ல்[10] ஆரம்பிக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் இந்தப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயில முடிந்தது. மேல் வகுப்பு படிக்க மாணவர்கள் வாலாஜாபாத் செல்ல வேண்டி இருந்த காலம் மாறி 2006-ல் இந்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக மாறியது.

பிரிவு விழுக்காடு
சராசரி கல்வியறிவு 67.8%
ஆண்களின் கல்வியறிவு 73.9%
பெண்களின் கல்வியறிவு 61.9%


போக்குவரத்துதொகு

 
நத்தாநல்லூர் பேருந்து நிறுத்தம், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 48

கிராம மக்கள் வணிகம் செய்ய வாலாஜாபாத் பேரூராட்சிக்கு செல்வது வழக்கம். எனவே பெரும்பாலும் மக்கள் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் கிராம மக்கள் காஞ்சிபுரம், சென்னை என நகராட்சிகளுக்கு செல்ல அரசு பேருந்துகளையும் நம்பி இருக்கின்றனர். நத்தாநல்லூருக்கு என தனி பேருந்து இல்லை. எனவே, மக்கள் 1.5 மைல் தூரத்தில் உள்ள தமிழ் நாடு மாநில நெடுஞ்சாலை 48-க்கு செல்கின்றனர். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 79, 579A பேருந்து வசதி காஞ்சிபுரம், சென்னைக்கு உண்டு.

வழித்தடங்களின் பட்டியல்தொகு

சாதாரண பேருந்துகள் விரைவு பேருந்துகள் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் குளிர்சாதனப் பேருந்துகள்

விளக்கம்: அ.வ- அதிக எண்ணிக்கையிலான வழித்தடங்கள், கு.வ – குறைந்த எண்ணிக்கையிலான வழித்தடங்கள்

தடம் புறப்படும் இடம் செல்லும் இடம் வழி அ.வ கு.வ
579A தாம்பரம் வாலாஜாபாத் முடிச்சூர், படப்பை, ஓரகடம், வாரணவாசி, நத்தாநல்லூர் x
79 காஞ்சிபுரம் தாம்பரம் ஐயம்பேட்டை, வாலாஜாபாத், நத்தாநல்லூர், வாரணவாசி, ஓரகடம், படப்பை, முடிச்சூர் x
79EXP காஞ்சிபுரம் தாம்பரம் ஐயம்பேட்டை, வாலாஜாபாத், வாரணவாசி, ஓரகடம், படப்பை, முடிச்சூர் x

தொழில்தொகு

பெரும்பாலான மக்களுக்கு விவசாயமே தொழிலாகும். ஆனால் இன்று விவசாயம் மெல்ல அழிந்து கட்டுமான தொழில் மேலோங்க தொடங்கியுள்ளது.

மதம்தொகு

90 சதவீதம் இந்து மத மக்கள். சிலர் சமீப காலங்களில் கிருத்துவ மதத்திற்கு மாறி வருகின்றனர்.

தியான சபைதொகு

 • துரைமுருகர் சிவ மரபு சித்தாந்த தியான சபை,[11] நத்தாநல்லூர்

அருகில் உள்ள கிராமங்கள், நகரங்கள்தொகு

பெயர் தூரம்
புளியம்பாக்கம் 2.0 கி.மீ
கட்டவாக்கம் 3.9 கி.மீ
சங்கராபுரம் 5.0 கி.மீ
ஊத்துக்காடு 5.7 கி.மீ
தென்னேரி 10.5 கி.மீ
வாலாஜாபாத் 5.5 கி.மீ
காஞ்சிபுரம் 20.9 கி.மீ
தாம்பரம் 36.4 கி.மீ

மேற்கோள்கள்தொகு

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 4. Arasakumar Thirunavukkarasu, Mr. "Kanchipuram Village Panchayat Presidents list 2011" (PDF). Website. District Administration, Kancheepuram. 3 மார்ச் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-30 அன்று பார்க்கப்பட்டது.
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-08-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-30 அன்று பார்க்கப்பட்டது.
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-30 அன்று பார்க்கப்பட்டது.
 8. http://censusindia.gov.in/NprStateReport.aspx?stcd=33&distcd=03&tslcode=006
 9. Arasakumar Thirunavukkarasu, Mr. "National Population Register". Website. Census Of India. 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 10. http://www.schoolsworld.in/schools/showschool.php?school_id=33030201701
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-11-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-25 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தாநல்லூர்&oldid=3559977" இருந்து மீள்விக்கப்பட்டது