பத்தினி
பத்தினி (Pattini சிங்களம் : පත්තිනි දෙවියෝ, தமிழ்: கண்ணகி அம்மன்), என்பது இலங்கை பௌத்த மற்றும் சிங்கள நாட்டுப்புறங்களில் இலங்கையின் காவல் தெய்வமாக கருதப்படும் தெய்வமாவார். இவரை இலங்கை தமிழ் இந்துக்களும் கண்ணகி அம்மான் என்ற பெயரில் வணங்குகிறார்கள். பிள்ளைப்பேறு மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் தெய்வமாக இவர் கருதப்படுகிறார். குறிப்பாக பெரியம்மை நோயிலிருந்து பாதுகாப்பவராக, சிங்கள மொழியில் தேவியங்கே லெட் ('தெய்வீக துன்பம்') என்று குறிப்பிடப்படுகிறது.
வரலாறு
தொகுஇரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட தமிழ் காவியமான சிலபபதிகாரத்தின் மைய கதாபாத்திரமான கண்ணகியே பத்தினி தேவி ஆவார். அதற்கு சில காலத்திற்குப் பிறகு, இவர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டார். இலங்கையில் கிரி அம்மா ('பால் தாய்') போன்ற முந்தைய தெய்வங்களை உளவாங்கிக் கொண்டார். பத்தினி தெய்வத்தை அறிமுகப்படுத்தியவராக வரலாற்று ஆசிரியர்களால் கி.பி 113 - 135 வரை இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர் முதலாம் கஜபாகு என குறிப்படப்படுகிறார். சில வரலாற்றாசிரியர்கள் கூற்றின்படி, கண்ணகிக்கு சேர மன்னனான சேரன் செங்குட்டுவன் ஒரு கோயிலை அமைத்தான் (இந்த சமயத்தில்தான பத்தினி தெய்வம் உருவாக்கப்பட்டார்) கோயிலில் கண்ணகியின் சிலையை நிறுவியபோது கஜபாகு மன்னரும் அப்போது அங்கு சென்றிருந்தார் என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
சடங்குகள்
தொகுபத்தினியை ஆண்டுதோறும் கருவுறுதல் சடங்குகளில் கௌரவிக்கப்படுகிறார்
- கம்மடுவா (கிராம மறுபிறப்பு) திருவிழாக்கள், இதன் போது இவரது கதை சொல்லப்படுகிறது.
- அன்கெலியா (கொம்பு விளையாட்டு), இதில் பிரித்தானிய விளையாட்டான உப்பீஸ் மற்றும் டவுனீஸைப் போலவே, மேல் மற்றும் கீழ் அணிகள் போட்டியிடுகின்றன.
- போராகேலியா (சண்டை விளையாட்டுகள்) இதன் போது இரு அணிகளும் ஒருவருக்கொருவர் தேங்காய்களை வீசுகின்றனர் .
பால்-தாய் அருளுதல்
தொகுசின்னம்மை, அம்மை போன்ற நோய்கள் கடவுளின் எளிய தண்டனைகள் என்று சிங்கள மக்கள் நம்புகிறார்கள். இந்த நோய்களில் இருந்து குணப்படுத்த அவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளின்போது பத்தினி தேவியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த நோயயால் பாதிக்கப்படுகையில், அவர்கள் இவருக்காக தானத்தை வைத்திருகிறார்கள். இது கிரி -அம்மா தானா (பால்-தாய் அளிக்கும் பிச்சை ) என்று அழைக்கப்படுகிறது.
இலங்கையில் பத்தினி கோயில்கள்
தொகுதேவாலயா / கோயில் | படம் | இடம் | மாவட்டம் | மாகாணம் | விளக்கம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
ஹால்பே பத்தினிக் கோயில் | ஹால்பே | பதுளை | ஊவா மாகாணம் | தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் | [1] | |
கபுலமுல்லா பத்தினி தேவாலயா | align = மையம் | align = மையம் | align = மையம் | நான்கு பெரிய பத்தினி கோயில்களில் இது ஒன்று ஆகும். இந்த தேவாலயமானது 1582 ஆம் ஆண்டில் முதலாம் ராஜசிங்க மன்னரால் கட்டபட்டது. இது கொழும்பு-ஹட்டன் சாலையில் அமைந்துள்ளது. அவிசாவெல்லாவிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. | ||
லிந்தமுல்லை பத்தினிக் கோயில் | லிண்டமுல்லா | பதுளை | ஊவா மாகாணம் | தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் | [2] | |
மதுவா பத்தினி தேவாலயா | align = மையம் | align = மையம் | align = மையம் | பத்தினி தேவாலயத்தின் திருவிழாவானது ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்ட் காலத்தில் நடைபெறும். | ||
மஹானுவர பத்தினி தேவாலயா | கண்டி | கண்டி | மத்திய | பத்தினி கோயில் ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்கு அருகில் நாதா தேவாலேவின் மேற்கே அமைந்துள்ளது. | ||
நவகமுவ பத்தினிக் கோயில் | நவகமுவ | கொழும்பு | மேற்கு | தொன்மக் கதையின்படி அனுராதபுர மன்னர் முதலாம் கஜபாகு (கி.பி. 114 - 136) இந்தியாவில் இருந்து 12,000 கைதிகளோடு வந்தார். அவ்வாரு அவர் வரும்போது அவருடன் பத்தினியின் ஒரு சிலம்பையும் உடன் கொண்டுவந்தார். அப்படி வரும்போது, அவர் தேவலாயாவுக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் வந்து இறங்கினார். தேவாலத்தில் சிலம்பு வைக்கபட்டு தேவாயம் கட்டப்பட்டது. | [3][4] |
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Ella Halpe Pattini Devalaya". தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை. Archived from the original on 27 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 March 2018.
- ↑ "Gazette". இலங்கை அரச வர்த்தமானி 1401. 8 July 2005.
- ↑ "Nawagamuwa Devalaya - Dedicated to goddess Pattini". http://archives.sundayobserver.lk/2011/04/17/fea28.asp. பார்த்த நாள்: 11 March 2018.
- ↑ Nawagamuwa Pattini Devalaya (Sri Sugathabimbaramaya) Retrieved 11 March 2018.
மேலும் படிக்க
தொகு- Bastin, Rohan (December 2002). The Domain of Constant Excess: Plural Worship at the Munnesvaram Temples in Sri Lanka. Berghahn Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57181-252-0.
- Obeyesekera, Gananath (1984). The Cult of the Goddess Pattini. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-61602-9.