நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு

மலேசியா நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழு

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Negeri Sembilan State Executive Council; மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Sembilan) என்பது மலேசியா நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். நெகிரி செம்பிலான் யாம் துவான் பெசார் (Yang di-Pertuan Besar of Negeri Sembilan) அவர்களால் நியமிக்கப்பட்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் (Negeri Sembilan Menteri Besar) இந்த ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் (Negeri Sembilan State Legislative Assembly) அதிகப் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.[1][2]

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு
Negeri Sembilan State Executive Council
Majlis Mesyuarat Kerajaan Negeri Sembilan
2023–தற்போது
உருவான நாள்14 ஆகஸ்டு 2023
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்அமினுடின் அருண்
(Aminuddin Harun)
(பாக்காத்தான்) PH – பி.கே.ஆர் PKR
நாட்டுத் தலைவர்யாம் துவான் பெசார் துவாங்கு முகிரிஸ்
(Tuanku Muhriz Tuanku Munawir)
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை11
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
31 / 36
எதிர் கட்சி
எதிர்க்கட்சித் தலைவர்ரிட்சுவான் அகமது
(பெரிக்காத்தான்பெர்சத்து)
வரலாறு
Legislature term(s)15-ஆவது மலேசிய நாடாளுமன்றம்

இந்த ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை, மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் அந்தக் குழு சார்ந்த மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர் ஒரு குழுவின் தலைவராகச் செயல்படுவார்.[3]

உறுப்பினர்களின் பட்டியல்

தொகு

அமினுடின் II ஆட்சிக்குழு

தொகு
     பாக்காத்தான் அரப்பான் (7)      பாரிசான் நேசனல் (4)

14 ஆகஸ்டு 2023 முதல் உறுப்பினர்கள்:[4][5][6]

பெயர் துறை கட்சி சட்டமன்ற
தொகுதி
தொடக்கம் முடிவு
டத்தோ ஸ்ரீ அமினுடின் அருண்
(நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்)
  • இசுலாமிய மதம்
  • நிதி
  • பாதுகாப்பு
  • நிலம்
  • இயற்கை வளங்கள்
  • உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள்
பாக்காத்தான் (பி.கே.ஆர்) சிக்காமட் சட்டமன்றத் தொகுதி 14 ஆகஸ்டு 2023 பதவியில்
டத்தோ ஸ்ரீ சலாலுடின் அலியாசு (Senior EXCO)
  • கிராமப்புற வளர்ச்சி
  • தோட்டம் மற்றும் பொருட்கள்
  • விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு
பாரிசான் (அம்னோ) பெர்த்தாங் சட்டமன்றத் தொகுதி 24 ஆகஸ்டு 2023
தியோ கோக் சியோங்
  • தொழில்துறை
  • முசுலிம் அல்லாதோர் விவகாரங்கள்
பாக்காத்தான் (ஜசெக) பகாவ் சட்டமன்றத் தொகுதி
நிக்கோல் தான் லீ கூன்
  • சுற்றுலா
  • கலை மற்றும் கலாசாரம்
புக்கிட் கெப்பாயாங் சட்டமன்றத் தொகுதி
வீரப்பன் சுப்ரமணியம்
  • நுகர்வோர் விவகாரங்கள்
  • மனித வளம்
  • பருவநிலை மாற்றம்
  • கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை
ரெப்பா சட்டமன்றத் தொகுதி
அருள் குமார் ஜம்புநாதன்
  • வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி
  • பொது போக்குவரத்து
நீலாய் சட்டமன்றத் தொகுதி
டத்தோ இசுமாயில் லாசிம்
  • கல்வி
  • மனித மூலதனம்
பாரிசான் (அம்னோ) செனாலிங் சட்டமன்றத் தொகுதி
முசுதபா நாகூர்
  • இளைஞர்கள் மற்றும் விளையாட்டு
பாலோங் சட்டமன்றத் தொகுதி
முகமது பைசல் ரம்லி
  • பாரம்பரியம்
  • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை
  • இலக்கவியல்
லிங்கி சட்டமன்றத் தொகுதி
நூர்சுனிதா பேகம் அப்துல்லா
  • பெண்கள் விவகாரங்கள்
  • சமூக நல
பாக்காத்தான் (பி.கே.ஆர்) பிலா சட்டமன்றத் தொகுதி
துங்கு சம்ரா துங்கு சுலைமான்
  • சுகாதாரம்
  • தேசிய ஒற்றுமை
  • தகவல்
  • தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு
  • அரசு சாரா அமைப்பு (NGO)
அம்பாங்கான் சட்டமன்றத் தொகுதி

அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்

தொகு
பதவி பெயர்
மாநில செயலாளர் முகமது சாபிர் இப்ராகிம்
மாநில நிதி அதிகாரி சொகானி அசன்
மாநில சட்ட ஆலோசகர் இசுகந்தர் அலி தேவா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Negeri Sembilan Government Official Portal - Exco dan DUN". www.ns.gov.my. பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  2. "N. Sembilan MB announces portfolios for 11-member state executive council". Malay Mail (in ஆங்கிலம்). 24 August 2023. பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  3. "Negeri Sembilan Government Official Portal - Ahli Majlis Mesyuarat Kerajaan Negeri". www.ns.gov.my. பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  4. Shahari, Nazarudin. "MB umum portfolio 10 Exco Negeri Sembilan". Utusan Online. http://www.utusan.com.my/berita/nasional/mb-umum-portfolio-10-exco-negeri-sembilan-1.678813. 
  5. "10 Negeri Sembilan exco members sworn in, 6 new faces". MalaysiaNow (in ஆங்கிலம்). 24 August 2023. பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  6. "Aminuddin announces portfolios for Negri's 11-member state executive council". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.

வெளி இணைப்புகள்

தொகு