பச்சை அலகு செம்பகம்

பச்சை அலகு செம்பகம் (Green-billed coucal-சென்ட்ரோபசு குளோரோரைங்கோசு) என்பது குக்குலியிடே குடும்பச் சிற்றினம் ஆகும். இது இலங்கையின் ஈர வலயத்தில் காணப்படும் அகணிய உயிரி. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது காடு அழிவு மற்றும் சிறிய இதன் எண்ணிக்கைக் காரணமாகக் குறைந்துள்ளது.[1] இது தென்மேற்கு இலங்கையின் உயரமான மழைக்காடுகளில் வாழ்கிறது. இங்குள்ள புதர்களில் கூடு கட்டுகிறது. இது 2-3 முட்டைகள் வரை இடும்.[2]

பச்சை அலகு செம்பகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. chlororhynchos
இருசொற் பெயரீடு
Centropus chlororhynchos
பிளைத், 1874

விளக்கம் தொகு

இது 43 செ.மீ. வரை வளரக்கூடிய நடுத்தர பறவை ஆகும். இதன் தலை மற்றும் உடல் ஊதா-கருப்பு நிறத்திலும், இறக்கையின் மேற்பகுதியில் அரக்கு நிறத்திலும் கீழ்ப்பகுதி கருப்பு நிறத்திலும், நீண்ட வால் அடர் பச்சை நிறத்திலும் காணப்படும். இதனுடைய அலகு ஒரு தனித்துவமான வெளிர் பச்சை நிறத்திலிருக்கும். ஆண் பெண் பறவைகள் ஒரே மாதிரியானவை. ஆனால் இளம் பறவைகள் மந்தமான மற்றும் கோடுகளுடன் காணப்படும். இது செம்போத்துவினை விடச் சற்றே சிறியது. இத அடந்த வனப் பகுதிகளில் வாழ்வதால் இதனுடைய தனித்துவமான குரல் மூலமே இதனை இனங்காண இயலும். இது பரந்த அளவிலான பூச்சிகள், கம்பளிப்பூச்சிகள் மற்றும் சிறிய முதுகெலும்பி உயிரிகளை உண்கிறது. இவற்றிற்கு நத்தைகள் மிகவும் பிடித்தவை.

கலாச்சாரத்தில் தொகு

இலங்கையில், இந்தப் பறவை சிங்கள மொழியில்பாடா அட்டி-குகுல அல்லது வால் அட்டி-குகுலா என்று அழைக்கப்படுகிறது.[3] இந்த பறவை 20 ரூபாய் இலங்கை தபால் தலையில் தோன்றுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_அலகு_செம்பகம்&oldid=3636458" இலிருந்து மீள்விக்கப்பட்டது