நெய்தல் (திணை)

(நெய்தல்திணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. "வருணன் மேய பெருமணல் உலகமும்" எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது.

நெய்தல் மலரில் உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.

தும்பை மலர்:

இம்மலர் பற்றி புறப்பொருள் வெண்பாமாலை என்கிற நூலில், கடும்போர் புரிவோர் தும்பை மலரை மாலையாகத் தொடுத்து அம்மலரைச் சூடி போர் செய்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறது.

இம்மலர் மிகச்சிறிய வடிவத்தைக் கொண்ட வெண்மையான மலர்.

இம்மலர் விநாயகருக்கு உகந்த மலராகக் கருதப்படுகிறது.

நெய்தல் நிலத்தின் பொழுதுகள்

தொகு

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்

தொகு

நெய்தல் நிலத்தின் உரிப்பொருட்கள்

தொகு
  • அக ஒழுக்கம் : இரங்கல்
  • புற ஒழுக்கம் : தும்பை

மேற்கோள்கள்

தொகு
  1. "ஐந்திணை".
  2. "TVU-". www.tamilvu.org. 2021-08-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
தமிழர் நிலத்திணைகள்
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்தல்_(திணை)&oldid=4086794" இலிருந்து மீள்விக்கப்பட்டது