அமினுடின் அருண்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 11-ஆவது [ந்திரி பெசார்

டத்தோ ஸ்ரீ உத்தாமா அமினுடின் அருண் (ஆங்கிலம்; மலாய்: Aminuddin bin Harun; சீனம்: 阿敏努丁·哈仑; சாவி: أمين الدين بن هارون ; (பிறப்பு: 2 சனவரி 1967) என்பவர்; 2018 மே மாதம் தொடங்கி மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 11-ஆவது நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக பதவி வகிக்கின்றார்.

அமினுடின் அருண்
Yang Berhormat
YB Aminuddin Harun
11-ஆவது நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2018
ஆட்சியாளர்துவாங்கு முகிரிஸ்
முன்னையவர்முகமது அசான்
தொகுதிநெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் சிக்காமட்
துணைத்தலைவர் மக்கள் நீதிக் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஜூலை 2022
குடியரசுத் தலைவர்அன்வர் இப்ராகீம்
மலேசிய நாடாளுமன்றம்
போர்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
19 நவம்பர் 2022
முன்னையவர்அன்வர் இப்ராகீம்
(பாக்காத்தான்பி.கே.ஆர்)
பெரும்பான்மை23,601 (2022)
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2008
முன்னையவர்யூசோப் அர்மைன் சா
(பாரிசான்அம்னோ)
பெரும்பான்மை499 (2008)
510 (2013)
3,413 (2018)
2,662 (2023)
மாநிலத் தலைவர் பாக்காத்தான்
நெகிரி செம்பிலான்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 ஆகஸ்டு 2017
மலேசிய மக்களவை
2022பாக்காத்தான்
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்
2008–2018மக்கள் நீதிக் கட்சி
2018பாக்காத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சனவரி 1967 (1967-01-02) (அகவை 57)
கம்போங் பச்சித்தான், போர்டிக்சன், நெகிரி செம்பிலான், மலேசியா
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிஅம்னோ (UMNO)
(1998)
பி.கே.ஆர் (PKR)
(1999)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் (BN)
(1998)
மாற்று பாரிசான் (BA)
(1999–2004)
பாக்காத்தான் ராக்யாட் (PR)
(2008–2015)
பாக்காத்தான் (PH)
(2015)
துணைவர்வான் அஸ்னி வான் யூசோப்
பிள்ளைகள்5
முன்னாள் கல்லூரிமாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
புனைப்பெயர்தோக் மின்[1]

மார்ச் 2008 முதல் சிக்காமட் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும்; நவம்பர் 2022 முதல் போர்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியின் மலேசிய மக்களவை உறுப்பினராகவும் சேவை செய்து வருகிறார்.[2]

முன்பு பாக்காத்தான் ராக்யாட் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சி கட்சியின் துணைத் தலைவராக 2022 சூலை மாதத்தில் இருந்து சேவை செய்து வருகிறார்.[3]

அத்துடன் 2017 ஆகஸ்டு மாதத்தில் இருந்து நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். இதற்கு முன்னர் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியான அம்னோவின் மூத்த உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

வாழ்க்கை

தொகு

அமினுடின் 2 ஜனவரி 1967 அன்று நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சன் மாவட்டத்தில் உள்ள கம்போங் கம்போங் பச்சித்தானில் பிறந்தார். மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் படிப்பைத் தொடர்வதற்கு முன்பு, போர்ட்டிக்சன் நகரில் உள்ள தானா மேரா தேசிய இடைநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

பின்னர் 1991 முதல் 1995 வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அதிகாரியாகப் பணியாற்றினார். 1995-இல், கோல்டன் ஹோப் நிறுவனத்தில் உற்பத்தி மேலாண்மைத் தலைவராகச் சேர்ந்தார்.

மந்திரி பெசார் பதவி

தொகு

1999-இல் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியில் சேருவதற்கு முன்பு, அமினுடின் அருண் அம்னோவின் உறுப்பினராகவும், அம்னோ கம்போங் பச்சித்தான் கிளையின் செயலாளராகவும் (1995-1998); மற்றும் ஜிம்மா மாநில சட்டமன்றத்தின் அம்னோ இளைஞர் செயலாளராகவும் (1997-1998) சேவை செய்தார்.[4]

2018 மலேசியப் பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானில் பாக்காத்தான் அரப்பான் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் 12 மே 2018 அன்று கோலா பிலாவில் உள்ள இசுதானா செரி மெனாந்தியில் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக பதவியேற்றார்.[5]

வான் அஸ்னி வான் யூசோப் என்பவரை மணந்த இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள்; மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் உள்ளனர்.[3]

தேர்தல் முடிவுகள்

தொகு
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்[6][7]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2008 N36 சிக்காமட் அமினுடின் அருண் (பி.கே.ஆர்) 6,036 51.02% யூசோப் அர்மாயின் சா (அம்னோ) 5,537 46.80% 11,830 499 76.37%
2013 அமினுடின் அருண் (பி.கே.ஆர்) 8,584 50.63% வான் சல்வதி அப்துல்லா (அம்னோ) 8,074 47.62% 16,954 510 86.30%
2018 அமினுடின் அருண் (பி.கே.ஆர்) 9,832 47.30% சியாம்சுல் அம்ரி இசுமாயில் (அம்னோ) 6,419 30.90% 17,858 3,413 85.90%
ரகீம் யூசுப் (பாஸ்) 1,331 6.40%
பூஜாங் அபு (சுயேச்சை) 15 0.10%
2023 அமினுடின் அருண் (பி.கே.ஆர்) 12,730 54.82% அகமத் ரைகான் முகமது இலால் (பெர்சத்து) 10,068 43.36% 23,220 2,662 71.79%
முகமது அபீசு பகாருதீன் (சுயேச்சை) 339 1.46%
பூஜாங் அபு (சுயேச்சை) 83 0.36%
மலேசிய மக்களவை
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2022 P132 போர்டிக்சன், நெகிரி செம்பிலான் அமினுடின் அருண் (பி.கே.ஆர்) 42,013 52.40% பா. கமலநாதன் (மஇகா) 18,412 22.96% 80,185 23,601 76.7%
ரபீ முசுதபா (பாஸ்) 18,235 22.74%
(பெஜுவாங்) 1,084 1.35%
அப்துல் ராணி குலுப் அப்துல்லா (சுயேச்சை) 441 0.55%

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Badrul Hafizan Mat Isa (10 November 2022). "Tok Mat dan Tok Min, siapa bakal cipta sejarah?". Utusan Malaysia. https://www.utusan.com.my/rencana/2022/11/tok-mat-dan-tok-min-siapa-bakal-cipta-sejarah/. 
  2. "Pakatan Harapan announces state chiefs".
  3. 3.0 3.1 Bernama (12 Mei 2018). "Aminuddin angkat sumpah MB NS kelapan". Malaysiakini. https://www.malaysiakini.com/news/424424?utm_source=dlvr.it&utm_medium=facebook. 
  4. "Aminuddin appointed as Negri eighth MB". Malaysiakini. 12 May 2018 இம் மூலத்தில் இருந்து 17 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180517145558/https://www.malaysiakini.com/news/424424. 
  5. "Aminuddin Harun proposed as next Negri MB – Nation | The Star Online". thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.
  6. "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
  7. "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
  8. "NS menteri besar heads list of state honours recipients". Bernama. Malaysiakini. 14 January 2019. பார்க்கப்பட்ட நாள் 14 January 2019.
  9. "MB heads Negri honours list". www.thestar.com.my. 14 January 2024.
அரசியல் பதவிகள்
முன்னர் 11-ஆவது நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்
2018 தொடங்கி – தற்போது வரையில்
பதவியில் உள்ளார்

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினுடின்_அருண்&oldid=3901381" இலிருந்து மீள்விக்கப்பட்டது