ந. பூலாம்பட்டி
ந. பூலாம்பட்டி (N. Poolampatty) இந்தியா நாடு, தமிழ்நாடு மாநிலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் உள்ள ஒரு ஊராகும்.
ந. பூலாம்பட்டி | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அமைவிடம்
தொகுஇவ்வூர் மணப்பாறையிலிருந்து வடமேற்கில் சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது.
ஊர் - பெயர்க் காரணம்
தொகுந. பூலாம்பட்டி என்னும் சொல்லில் "ந" என்னும் எழுத்து நல்லதம்பி என்பவரைக் குறிக்கும். இவர்தான் இந்த ஊரை உருவாக்கியவர் என்றும், இவ்வூரில் முதன் முதலில் குடியேறியவர் என்றும் வாய்மொழி தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
பூலாச்செடிகள் அதிகம் இருப்பதால் இவ்வூர் பூலாம்பட்டி என அழைக்கப்படுகிறது.
ஊர் சிறப்புகள்
தொகுநூலகம்[தொடர்பிழந்த இணைப்பு][4],
இந்தியன் வங்கி எ. டி. எம்,
அஞ்சல் அலுவலகம்[தொடர்பிழந்த இணைப்பு],
சமுதாயக்கூடம்,
கிராம நிர்வாக அலுவலகம்,
அரசு கால்நடை மருத்துவமனை,
தனியார் மருந்து வங்கிகள்,
புனித ஸ்நாபக அருளப்பர் திருமண மண்டபம்,
புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயம் (sjbc.000webhostapp.com).
தொழில்கள்
தொகுஆசிரியர்கள் அதிகம் உள்ள ஊர். வேளாண்மை (நெல், சோளம், கடலை, கம்பு, சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகள்) இவ்வூரில் முதல்நிலைத் தொழிலாகும். தொழிலாளர்கள் அதிகம் உள்ள ஊர்.
திருவிழாக்கள்
தொகு- ஆண்டுதோறும் சூன் 24 ஆம் தேதி அன்று புனித ஸ்நாபக அருளப்பர் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.
- தமிழ் மாதம் புரட்டாசி 14,15 ஆகிய தேதிகளில் வரும் வியாழக்கிழமை மாலையில் நல்லதம்பி ஐயா கல்லறைத் திருவிழா சமபந்தி அன்னதானத்தோடு நடைபெறுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Library". TN library.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)