நபரங்குபூர் மக்களவைத் தொகுதி
நபரங்குபூர் மக்களவைத் தொகுதி (Nabarangpur Lok Sabha constituency-முன்னர் நவ்ராங்பூர் மக்களவைத் தொகுதியாக அறியப்பட்டது) கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 1967 முதல் 1998 வரை காகபதி பிரதானி 9 முறை இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால் இது இந்திய தேசிய காங்கிரசின் பாதுகாப்பான தொகுதிகளில் ஒன்றாகும்.
நபரங்குபூர் (ப.கு.) OD-12 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 15,13,787 |
ஒதுக்கீடு | ST |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பாலபத்ரா மாஜ்கி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டசபை பிரிவுகள்
தொகு2008ஆம் ஆண்டில் எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகளாக மல்கன்கிரி, சித்ரகொண்டா, கோட்பாத், நபரங்பூர், கொடிங்கா, தபுகாம் மற்றும் உமர்கோட் இருந்தன.[1]
எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது, இந்தத் தொகுதியில் பின்வரும் சட்டமன்றப் பிரிவுகள் உள்ளன.
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
73 | உமர்கோட் (ப.கு.) | நபரங்குபூர் | நித்தியானந்தா கோண்ட் | பாரதிய ஜனதா கட்சி | |
74 | ஜரிகாம் (ப.கு.) | நர்சிங் பத்ரா | |||
75 | நபரங்குபூர் (ப.கு.) | கௌரி சங்கர் மாஜி | |||
76 | தபுகம் (ப.கு.) | மனோகர் ரந்தாரி | பிஜு ஜனதா தளம் | ||
142 | கோட்பாட் (ப.கு.) | கோராபுட் | ரூபு பத்ரா | பாரதிய ஜனதா கட்சி | |
146 | மல்கன்கிரி (ப.கு.) | மால்கான்கிரி | நரசிங்கா மட்காமி | ||
147 | சித்ரகொண்டா (ப.கு) | மங்கு கில்லா | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 17 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நபரங்குபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்.[2]
ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பொன்னட சுப்பா ராவ் | கனாதந்திர பரிசத் | |
1957 : தொகுதி செயல்பாட்டில் இல்லை
| |||
1962 | ஜெகன்நாத ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | காகபதி பிரதானி | ||
1971 | |||
1977 | |||
1980 | |||
1984 | |||
1989 | |||
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | பரசுராம் மாஜி | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | |||
2009 | பிரதீப் குமார் மாஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | பாலபத்ரா மாஜி | பிஜு ஜனதா தளம் | |
2019 | ரமேஷ் சந்திர மாஜி | ||
2024 | பாலபத்ரா மாஜி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகு2024ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் 2024 மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[3] இதன்படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பலபத்ரா மாஜி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரதீப் குமார் மஜியை 87,536 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பாலபத்ரா மாஜ்கி | 4,81,396 | 38.74 | 9.24 | |
பிஜத | பிரதீப் குமார் மாஜ்கி]] | 3,93,860 | 31.70 | ▼2.08 | |
காங்கிரசு | புஜ்பால் மாஜ்கி | 3,03,392 | 24.42 | ▼5.78 | |
நோட்டா | நோட்டா | 43,268 | 3.48 | ||
வாக்கு வித்தியாசம் | 87,536 | 7.04 | |||
பதிவான வாக்குகள் | 12,42,475 | 82.16 | 2.64 | ||
பா.ஜ.க gain from பிஜத | மாற்றம் | {{{swing}}} |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on November 8, 2005. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ "Nabarangpur (ST) General (Lok Sabha) Election Result". MapsofIndia. பார்க்கப்பட்ட நாள் 26 March 2014.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.