பதூம்
பதூம் அல்லது பதம் (Padum Or Padam) இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் ஒன்றிய பகுதியின் கார்கில் மாவட்டத்தின் சன்ஸ்கார் வருவாய் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இவ்வூர் சன்ஸ்கார் மலைத்தொடரில் 3669 மீட்டர் உயரத்தில் உள்ளது. திபெத்திய பௌத்த மதகுருவான பத்மசாம்பவர் பெயரில் இந்த ஊருக்கு பதூம் அல்லது பதம் எனப்பெயரிட்டனர். இது கார்கில் நகரத்திற்கு தென்கிழக்கே 230.7 கிலோ மீட்டர் தொலைவிலு; லே நகரத்திற்கு தென்மேற்கே 445.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பதூம் நகரத்திலிருந்து லே செல்ல கார்கில் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டும். தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் தார்ச்சாவிலிருந்து நேரடியாக லே நகரத்திற்கு செல்ல சாலை நிறுவப்பட்டு வருகிறது.
பதும்
பதம் | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ladakh" does not exist. | |
ஆள்கூறுகள்: 33°27′50″N 76°52′43″E / 33.46389°N 76.87861°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | கார்கில் மாவட்டம் |
வட்டம் | சன்ஸ்கார் |
அரசு | |
• வகை | மாவட்ட தன்னாட்சி நிர்வாகக் குழு |
• நிர்வாகம் | கார்கில் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு |
ஏற்றம் | 3,669 m (12,037 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,550 |
மொழிகள் | |
• அலுவல் மொழிள் | லடாக்கிய மொழி, திபெத்திய மொழி, இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 194302 |
வாகனப் பதிவு | LA 01 XXXX |
இணையதளம் | http://www.kargil.nic.in/ |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 261 குடும்பங்கள் கொண்ட பதூம் ஊரின் மக்கள் தொகை 1,538 ஆகும். அதில் ஆண்கள் 808 மற்றும் பெண்கள் 730 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.72% ஆகவுள்ளனர்.[1]
போக்குவரத்து
தொகுஇமாச்சலப் பிரதேசத்திலிருந்து லே நகரம் செல்ல கார்கில் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரத்தைக் குறைக்க புதிதாக லே மாவட்டததின் நிம்குவிலிருந்து, இமாச்சலப் பிரதேசத்தின் லாகௌள்-ஸ்பீதி மாவட்டத்தின் தார்ச்சா வரை புதிய சாலை நிறுவப்படுகிறது.[2]இச்சாலைப் பணி 2023ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகுஆதார நூற்பட்டியல்
தொகு- Janet Rizvi. (1996). Ladakh: Crossroads of High Asia. Second Edition. Oxford University Press, Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564546-4.
- Osada et al. (2000). Mapping the Tibetan World. Yukiyasu Osada, Gavin Allwright, and Atsushi Kanamaru. Reprint: 2004. Kotan Publishing, Tokyo. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9701716-0-9.
- Schettler, Margaret & Rolf (1981). Kashmir, Ladakh & Zanskar. Lonely Planet Publications. South Yarra, Victoria, Australia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-908086-21-0.